Author: Six Side Media

  • அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இளையராஜாவுக்கு கிடைத்த கௌரவம்

    அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இளையராஜாவிற்கு, சிறப்பு தபால் தலை வெளியிட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். 1976 ஆம் ஆண்டில் அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, மொத்தமாக 1500 க்கும் மேற்பட்ட படங்களில், சுமார் 7,000 மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜா கடந்த சில மாதங்களாக, வெளிநாடுகளில் இசை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் அவுஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சி நடத்தி வரும் நிலையில், முதல் நிகழ்ச்சி செப்டம்பர் 19 ஆம் திகதி மெல்போர்னில் நடைபெற்றுள்ளது. செப்டம்பர் 24 ஆம்…

  • ஆல்பர்ட்டா மாகாணம் சுதந்திரம் பெறும் விவகாரம்: 610,000ஐ தாண்டிய தபால் வாக்குகள்

    கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணம் பிரியும் விவகாரம் தொடர்பில் வந்துள்ள தபால் வாக்குகளின் எண்ணிக்கை 610,000 ஐத் தாண்டியுள்ளது. கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணம் பிரியும் விவகாரம் தொடர்பில் அடுத்த மாதம் பொது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொது வாக்கெடுப்பு தொடர்பில் வந்துள்ள தபால் வாக்குகளின் எண்ணிக்கை 610,000ஐத் தாண்டியுள்ளதாக ஆல்பர்ட்டா தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமையிலிருந்து வந்துள்ள தபால் வாக்குகளின் எண்ணிக்கை சுமார் 90,000 அதிகரித்துள்ள நிலையில், அக்டோபர் 19 அன்று நடைபெறவிருக்கும்…

  • ஐ.நா. பொதுச்சபையில் Instagram reels பார்த்துக்கொண்டிருந்த சிரியா ஜனாதிபதி

    ஐ.நா. பொதுச்சபையில் சிரியா ஜனாதிபதி Instagram reels பார்த்துக்கொண்டிருந்த வீடியோ வைரலாகிவருகிறது. நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA) கூட்டத்தில், சிரியா ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷரா (Ahmed al-Sharaa), துருக்கி ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) உரையாற்றும் நேரத்தில் தனது கைப்பேசியில் Instagram-இல் வீடியோக்களை (Reels) ஸ்க்ரோல் செய்த காட்சி கமெராவில் பதிவானது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. பலரும், இது மிகவும் தங்களுடன் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய (relatable)…

  • எனது நாடு கனடா; இலங்கை அல்ல தமிழ் ஈழப்பெண் அடையாளத்தையே விரும்புகிறேன் – இளம் நடிகை

    கனடாவைச் சேர்ந்த நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன், தன்னை தமிழ் ஈழப்பெண் என்று அடையாளப்படுத்தவே விரும்புவதாக தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் என்பதற்கு பதிலாக தமிழ் ஈழப்பெண் என்ற அடையாளத்தையே விரும்புகிறேன் என கனடாவைச் சேர்ந்த நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. நெவர் ஹேவ் ஐ எவர், தி பாய்ஸ் தொடர்களிலும், ஃப்ரீகியர் ஃப்ரைடே மற்றும் நெட்பிலிக்சில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள ‘பெஸ்ட் ஆப் பெஸ்ட்’ திரைப்படங்களில் நடித்தவர் மைத்ரேயி ராமகிருஷ்ணன். 24 வயது நடிகையான இவர் கனடாவின்…

  • கிளிநொச்சியில் மற்றுமோர் சோழன் உலக சாதனை நிகழ்வு

    ​கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி பயிலும், பிரஷாந்தினி நர்த்தனாலயத்தின் பரதநாட்டிய மாணவி செல்வி பி.எல். றெஜிஸ் றெஜிஸ்ரிகாவின் சோழன் உலக சாதனை பரதநாட்டிய நிகழ்வு கிளிநொச்சி, கே.கே மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. ​றெஜிஸ் றெஜிஸ்ரிகா தனது 9 ஆவது வயதில் தொடர்ச்சியாக ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக பரதநாட்டியம் ஆடி, சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இது இவரது 3 ஆவது உலக சாதனையாக அமைந்துள்ளது. ​இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்…

