Author: Six Side Media

  • ரத்மலானையில் துப்பாக்கிச்சூடு – காயமடைந்தவர் உயிரிழப்பு

    ரத்மலானை கந்தாவல வீதிப் பகுதியில் இன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உடனடியாக களுபோவில போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  • ராகம பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டம்

    மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து ராகம பொலிஸ் பிரிவில் உடனடியாக அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரையில் குறித்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள 246 கெண்டலியத்த வீதி – மேற்கு, 246 சி கெண்டலியத்த வீதி – வடக்கு மற்றும் 181 ஜி – தம்புவ ஆகிய கிராம சேவைப் பிரிவுகளுக்குள் மட்டும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலும்,…

  • மஹர சிறைச்சாலை – கண்காணிப்புக்கு விமானப்படை ஹெலிக்கொப்டர், ட்ரோன்கள் களமிறக்கம்

    மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை கண்காணித்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 ஹெலிக்கொப்டர் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) களமிறக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். மஹர சிறைச்சாலை வளாகத்திலுள்ள கட்டிடமொன்றில் இன்று (01) பிற்பகல் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைச்சாலையின் உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார், பொலிஸ் விசேட…

  • தனது 7 மாத குழந்தைக்காக சட்டப் போராட்டம் நடத்திய சிறுமி!

    கைகளில் தனது 7 மாதக் குழந்தையை ஏந்தியபடி, கேமராவை நோக்கி மென்மையாகச் சிரித்துக்கொண்டிருக்கும் இந்தச் சிறுமியின் பெயர் ஜூய். அந்தப் புன்னகைக்குப் பின்னால், பலராலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வேதனையும் போராட்டமும் நிறைந்த வாழ்க்கைக் கதை மறைந்திருக்கிறது. ஜூய்க்கு தற்போது வெறும் 13 வயது மட்டுமே. ஆனால், அவரது கைகளில் இருக்கும் அந்தக் குழந்தை அவருடையது தான். இவ்வளவு இளம் வயதிலேயே தாய்மையின் பொறுப்பை ஏற்றதோடு, தனது குழந்தையை மீண்டும் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாட வேண்டிய…

  • செங்கடல் நுழைவாயிலில் மீண்டும் பதற்றம் ; எண்ணெய்க் கப்பல்கள் திசை மாற்றம்

    செங்கடல் மற்றும் பாப் எல்-மந்தேப் (Bab el-Mandeb) நீரிணைப் பகுதியில் ஏமனின் ஹூதி (Houthi) கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபிய துறைமுகங்களுக்கு எதிராகக் கடல்வழி முற்றுகையை அறிவித்துள்ளதால், அப்பகுதியில் மீண்டும் கடுமையான பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சவுதி கச்சா எண்ணெயைச் சுமந்து செல்லும் பல பிரம்மாண்ட எண்ணெய்க் கப்பல்கள்  தங்களது பயண வழிகளை பாப் எல்-மந்தேப் நீரிணையிலிருந்து திடீரென திசை திருப்பி வருகின்றன. உலகின் முக்கிய வர்த்தக கடல் பாதைகளில் ஒன்றான செங்கடலுக்கான நுழைவாயிலான பாப் அல்-மண்டப்…

  • திபெத்தில் எவரெஸ்ட் சிகரம் அருகே இந்திய எல்லையை கண்காணிக்க ட்ரோன் ஆராய்ச்சி மையம் அமைத்தது சீனா

    எல்​லைக் கண்​காணிப்​பு, பாது​காப்​பு, தளவாடங்​கள் மற்​றும் போக்​கு​வரத்தை பலப்​படுத்​து​வதற்​காக, திபெத்​தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்​திற்கு அரு​கில் ட்ரோன் ஆராய்ச்சி மற்​றும் மேம்பாட்டு மையத்தை சீனா நிறு​வி​யுள்​ளது. சீனா, இந்​திய எல்​லைக்கு அரு​கில் உள்ள பகு​தி​களில் ராணுவ பலத்தை அதி​கரித்து வரு​கிறது. லடாக்​கின் லே பகு​திக்கு அரு​கில் உள்ள ஹேட்​டன் விமானப்​படை தளத்​தில் ஏழு ஜே-20 ரக போர் விமானங்​களை நிறுத்​தி​யுள்​ளது. அருணாச்​சலப் பிரதேசத்​தின் தவாங் பகு​திக்கு அரு​கில் 4 ஜே-20 ரக போர் விமானங்​களை நிறுத்தி​யுள்​ளது செயற்​கைக்​கோள்…

  • ‘அப்பாவால் கிடைத்திருப்பது மிகப் பெரிய பொறுப்பு’ – தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பகிர்வு

    ‘அப்பாவால் இப்போது கிடைத்திருக்கும் பொறுப்பு என்பது மிகப் பெரியது. அதைக் காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது’ என தமிழக முதல்வர் விஜய்யின் மகனும், ‘சிக்மா’ பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனது தந்தை பற்றியும், ‘சிக்மா’ பட அனுபவம் குறித்தும் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘புதிய வரலாறு படைத்து அப்பா அடைந்திருக்கும் இந்த இடம் என்பது மிகப் பெரியது. அதன் அழுத்தம் எங்கள் மீதும் இருக்கும் என்பதை…

  • தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து கர்நாடகாவில் ஆக.13-ல் முழு அடைப்பு போராட்டம்

    காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பதை கண்டித்து கர்நாடகாவில் ஆகஸ்ட் 13-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார். காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடக அரசு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3500 கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என நேற்று முன் தினம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 4-வது நாளாக கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, மங்களூரு ஆகிய இடங்களில் கன்னட அமைப்பினரும், விவசாய…

  • 2027 ‘எஸ்சிஓ’ மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்

    ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்சிஓ) சுழற்சி முறை தலை​மை​யின் அடிப்​படை​யில், 2027-ம் ஆண்டுக்கான வரு​டாந்​திர மாநாட்டை நடத்​தும் பொறுப்பை பாகிஸ்தான் பெற்​றுள்​ளது. இந்த அமைப்​பில் இந்​தி​யா, சீனா, ரஷ்​யா, பாகிஸ்​தான், கஜகஸ்தான், கிர்​கிஸ்​தான், தஜிகிஸ்​தான், உஸ்​பெகிஸ்​தான், ஈரான் மற்​றும் பெலாரஸ் ஆகிய 10 நாடு​கள் இடம் பெற்​றுள்​ளன. இந்த நிலை​யில்இ இஸ்​லா​மா​பாத்​தில் நடை​பெற்ற செய்தியாளர்கள் சந்​திப்​பில், பாகிஸ்​தான் வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் கூறிய​தாவது, எஸ்சிஓ உச்சி மாநாட்டை நடத்​தும் பொறுப்பை ஏற்​கும் நாடு, அமைப்​பின் அனைத்து…

  • கொங்கோவில் மீண்டும் தீவிரமடையும் எபோலா: 3,500 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; உலகின் 2-வது மிகப்பெரிய பேரழிவு என எச்சரிக்கை!

    கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் (Ebola virus) மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 3,532 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நாட்டின் தகவல் மற்றும் ஊடக அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் வரலாற்றிலேயே உலகின் 2-வது மிகப்பெரிய எபோலா பேரழிவாக இது பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் 2018 முதல் 2020 வரை கொங்கோவில் ஏற்பட்ட 10-வது எபோலா பரவலின் போது 3,470 பேர் பாதிக்கப்பட்டதே பதிவாக இருந்த நிலையில், தற்போதைய பரவல் அதைக்…