Author: Six Side Media
-
பயங்கரவாதத் தடைச்சட்டம் விரைவில் நீக்கப்படும் – நீதி அமைச்சர்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விரைவில் நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சற்றுமுன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பல தசாப்த கால பழமையான சட்டத்தை ஒழிப்பதற்கான தீர்க்கமான நடவடிக்கையாக, புதிய சட்டமூலம் ஏற்கனவே அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். ‘புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒழிக்கப்படும்’ என அமைச்சர் உறுதிப்படுத்தினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் இன்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் சம்பந்தப்பட்ட…
-
ஹோமாகம தீ விபத்து – ஐவர் உயிரிழப்பு
ஹோமாகம – கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (21) காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தீப்பரவலை கட்டுப்படுத்த கோட்டை மற்றும் தெஹிவளை மாநகர சபைகளிலிருந்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டிருந்தன. தீயணைப்பு நடவடிக்கைகளின் பின்னர், குறித்த தொழிற்சாலையிலிருந்து ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்படும் போது 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொழிற்சாலையின் உள்ளே…
-
பெருவில் இரட்டை நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த ஜூலை 18 சனிக்கிழமை இரவு அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். பெருவின் தலைநகரான லிமாவிற்கு கிழக்கே அமைந்துள்ள ஜுனின் பிராந்தியத்தின் சுபாகா மாகாணத்தில் இந்த நிலநடுக்கங்கள் மையம்கொண்டிருந்தன.குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவானது. இது பூமியின் அடியில் சுமார் 24 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. சில மணி நேர இடைவெளியில் இரண்டாவது நிலநடுக்கமானது ரிக்டர்…
-
கனடா பொருட்களுக்கு 50 சதவீத வரி – ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நிர்வாகம், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பரந்த அளவிலான பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் சுங்கவரியை விதிப்பதாக அறிவித்துள்ளது. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வ உத்தரவு, இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் வர்த்தகப் போரின் மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது அமெரிக்காவின் மோட்டார் வாகனங்கள், வாகனப் பாகங்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் ஆகியவற்றுக்கு எதிராக கனடா அரசு நியாயமற்ற முறையிலும், பாகுபாட்டுடனும் வரிகளை விதித்து அமெரிக்க வர்த்தகத்தைப்…
-
உக்ரைன் சரக்குக் கப்பல் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்- 10 பேர் உயிரிழப்பு
உக்ரைன் சரக்குக் கப்பல் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 4 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து சோளம் ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. கோல்டன் லியோ வணிகக் கப்பல் மீது ரஷ்யா 3 ‘க்ரூஸ்’ ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதேவேளை, கப்பலில் இருந்த 17 மாலுமிகளுள் 8 பேர் மீட்கப்பட்டதுடன், படுகாயமடைந்த மற்றொரு இந்தியர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வணிகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள்…
-
உலகக் கோப்பையில் லமின் யமாலைவிட அதிகம் வைரலான இந்த குட்டி பையன் யார் தெரியுமா?
மைதானத்தின் பெரிய திரையில் கை அசைத்து, நாக்கை நீட்டி சேட்டை செய்த கெய்னைப் பார்த்து, லமின் யமாலும் அவரது சக வீரர்களும் சிரித்த தருணமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அர்ஜென்டினாவை 1-0 என்ற Goal கணக்கில் வீழ்த்தி, இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்றிருக்கிறது ஸ்பெயின். இன்று சமூக வலைதளங்கள் முழுவதும் ஸ்பெயினின் வெற்றிதான் பேசுபொருளாக இருந்தாலும், அதே அளவுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இன்னொரு பெயரும் இருக்கிறது. அது லமின் யமால்…
-
நாமல் ராஜபக்ஷ மலேசியா மற்றும் சிங்கப்பூரிற்கு பயணம்
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹின் மகளின் திருமண விழா, ஜூலை 2026 இல் மாலைதீவில் உள்ள ஒரு ஆடம்பரமான உல்லாச விடுதியில் நடைபெற்றது. இத்திருமண நிகழ்வில் பல்வேறு சர்வதேச முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, இலங்கையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச மற்றும் அவரது மனைவி லிமினி ராஜபக்ச ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். மாலைதீவில் உள்ள ஒரு புகழ்பெற்ற சொகுசு தீவு உல்லாச விடுதியில்…
-
டெல்லியில் நாடாளுமன்றம் முற்றுகை – பிரதமர் மோடி அவசரமாக வெளியேற்றம்
டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி ‘ காக்ரோச் ஜனதா கட்சி’ நடத்திய பிரம்மாண்ட போராட்டப் பேரணி காரணமாக, பிரதமர் நரேந்திர மோடியின் வாகன அணிவகுப்பு நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், நீட் (Neet) தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்திற்கு மிக அருகில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டு முழக்கங்களை எழுப்பியதை அடுத்து, பலத்த பாதுகாப்புடன் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தை விட்டுப் புறப்பட்டார். அசம்பாவிதங்களைத்…
-
பிரித்தானியாவின் 59ஆவது பிரதமரானார் எண்டி பர்ன்ஹாம்!
தொழிற்கட்சித் தலைவராக இருந்த சர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்ள்ஸை சந்தித்த ஆண்டி பர்ன்ஹாம், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான மன்னரின் அழைப்பை ஏற்று நாட்டின் புதிய பிரதமரானார். எண்டி பர்ன்ஹாம் பிரதமராக நியமிக்கப்பட்டதை உறுதிபடுத்தி பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், ‘மன்னர், கௌரவத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் எண்டி பர்ன்ஹாமைச் சந்தித்து, புதிய நிர்வாகத்தை அமைக்குமாறு கோரினார். மன்னரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட எண்டி பர்ன்ஹாம், பிரதமர்…
-
இலங்கையின் புதிய கடற்படைத் தளபதி – ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு
இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றமைக்காக, கடற்படைத் தளபதிக்கு ஜனாதிபதியின் செயலாளர் தனது வாழ்த்துகளை இதன்போது தெரிவித்துள்ளார். இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில், கடற்படைத் தளபதியினால் ஜனாதிபதியின் செயலாளருக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டுள்ளது.