Author: Six Side Media

  • வெடிகுண்டு மிரட்டல் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம்

    வெடிகுண்டு மிரட்டல் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம்

    கொச்சியில் இருந்து டெல்லிக்கு (Delhi) புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து விமானம் அவசரமாக நாக்பூரில் தரையிறக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விமானத்தை சோதனையிடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சமீப காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. அந்தவகையில், ஜெர்மனியின் பிராங்க்புட் விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் நோக்கி புறப்பட்ட ‘லுப்தான்சா’ நிறுவனத்தின் போயிங் 787-9 டிரீம்லைனர் ரக விமானத்திற்கு வெடிகுண்டு…

  • இந்திய தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவது குறித்ததான கலந்துரையாடல்

    இந்திய தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவது குறித்ததான கலந்துரையாடல்

    வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயனுக்கும் இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனம் (ஒஃபர் சிலோன்) மற்றும் Acted நிறுவன உத்தியோகத்தர்களுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது நேற்று (16) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு அது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த ஆண்டு தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் தெரிவிக்கப்பட்டு அதற்கான ஏது நிலைகள்…

  • ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை!

    ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை!

    ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 220 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளும் தொடர்ந்தும் ஐந்தாவது நாளாக இன்றும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில், ஈரானிய இராணுவ தளபதிகளில் ஒருவரான அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். மேலும், ஈரானின் இராணுவம் மற்றும் அணுசக்தி நிலையங்களுக்கு இஸ்ரேல் ஏற்படுத்திய சேதங்களைக் காட்டும் வகையிலான…

  • இஸ்ரேலுக்கு செல்லவுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

    இஸ்ரேலுக்கு செல்லவுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

    இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிலைமையைப் பொறுத்து மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். மத்திய கிழக்குபிராந்தியத்தில் நிலவும் பதட்டமான சூழ்நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அந்தந்த நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் தேவையான நேரடி தலையீட்டை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களின் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் அந்தந்த நாடுகளின்…

  • மீண்டும் இஸ்ரேலை நோக்கி ஈரானிய ஏவுகணைகள்!

    மீண்டும் இஸ்ரேலை நோக்கி ஈரானிய ஏவுகணைகள்!

    இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் குறித்த தாக்குதலைத் தடுக்க இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக இஸ்ரேலிய இராணுவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அறிவிப்பு வரும் வரை குடிமக்கள் தங்குமிடங்களுக்குள் நுழைந்து அங்கேயே இருக்குமாறும் இஸ்ரேலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்கு முன்னர், ஈரானிய அரச ஊடகம் மீது இஸ்ரேல் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. ஈரான் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து, ஹைஃபா பகுதியிலும் வடக்கு இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒலிப்பதாக…

  • யாழில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை!

    யாழில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை!

    யாழ். மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகள் மீண்டும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்களதும், தனியாரதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுவருவதாக கூறப்படுகிறது. இதேவேளை எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்களே எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் ஒன்றுகூடி நின்று எரிபொருளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு மாகாண…

  • சீரற்ற காலநிலை! அடுத்த 24 மணி நேரத்திற்கு  சிவப்பு எச்சரிக்கை

    சீரற்ற காலநிலை! அடுத்த 24 மணி நேரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை

    புத்தளம் (Puttalam) முதல் மன்னார், காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (16) பிற்பகல் 2.30 மணி வரையில், பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு சுமார் 60 முதல் 70 கி.மீ வேகத்தில் வீசும் எனவும், கடற்பரப்புகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக…

  • மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை: அமைச்சர் ஹன்சக விஜேமுனி உறுதி

    மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை: அமைச்சர் ஹன்சக விஜேமுனி உறுதி

    அரச மருத்துவமனைகளில் பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை என்று, பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி, பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார். நாட்டில் தற்போது மருந்துப் பற்றாக்குறை நிலவுவதாக வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, அவர் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளுக்கான அத்தியாவசிய மருந்துகள் இடையூறு இல்லாமல் கிடைக்கின்றன என்றும், அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், சில மருந்துகள் தொடர்ச்சியான விநியோகச் சங்கிலி சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை அவர் ஒப்புக்…

  • யாழில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!

    யாழில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!

    யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று(14) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில்,  மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 2 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை யாழ்ப்பாணம் பொலிஸ்…

  • மின்கட்டண அதிகரிப்பு நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும்- எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    மின்கட்டண அதிகரிப்பு நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும்- எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    மின்சாரக் கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிப்பது மக்கள் வழங்கிய ஆணையை காட்டிக் கொடுக்கும் செயலாகும். இது மக்கள் ஆணைக்கு இழைக்கப்படும் துரோகமுமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு எதிர்க்கட்சி தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும்   குறிப்பிட்டுள்ளதாவது   : மின்சாரக் கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை மின்சார சபையும், அரசாங்கமும் முன்வைத்த முன்மொழிவின் அடிப்படையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.…