Author: Six Side Media

  • 2027 ‘எஸ்சிஓ’ மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்

    ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்சிஓ) சுழற்சி முறை தலை​மை​யின் அடிப்​படை​யில், 2027-ம் ஆண்டுக்கான வரு​டாந்​திர மாநாட்டை நடத்​தும் பொறுப்பை பாகிஸ்தான் பெற்​றுள்​ளது. இந்த அமைப்​பில் இந்​தி​யா, சீனா, ரஷ்​யா, பாகிஸ்​தான், கஜகஸ்தான், கிர்​கிஸ்​தான், தஜிகிஸ்​தான், உஸ்​பெகிஸ்​தான், ஈரான் மற்​றும் பெலாரஸ் ஆகிய 10 நாடு​கள் இடம் பெற்​றுள்​ளன. இந்த நிலை​யில்இ இஸ்​லா​மா​பாத்​தில் நடை​பெற்ற செய்தியாளர்கள் சந்​திப்​பில், பாகிஸ்​தான் வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் கூறிய​தாவது, எஸ்சிஓ உச்சி மாநாட்டை நடத்​தும் பொறுப்பை ஏற்​கும் நாடு, அமைப்​பின் அனைத்து…

  • கொங்கோவில் மீண்டும் தீவிரமடையும் எபோலா: 3,500 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; உலகின் 2-வது மிகப்பெரிய பேரழிவு என எச்சரிக்கை!

    கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் (Ebola virus) மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 3,532 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நாட்டின் தகவல் மற்றும் ஊடக அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் வரலாற்றிலேயே உலகின் 2-வது மிகப்பெரிய எபோலா பேரழிவாக இது பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் 2018 முதல் 2020 வரை கொங்கோவில் ஏற்பட்ட 10-வது எபோலா பரவலின் போது 3,470 பேர் பாதிக்கப்பட்டதே பதிவாக இருந்த நிலையில், தற்போதைய பரவல் அதைக்…

  • தலையில் ஊசி குத்தப்பட்ட நிலையிலும் பிரியாணி சாப்பிட்ட சல்மான் கான்!

    பொலிவூட்டின் பிரபல நடிகரான சல்மான் கான், தமது இளமைத் தோற்றத்தைப் பராமரிப்பதற்காகச் செய்யும் சிகிச்சைகள் குறித்து அவரது நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான சைலேந்திர சிங் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். 60 வயதிலும் இளமையாகத் தோற்றமளிக்கும் சல்மான் கான், முடி உதிர்வைத் தடுப்பதற்காகவும் தலைமுடி அடர்த்தியாக இருப்பதற்காகவும் பிளேட்லெட்-ரிச் பிளாஸ்மா (PRP சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். இது குறித்துப் பேசிய சைலேந்திர சிங், ‘ஒரு நாள் தான் சல்மான் கானின் வீட்டிற்குச் சென்றபோது, அவர் சாப்பாட்டு அறையில் கண்ணாடிக்கு…

  • பூஜித் ஜயசுந்தரவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை – அலி சப்ரி

    குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தன. ஆனால் பொலிஸாரும் தேசிய பாதுகாப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். குற்றவியல் நோக்கம் இல்லாத நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளதை மேற்கோள் காட்டி தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் மேற்கண்டவாறு…

  • எந்தவொரு நபருக்கும் அநீதி இழைக்கவில்லை; இது எனது முன்பிறவியின் பயன்- தீர்ப்பின் பின்னர் பூஜித்

    உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர், முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு நீதிமன்றத்தில் கருத்து வெளியிடுவதற்கு நேற்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதன்போது அவர் ‘நான் நினைத்து எந்தவொரு காரியத்தையும் செய்யவில்லை. காவல்துறைக்கு இணைந்த நாளிலிருந்து பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன். நான் பல அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவுடன் இணைந்துதான் பணியாற்றினேன். பொறுப்புகூற வேண்டிய சிலரை விடுவித்துள்ளேன். அந்த சந்தர்ப்பங்களின் நான் மிகுந்த வேதனைக்கு உள்ளானேன். இந்தச் சம்பவத்துக்கு பிறகு இன்றுவரை…

