Author: Six Side Media
-
சீன அதிபரை புகழ்ந்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?
சீன அதிபர் XI ஜின்பிங்கை, டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், ’சிறந்த தலைவர்’ எனப் பாராட்டியுள்ளார். சீன அரசு தொலைக்காட்சியான CCTV-க்கு அளித்த பேட்டியில் மஸ்க் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார். Xi ஜின்பிங்கின் தலைமையின் கீழ் சீனா மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாக மஸ்க் கூறினார். சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டிய அவர், அந்நாட்டு மக்களின் சராசரி வாழ்க்கையில் தரமும் செழிப்பும் அதிகரித்திருப்பது தெரிகிறது எனத் தெரிவித்தார்.…
-
ஷார்ஜாவில் கொடூரம்.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட இந்தியரின் உடல்.. மனைவி, மகன் மாயம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் 9 துண்டுகளாக வெட்டப்பட்டுக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தக் கொலைக்குப் பிறகு அவரது மனைவியும், மகனும் ஷார்ஜாவை விட்டு வெளியேறி இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபூரைச் சேர்ந்தவர் ஆல்வின் பிரகாஷ் குந்தர் (38). இவர் கடந்த 14 ஆண்டுகளாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா விமான நிலையத்தில்…
-
அமெரிக்காவுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் – ஐ.நா. உரையில் ஈரான் ஜனாதிபதி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான சுமார் ஏழு மாதகால யுத்தத்தின் மத்தியில் ஈரான் ஒருபோதும் மண்டியிடாது என்றும், எனினும் மோதலுக்கு இராஜதந்திர தீர்வை எட்டத் தயார் என்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார். ஏதேனுமொரு உடன்பாட்டை எட்டத் தவறினால் இஸ்லாமியக் குடியரசை நிர்மூலமாக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலுக்குப் பதிலளித்த பெசெஷ்கியன், தடைகள், அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரானிய மக்களின் எதிர்ப்புறுதி மேலும் அதிகரிக்கும் என்பதை…
-
தீப்பிடித்த சுற்றுலா பஸ்; தூங்கிக்கொண்டிருந்த 9 பேர் பலியான சோகம்; ஜன்னல் வழியாகத் தப்பிய பயணிகள்
சுற்றுலா பஸ் ஒன்று நேற்று இரவு டெல்லி நொய்டாவில் இருந்து கிளம்பி உத்தரப்பிரதேசத்தில் உள்ள மஹோபா என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்தது. பஸ் கிரேட்டர் நொய்டாவில் யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஜெவார் விமான நிலையம் அருகில் இன்று அதிகாலையில் திடீரெனத் தீப்பிடித்துக்கொண்டது. அந்த நேரத்தில் அனைத்துப் பயணிகளும் உறக்கத்தில் இருந்தனர். இதனால் பயணிகளால் பஸ் தீப்பிடித்தவுடன் தப்பிக்க முடியவில்லை. இதனால் தீயில் கருகி 9 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல பயணிகள் பஸ்…
-
இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 24, 2026 வியாழன்
பஞ்சாங்கம் நாள் வியாழக்கிழமை திதி திரயோதசி இரவு 11.05 வரை பிறகு சதுர்த்தசி நட்சத்திரம் அவிட்டம் காலை 11.04 வரை பிறகு சதயம் யோகம் சித்தயோகம் காலை 11.04 வரை பிறகு மரணயோகம் ராகுகாலம் பகல் 1.30 முதல் 3 வரை எமகண்டம் காலை 6 முதல் 7.30 வரை நல்லநேரம் பகல் 10.45 முதல் 11.45 வரை சந்திராஷ்டமம் புனர்பூசம் காலை 11.04 வரை பிறகு பூசம் சூலம் மேற்கு பரிகாரம் தைலம் மேஷம் ராசி…
-
சவூதியைவிட்டு வெளியேறும் படைகள்? சிக்கலில் இத்தாலி!
மத்திய கிழக்கில் ஏற்கெனவே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஏமனின் ஹவுதி அமைப்பின் தாக்குதல்கள் பிராந்திய பாதுகாப்பு நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளன. சவூதி அரேபியாவில் ஹவுதிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இடைமறிக்கப்பட்ட ட்ரோனின் சிதைவுகள் சவூதி நகரப் பகுதியில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், காயமடைந்தவர்களில் சவூதி பெண் மற்றும் பாகிஸ்தான் நாட்டவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த குறிப்பிட்ட தாக்குதலுக்கு ஹவுதிகள் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. ஆனால், சவூதி அதிகாரிகள்…
-
22ஆவது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று போராட்டம்
“ஜனநாயகத்தைச் சூறையாடும் 22 வேண்டாம்” என்ற முழக்கத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (24) காலை 9.00 மணிக்கு பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் நடைபெறவுள்ளது. சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்த்து நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துமபண்டார அழைப்பு விடுத்துள்ளார். அதேவேளை, நிலவும் சர்ச்சைக்கிரிய சூழலைக் காரணம் காட்டி, இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதில்லை…
-
புத்தகம் வாசிப்பவர்களுக்கு பணம் வழங்கும் திட்டத்தை சிங்கப்பூர் அரசு முன்னெடுத்துள்ளது.
சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் ஸ்மார்ட் போனில் அதிக நேரங்களை செலவிடுவதால், வாசிப்பு பழக்கம் குறைந்து விட்டதாக கருதப்படுகிறது. இதனால் வாசிப்பு பழக்கத்தை மீட்டெடுக்க, வாசிப்பில் ஈடுபடுபவர்களுக்கு பணம் வழங்கும் திட்டத்தை சிங்கப்பூர் அரசு முன்னெடுத்துள்ளது. சிங்கப்பூரின் தேசிய நூலக வாரியம், இதற்காக 5 ஆண்டு கால தேசிய வாசிப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதிபெற ஒரு வாசிப்பு அமர்வு குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் நீடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு அமர்வு…
-
அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இளையராஜாவுக்கு கிடைத்த கௌரவம்
அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இளையராஜாவிற்கு, சிறப்பு தபால் தலை வெளியிட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். 1976 ஆம் ஆண்டில் அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, மொத்தமாக 1500 க்கும் மேற்பட்ட படங்களில், சுமார் 7,000 மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜா கடந்த சில மாதங்களாக, வெளிநாடுகளில் இசை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் அவுஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சி நடத்தி வரும் நிலையில், முதல் நிகழ்ச்சி செப்டம்பர் 19 ஆம் திகதி மெல்போர்னில் நடைபெற்றுள்ளது. செப்டம்பர் 24 ஆம்…
-
ஆல்பர்ட்டா மாகாணம் சுதந்திரம் பெறும் விவகாரம்: 610,000ஐ தாண்டிய தபால் வாக்குகள்
கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணம் பிரியும் விவகாரம் தொடர்பில் வந்துள்ள தபால் வாக்குகளின் எண்ணிக்கை 610,000 ஐத் தாண்டியுள்ளது. கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணம் பிரியும் விவகாரம் தொடர்பில் அடுத்த மாதம் பொது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொது வாக்கெடுப்பு தொடர்பில் வந்துள்ள தபால் வாக்குகளின் எண்ணிக்கை 610,000ஐத் தாண்டியுள்ளதாக ஆல்பர்ட்டா தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமையிலிருந்து வந்துள்ள தபால் வாக்குகளின் எண்ணிக்கை சுமார் 90,000 அதிகரித்துள்ள நிலையில், அக்டோபர் 19 அன்று நடைபெறவிருக்கும்…