  • அனோஜன் விவகாரத்தில் மோடியின் தலையீடு கோரி இந்திய தூதுவரிடம் மனோ கோரிக்கை

    சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் விவகாரத்தில், இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக சவூதி அரசாங்கத்தை அணுகி கோரிக்கை விடுத்த பின்னர், இந்திய அரசாங்கம் தனது முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் இன்று இந்தியத் தூதுவரை சந்தித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி தலையீட்டை கோரி இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக…

  • வடகொரியா மறுபடியும் ஒரு புதிய ஏவுகணையை சோதித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வடகொரியா மறுபடியும் ஒரு புதிய ஏவுகணையை சோதித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… இந்த முறை சாதாரண ஏவுகணை இல்லை. ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் செல்லக்கூடியதாக கூறப்படும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இந்த சோதனையை அதிபர் கிம் ஜாங் உன் தனது மகள் கிம் ஜூ ஏவுடன் நேரிலேயே சென்று பார்வையிட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 20-ம் தேதி கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள வான்சான் பகுதியிலிருந்து 2 ஏவுகணைகள்…

  • ‘பெருமையால் அழுகிறேன்..!’- புற்றுநோயை வென்று கதாநாயகியான வளர்ப்பு மகள்; நெகிழ்ந்த விவேக் ஓபராய்

    பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயால் சிறுவயதில் தத்தெடுக்கப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சஹாரா ஷா தற்போது அதில் இருந்து மீண்டு வந்து தனது முதல் நேபாளி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தன் வளர்ப்பு மகளின் இந்த வளர்ச்சியைக் கண்டு எமோஷனலாகப் பேசியிருக்கும் விவேக் ஓபராய், “இது எனக்கு மிகவும் பெருமையான ஒரு தருணம். உன் திரையுலகப் பயணத்தில் நீ உச்சியைத் தொட வேண்டும் என்று விரும்புகிறேன். கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும். நீ ஒரு வெற்றியாளர் என்பதை எப்போதும்…

  • மட்டக்களப்பு மாங்கேணியில் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்

    மட்டக்களப்பு, வாகரை மாங்கேணி பகுதியில் தியாகதீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தலின் 9ஆம் நாள் நிகழ்வு இன்று (23) இடம்பெற்றுள்ளது. போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வாகரைப் பிரதேச செயற்பாட்டாளர் ர. தயாகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், தமிழ்த் தேசிய செயற்பாட்டுக் குழுவினரும் இணைந்துகொண்டனர். நிகழ்வில் அருட்தந்தை, வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ். சுவேந்திரன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அ. அமலநாயகி, சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.…

  • மொத்த ஆசியாவையும் அலறவிட்ட வடகொரியா.. ஜப்பானில் மிரட்டலான சாதனை!

    ஜப்பானில் நடைபெற்று வந்த ஆசிய விளையாட்டு போட்டியில், வடகொரிய வீராங்கனை தங்கப்பதக்கம் பெற்றிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. சோத்துக்கே வழியில்லை.. கெடுபிடியான நாடு, ராணுவ ஆட்சி.. இப்படியெல்லாம் பேசப்பட்ட நாடுதான் தங்கம் பெற்று அசத்தியிருக்கிறது. வடகொரியா என்று சொன்னவுடன் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, சைட் கிராப் வெட்டப்பட்ட குட்டை மனிதரான கிம் ஜாங் உன்-தான். அதெல்லாம் ஒரு நாடே கிடையாது.. அங்கெல்லாம் மக்கள் எப்படிதான் வாழுறாங்களோ! என்று மொத்த உலகமும் பேசி வருகிறது. ஆனால் அங்கிருந்துதான்…