Author: Six Side Media

  • திருகோணமலை-தோப்பூரில் காட்டு யானைகளின் அட்டகாசம்!

    திருகோணமலை-தோப்பூரில் காட்டு யானைகளின் அட்டகாசம்!

    திருகோணமலை, தோப்பூர் -செல்வநகர் கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பயன் தரும் தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளன. இதன்போது காய்த்து பலன்தரக் கூடிய சுமார் 10 தென்னை மரங்கள் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஊருக்குள் வந்து காட்டு யானைகள் இவ்வாறு சேதம் விளைவித்துள்ளமையால் ஊருக்குள் இருக்கின்ற மக்களும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை காணப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். காட்டு யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தோப்பூர் -செல்வநகர்…

  • காணி பிடிப்பு வர்த்தமானி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

    காணி பிடிப்பு வர்த்தமானி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

    காணி நிர்ணய சட்டம் பிரிவு 4இற்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 28.03.2025 திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி M. A. சுமந்திரன் தாக்கல் செய்த மனு இன்று(28) விசாரிக்கப்பட்ட பின்னர் குறித்த வர்த்தமானியை தற்காலிகமாக வலிதற்றதாக்கும் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதற்கிடையில் குறித்த வர்த்தமானியை மீள கைவாங்குவதற்கான வர்த்தமானியை அரசாங்கம்…

  • மாந்திரீக தடை சட்டத்தை அமல்படுத்த ஐகோர்ட்டில் கேரள அரசு மறுப்பு

    மாந்திரீக தடை சட்டத்தை அமல்படுத்த ஐகோர்ட்டில் கேரள அரசு மறுப்பு

    கொச்சி : ‘கேரளாவில், மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்ற நடவடிக்கைகளை தடைசெய்யும் சட்டத்தை நடைமுறைப்படுத்த போவதில்லை’ என, உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில், மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்ற நடவடிக்கைகளால் தொடர் உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதை தடுக்கும் நோக்கில், ‘மாந்திரீகம், பில்லி, சூனியம் தடுப்பு மற்றும் ஒழிப்பு மசோதா’வை, சட்ட சீர்திருத்த கமிஷன், 2022ல் பரிந்துரைத்தது. இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது என கேரள அரசு பின்வாங்கியது. இது தொடர்பாக, யுக்திவாடி…

  • இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை

    இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை

    இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதல்களின் காரணமாக ஈரானில் சுமார் 610 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான் சுகாதார அமைச்சு இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 13ம் திகதி முதல் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த தாக்குதல்களின் காரணமாக 610 பேர் கொல்லப்பட்டதாகவும் இதில் 49 பெண்களும், 13 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல்களில் 4746 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் இதில் 185 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் தாக்குதல்களில் 5 சுகாதாரப்…

  • யாழில் திடீரென சுழற்றி அடித்த காற்று!

    யாழில் திடீரென சுழற்றி அடித்த காற்று!

    யாழ்ப்பாணத்தில் காலநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு பல பிரதேசங்களில் சற்று முன்னர் பாரிய சுழல் காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது திடீரென சுழற்றி அடித்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. தற்போது இடி மழையுடன் பலத்த காற்று ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது இதேவேளை பாரிய காற்றினால் மின்சாரம் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மரங்கள் முறிந்து விழுந்து சேதம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மின்சார சபையை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  • யாழில் நிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சி! ; சோகத்துடன் வெளியேறிய பாடகர்கள்!

    யாழில் நிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சி! ; சோகத்துடன் வெளியேறிய பாடகர்கள்!

    யாழ்ப்பாணத்தில் இன்று திடீரென பாரிய சுழல் காற்றுடன் மழை பெய்தததால் சரிகமப இசைக்குழுவினர் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சி நிறுவனத்தின் சரிகமப இசைக்குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். ஜீ தமிழ் தொலைக்காட்சி இடம்பெற்று வரும் சரிகமப இசை நிகழ்ச்சியானது சீனியர், யூனியர் என்ற ரீதியில் தொடர்சியாக இடம்பெற்று உலகளவில் அனைவரையும் கவர்ந்து வருகின்றது. இந்த நிலையில், பிரம்மாண்ட இசைநிகழ்ச்சியொன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட நிலையிலேயே சரிகமப இசைக்குழுவினர் பலாலி விமான…

  • உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஈரானின் அதிரடி முடிவு!

    உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஈரானின் அதிரடி முடிவு!

    உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றமும் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல், டீசல், விலைகளும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக ஈரான் –…

  • வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம்- பிரபு எம்பி

    வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம்- பிரபு எம்பி

    கடந்த காலங்களில் அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியதாகவும் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லையென்று பல விடயங்களை எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருந்தார்கள். இன்று நாங்கள் அந்த விமர்சனங்களையும் தாண்டி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றது என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.  கிராமிய பாதை அபிவிருத்தி திட்டம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயல் திட்டமானது நேற்றைய (21)தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து…

  • மத்திய கிழக்கில் ஏற்படவுள்ள பேரழிவு- இஸ்ரேலின் அதிரடி திட்டம் குறித்து எச்சரிக்கை

    மத்திய கிழக்கில் ஏற்படவுள்ள பேரழிவு- இஸ்ரேலின் அதிரடி திட்டம் குறித்து எச்சரிக்கை

    ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்று உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. புஷேர் அணுமின் நிலையத்தின் மீதான நேரடித் தாக்குதல், “மிக அதிக கதிரியக்க வெளியீட்டை” ஏற்படுத்தும் என்றும், இது ஆலையிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்குள் உள்ள மக்களைப் பாதிக்கும் என்றும் அணுசக்திக்கான சர்வதேச அமைப்பின் இயக்குனர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், புஷேர், ஈரானில் உள்ள அணுசக்தி தளம், அங்கு தாக்குதலின் விளைவுகள் மிகவும் தீவிரமாக இருக்கும். ஒரு…

  • நாமலை பழிதீர்க்க காத்திருந்தேன் ; நாடாளுமன்றில் உண்மையை உடைத்த அர்ச்சுனா

    நாமலை பழிதீர்க்க காத்திருந்தேன் ; நாடாளுமன்றில் உண்மையை உடைத்த அர்ச்சுனா

    ஒரு காலத்தில் தனது அப்பாவைக் கொலை செய்த நாமல் ராஜபக்சவை கொலை செய்ய நினைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்தும் உரையாற்றுகையில், “எனது அப்பாவைக் கொலை செய்த நாமல் ராஜபக்சவை நான் கொலை செய்ய வேண்டும் என ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று போய் அழகாகக் கதைத்தேன். அந்தளவு பகை எனது இதயத்திலிருந்தது. நான் சிறுவயதாக…