Author: Six Side Media

  • பிரித்தானியாவின் 59ஆவது பிரதமரானார் எண்டி பர்ன்ஹாம்!

    தொழிற்கட்சித் தலைவராக இருந்த சர் கீர் ஸ்டார்மர்  தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்ள்ஸை  சந்தித்த ஆண்டி பர்ன்ஹாம், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான மன்னரின் அழைப்பை ஏற்று நாட்டின் புதிய பிரதமரானார். எண்டி பர்ன்ஹாம் பிரதமராக நியமிக்கப்பட்டதை உறுதிபடுத்தி பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், ‘மன்னர், கௌரவத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் எண்டி பர்ன்ஹாமைச் சந்தித்து, புதிய நிர்வாகத்தை அமைக்குமாறு கோரினார். மன்னரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட எண்டி பர்ன்ஹாம், பிரதமர்…

  • இலங்கையின் புதிய கடற்படைத் தளபதி – ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு

    இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றமைக்காக, கடற்படைத் தளபதிக்கு ஜனாதிபதியின் செயலாளர் தனது வாழ்த்துகளை இதன்போது தெரிவித்துள்ளார். இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில், கடற்படைத் தளபதியினால் ஜனாதிபதியின் செயலாளருக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டுள்ளது.

  • ஐ.ம.சக்திக்கும் ஐ.தே.கட்சிக்கும் சரியான தலைமைத்துவம் தேவை

    புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் தலைமைத்துவம் தேவை எனத் தெரிவித்தார். கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவி கருணாநாயக்க இதனைக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்றாலும், அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விவசாயிகளையும், நுகர்வோரையும் திருப்திப்படுத்தும் விதம் குறித்து அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தில் சிந்திக்க வேண்டும் என கருணாநாயக்க குறிப்பிட்டார். நாடு ஒரு தீர்க்கமான கட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகக்…

  • ஈரானில் திடீரென மோசமான நிலைமை: இந்தியர்களிற்கு எச்சரிக்கை

    ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்திய மத்திய அரசு இந்திய மக்களுக்கு இன்று முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளது. இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு செல்ல வேண்டாம். ஈரானில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அவசர வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரான் – அமெரிக்கா இடையே தற்போது நாளுக்கு நாள் மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில…

  • இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல்!

    இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசியான ‘கியூடெங்கா’வுக்கு (QDENGA) இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு பணிப்பாளர் நாயகம், சந்தைப்படுத்தல் ஒப்புதலை வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தாகேடா பயோபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தத் தடுப்பூசியை, 4 முதல் 60 வயதுடையவர்களுக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்படாதவர்களுக்கும் இந்தத் தடுப்பூசியைச் செலுத்த முடியும் என்பதால், தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னர் பரிசோதனைகள் எதுவும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது 3 மாத இடைவெளியில் 0.5 மில்லிலீற்றர் அளவு கொண்ட…

  • அப்பிள், கூகுள் எடுத்த அதிரடி முடிவு!

    அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகராட்சி, நிழற்படங்களை டிஜிட்டல் முறையில் மாற்றி நபர்களை நிர்வாணமாகக் காட்டும் திறன் கொண்ட ‘Nudify’ செயலிகளை தங்களது செயலி அங்காடிகளில் (App Store) இருந்து நீக்குமாறு அப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. காலிஃபோர்னியா மாநில சட்டத்தின்படி, ஒருவரின் அனுமதியின்றி Deepfake ஆபாச படங்கள் உருவாக்கப்படுவதையோ அல்லது அதனை ஊக்குவிப்பதையோ குற்றமாகக் கருதுகிறது. மேலும், 2025 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் மூன்றாம் தரப்பினருக்கு எதிராக வழக்குத் தொடரும்…

  • மூலிகை விதைகளை உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்ப்பு

    திருகோணமலை, கந்தளாய் பகுதியில் ஒருவகை நச்சு விதையை உட்கொண்டமையால் சுகவீனமடைந்த பாடசாலை மாணவர்கள் 22 பேர் வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தரம் 06 இல் கல்வி பயிலும் 22 மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆமணக்கு விதையை குறித்த மாணவர்கள் உட்கொண்டிருக்கலாம் எனவும் ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர் குறித்த 22 மாணவர்களையும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

  • சி.டி.விக்ரமரத்னவின் மறைவு பெரும் இழப்பு – ஜீவன் எம்.பி.

    இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு இன்று (20) நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் தனது இரங்கல் செய்தியில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார். அவர் பதவியில் இருந்த காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகவும், அமைதியான, பணிவான, கடமையுணர்வுமிக்க அதிகாரியாக அவர் நாட்டிற்கு கண்ணியத்துடனும் அர்ப்பணிப்புடனும்…

  • இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு

    அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று (20) சற்று அதிகரித்துக் காணப்படுகின்றது. அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 331.67 ரூபாயில் இருந்து 331.50 ரூபாயாகக் குறைந்துள்ளதுடன், அதன் விற்பனை விலையும் 341.08 ரூபாயில் இருந்து 340.90 ரூபாயாகக் குறைந்து ரூபாயின் மதிப்பு சற்று வலுவடைந்துள்ளது. அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க்…

  • வெள்ளை மாளிகை இரகசியத் தகவல்களை அம்பலப்படுத்திய பபிள்மேப்ஸ் நிறுவனம்

    அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில், வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே இரகசியத் தகவல் கசிந்துள்ளதாக ‘பபிள்மேப்ஸ்’ நிறுவனம் தொரிவித்துள்ளது. இதைப்பயன்படுத்தி போலி மார்க்கெட்’ போன்ற ஒன்லைன் சூதாட்டத் தளங்களில் 3 அநாமதேயக் கணக்குகள் சரியாகப் பந்தயம் கட்டி, $6,00,000-க்கும் அதிகமாக  இலாபம் ஈட்டியுள்ளதை ‘பபிள்மேப்ஸ்’ நிறுவனம் கண்டறிந்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் டெலிப்ரொம்ப்டர் ஒபரேட்டரான கேப்ரியல் பெரெஸ், ஜனாதிபதியின் உரைகளை முன்கூட்டியே அணுகி தகவல்களைக் கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.…