Author: Six Side Media
-

உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஈரானின் அதிரடி முடிவு!
உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றமும் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல், டீசல், விலைகளும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக ஈரான் –…
-

வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம்- பிரபு எம்பி
கடந்த காலங்களில் அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியதாகவும் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லையென்று பல விடயங்களை எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருந்தார்கள். இன்று நாங்கள் அந்த விமர்சனங்களையும் தாண்டி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றது என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். கிராமிய பாதை அபிவிருத்தி திட்டம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயல் திட்டமானது நேற்றைய (21)தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து…
-

மத்திய கிழக்கில் ஏற்படவுள்ள பேரழிவு- இஸ்ரேலின் அதிரடி திட்டம் குறித்து எச்சரிக்கை
ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்று உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. புஷேர் அணுமின் நிலையத்தின் மீதான நேரடித் தாக்குதல், “மிக அதிக கதிரியக்க வெளியீட்டை” ஏற்படுத்தும் என்றும், இது ஆலையிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்குள் உள்ள மக்களைப் பாதிக்கும் என்றும் அணுசக்திக்கான சர்வதேச அமைப்பின் இயக்குனர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், புஷேர், ஈரானில் உள்ள அணுசக்தி தளம், அங்கு தாக்குதலின் விளைவுகள் மிகவும் தீவிரமாக இருக்கும். ஒரு…
-

நாமலை பழிதீர்க்க காத்திருந்தேன் ; நாடாளுமன்றில் உண்மையை உடைத்த அர்ச்சுனா
ஒரு காலத்தில் தனது அப்பாவைக் கொலை செய்த நாமல் ராஜபக்சவை கொலை செய்ய நினைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்தும் உரையாற்றுகையில், “எனது அப்பாவைக் கொலை செய்த நாமல் ராஜபக்சவை நான் கொலை செய்ய வேண்டும் என ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று போய் அழகாகக் கதைத்தேன். அந்தளவு பகை எனது இதயத்திலிருந்தது. நான் சிறுவயதாக…
-

500 கோடி ரூபா நட்டஈடு : இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கு உத்தரவு
கொச்சி டஸ்கர்ஸ் கேரளாவின் ஐபிஎல் உரிமையை நிறுத்தியதன் காரணமாக ஏற்பட்ட நிதியிழப்புக்கு நட்டஈட்டை வழங்கவேண்டும் என்று இந்திய கிரிக்கட்கட்டுப்பாட்டு சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொச்சி கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் மற்றும் ரெண்டெஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த கணிசமான இழப்பீட்டை வழங்குமாறு மும்பை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை குறித்த இரண்டு நிறுவனங்களுக்கும் 386 கோடி ரூபாய் மற்றும் 153 கோடி ரூபாய்களை செலுத்த வேண்டும். கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி 2011 இல் இந்தியன் பிரீமியர் லீக்கின்…
-

கழிவுப் பொருட்களுக்கு தீ வை வைப்பு :வீதியால் செல்லும் மக்கள் அவதி
மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையினர் கழிவுப் பொருட்களை சேகரித்து வருகின்றனர். குறித்த கழிவு சேகரிக்கும் பகுதிக்கு தொடர்ச்சியாக தீ வைத்து வருவதால் வீதியால் செல்லும் பயணிகளும் அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். அந்தவகையில் இன்றையதினம் குப்பை மேட்டுக்கு தீ வைத்ததன் மூலம் வெளியான புகை வீதியெங்தும் பரவியதால் வீதியால் செல்லும் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். மாநகர சபையின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து பல தடவைகள் செய்திகள் வெளியாகிய போதும் அவர்கள்…
-

அகமதாபாத் விபத்தையடுத்து விமான நிலையங்களைச் சுற்றியுள்ள கட்டடங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!
ஏர் இந்தியா விபத்துக்குப் பிறகு விமான பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக, விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள கட்டடங்களை நெறிப்படுத்தும் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம். கடந்த ஜூன் 12ம் தேதி போயிங் 787 விமானம் புறப்படுகையில் ஏற்பட்ட விபத்தினால் பிஜே மருத்துவ கல்லூரியில் விமானம் மோதியது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் மற்றும் மருத்துவமனை கட்டடத்திலிருந்த 38 பேர் என 279 மரணமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து…
-

இஸ்ரேலின் மோசாட் மற்றும் ராணுவ உளவுத்துறை தளங்களை நோக்கி ஈரானின் நேரடி ஏவுகணை தாக்குதல்: மத்திய கிழக்கில் புதிய சுழற்சி
ஒரு வியத்தகு மற்றும் முன்னெப்போதும் இல்லாத முறையில், ஈரான் இஸ்ரேலின் புலனாய்வு மற்றும் இராணுவ உள்கட்டமைப்பின் மையத்தைத் தாக்கி, அதைத் தகர்ப்பதற்காக கணக்கிடப்பட்ட மற்றும் உயர் தாக்கம் கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. “ஆபரேஷன் உண்மையான வாக்குறுதி III” எனப்படும் இந்த தாக்குதல், ஈரான் இஸ்ரேலை எதிர்கொண்டு நடத்திய மிகத் துணிச்சலான நேரடி இராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாகும். இந்த தாக்குதலின் மைய இலக்குகளாக இருந்தவை இஸ்ரேலின் மோசாத் தலைமையகம் (ஹெர்ஸ்லியாவில் அமைந்துள்ளது) மற்றும் கிளிலோட்டில் உள்ள IDF-இன்…
-

அடுத்த உலகப்போருக்குத் திசைமாற்றப்படும் உலகம்: ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா – மற்றும் உலகளாவிய மோதலின் நிழல்
முன்னுரை: உலகம் போரின் பக்கம் சாய்கிறது மத்திய கிழக்கு மீண்டும் உலகளாவிய கவலையின் மையமாக உள்ளது. ஆனால் இந்த முறை, இந்த பதற்றம் வெறும் ஒரு பிராந்திய மோதலைக் குறிக்கவில்லை. தற்போதைய அமெரிக்க இராணுவ நகர்வுகளின் அளவு, நோக்கம் மற்றும் கட்டமைப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெரும் போருக்கான தயாரிப்பைக் காட்டுகிறது. ஈரான்-இஸ்ரேல் பகைமையின் அச்சில் மையமாக, ஐரோப்பா, மத்தியதரைக் கடல் மற்றும் பாரசீக வளைகுடா வரை பரவியுள்ள அமெரிக்காவின் இராணுவ நிலைப்பாடு, வாஷிங்டன் ஒரு…
-

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்க அரசாங்கம் தீர்மானம்
பாராளுமன்ற ஓய்வூதிய சட்டங்களை இரத்து செய்வதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதி உரித்துக்கள் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டங்களை இரத்துச் செய்வதற்கு இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ள ‘வளமான நாடு – அழகான வாழ்வு’ கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிமாருக்கும் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள விசேட சிறப்புரிமைளை இரத்துச் செய்வதற்காகவும்,…