  • அர்ஜென்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி

    அர்ஜென்டினாவின் லா ரியோஹா மாகாணத்தில் உள்ள மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதை அணைப்பதற்காக, மேற்கு சான் வான் மாகாணத்தில் இருந்து தீயணைப்புத்துறை ஹெலிகாப்டர் புறப்பட்டது. பெல் ரகத்தை சேர்ந்த அந்த ஹெலிகாப்டர், எதிர்பாராத விதமாக இஷிகுவாலாஸ்டோ பூங்கா அருகே விபத்துக்குள்ளானது. இதில் தீயணைப்பு வீரர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு பணியாளர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  • அமெரிக்கா செல்லும் கனேடியர்களுக்கு சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை

    அமெரிக்க மாகாணமொன்றிற்குப் பயணிக்கும் கனேடியர்களுக்கு கனடா சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் ஒட்டுண்ணித் தொற்று பயங்கரமாக பரவி வருகிறது. ஜுலை 30 வரையிலான காலகட்டத்தில், மிச்சிகன் மாகாணத்தில், 10,700க்கும் அதிகமானவர்களுக்கு இந்த சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சைக்ளோஸ்போரியாசிஸ் கிருமித் தொற்றை ஏற்படுத்தக்கூடியது சைக்ளோஸ்போரா என்னும் கிருமி ஆகும். உணவு மற்றும் குடிநீர் வழியாக மட்டுமே பரவும் இந்த சைக்ளோஸ்போரா என்னும் கிருமி, வயிற்றுப்போக்கு, வயிறு வீக்கம்,…

  • கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு இடம்மாற்றப்பட்ட பாரிய திமிங்கிலங்கள்

    கனடாவின் ஒன்டாரியோவில் நயாகரா அருவிப் பகுதியில் உள்ள மரைன்லேண்ட் கடல் பூங்காவில் இருந்து நான்கு பெலூகா திமிங்கிலங்கள், அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள மீன் காட்சியகத்துக்கு பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டன. மேலும் இரண்டு திமிங்கிலங்கள் டெக்சாசில் உள்ள சான் ஆன்டோனியோ கடல் அருங்காட்சியகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. மரைன்லேண்ட் கடல் பூங்கா மூடப்பட்டதையடுத்து, அங்கிருந்த 30 பெலூகா திமிங்கிலங்களை மீட்கும் சர்வதேச முயற்சியின் முதல்கட்டமாக ஆறு திமிங்கிலங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன. மீதமுள்ள திமிங்கிலங்கள், ஜோர்ஜியா, சான் டியாகோ, ஸ்பெயின் ஆகிய இடங்களில்…

  • செவ்வாயில் பழங்கால ஏரியைக் கண்டுபிடித்த நாசாவின் ரோவர்

    செவ்வாய் கிரகம் வறண்ட பாலைவனம் மட்டுமல்லஇ அது ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த ஈரமான உலகமாக இருந்திருக்கலாம் என்பதை நாசாவின் பெர்சீவரன்ஸ் ரோவர் கண்டறிந்துள்ளது. செவ்வாய் கிரகம் என்றாலே நம் நினைவுக்கு வருவது சிவப்பு நிறப் பாறைகளும், வறண்ட பாலைவனமும் தான். ஆனால், செவ்வாய் வெறும் வறண்ட கிரகம் மட்டுமல்ல, அது ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த ஈரமான உலகமாக இருந்திருக்கலாம் என்ற உண்மையைச் சமீபத்திய கண்டுபிடிப்பு உறுதிப்படுத்தியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேற…

  • வியக்கவைக்கும் கடலடி அறிவியல் உண்மை

    மூளையும் ரத்தமும் இல்லாத ஜெல்லிமீன்கள் மற்றும் கடல் சாமந்திகள் கூட தினமும் 8 மணிநேரம் தூங்குகின்றன என்ற ஆச்சரியமான உண்மையை பார்-இலான் பல்கலைக்கழக ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. தூக்கம் என்பது மனிதர்களுக்கோ அல்லது பெரிய விலங்குகளுக்கோ மட்டுமே உரிய ஒன்று என நீங்க நினைத்தால், அது தவறு. ரத்தமும் இல்ல, மூளையும் கூட இல்ல, ஆனாலும் ஜெல்லிமீன்கள் மற்றும் கடல் சாமந்திகள் கூட தினமும் நிம்மதியாகத் தூங்குகின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? சமீபத்தில் பார்-இலான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்…