Author: Six Side Media
-
இந்தியா:ஜந்தர் மந்தர் போராட்டம்: குழந்தைகளை மன்னித்த மோடி; குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்க சொல்லும் தீப்கே!
ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தன்னை குறித்தும், தன் தாயார் குறித்தும் அவதூறாக பேசியதாக இந்திய நேற்று பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் முக்கியமாக பேசியிருந்ததாவது, ‘ஜந்தர் மந்தரில் நடந்த நிகழ்வுகளை, நாடும், உலகமும் பார்த்துள்ளன. சில குறும்புக்காரக் குழந்தைகள், எந்தவொரு நாகரிகமான சமூகத்திற்கும் பெருமை சேர்க்காத வகையில், மிகவும் ஆபாசமான வசவுச் சொற்களைப் பயன்படுத்தினர். நான் வசைபாடப்பட்டேன். எனது காலமான தாயாரும் வசைபாடப்பட்டார். அது எவ்வளவு மோசமான வடிவம் என்பது எனக்குத் தெரியும்.…
-
தாக்குதலை ஒத்திவைக்க ஈரான் கோரிக்கை – டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு
ஈரானுக்கு எதிராக மிகப்பெரும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க அமெரிக்கா தயார் நிலையில் உள்ள போதிலும், முக்கிய உடன்படிக்கைகளுக்காக தாக்குதலைத் தற்காலிகமாக தாமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு மிகப்பாரிய அளவிலான இராணுவப் பலத்துடன் ஈரானை எதிர்கொள்ள அமெரிக்கா ஆயத்தமாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஈரான் மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து தாக்குதலை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கைகள் வந்துள்ளதாகக் கூறியுள்ளார். ஹோர்முஸ் நீரிணையை திறப்பது,அணுசக்தி அச்சுறுத்தலை…
-
அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை
அமெரிக்காவுடனான ஈரானின் அதிகரித்து வரும் பதற்ற நிலைமைகள் குறித்து, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கான் ஃபிடான் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார். அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் உத்தியோகபூர்வ சமூக ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, ‘அமெரிக்க இராணுவத்தின் எந்தவொரு சாகச நடவடிக்கைகளுக்கும்’ எதிராக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் தனது ‘தேசிய இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு’ ஆகியவற்றுக்கு பாதுகாப்பளிக்கத்…
-
ரஷ்ய உணவகத்தில் குண்டுவெடிப்பு – 3 பேர் பலி, 21 பேர் காயம்
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வெடிபொருள் வெடித்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு 21 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகரின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள குட்ரின்ஸ்காயா (Kudrinskaya) சதுக்கத்தில் உள்ள இத்தாலிய உணவகத்தில் அந்த நாட்டு உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெடிபொருட்களை ஏந்தி வந்த பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய முயன்றதாகவும், அவரைப்…
-
பல ஆண்டுகள் கடந்தும் பேசப்படும் திருமணம்!
2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், புள்ளூரில் அமைந்துள்ள செயிண்ட் சேவியர் தேவாலயத்தில் உலக கவனத்தை ஈர்த்த வித்தியாசமான திருமண விழா ஒன்று நடைபெற்றது. ஒரே மாதிரியான இரட்டையர் சகோதரர்களான தில்ராஜ் மற்றும் தில்கர், ஒரே மாதிரியான இரட்டையர் சகோதரிகளான ரீனா மற்றும் ரீமாவை திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தின் தனிச்சிறப்பு மணமக்கள் மட்டுமல்ல. திருமணச் சடங்கை நடத்தி வைத்தவர்களும் இரட்டையர் கத்தோலிக்க பாதிரியார்களான பிதாக்கள் ரெஜி மற்றும்…
-
ஈழமுரசின் இன்றைய ராசிபலன் – 02.08.2026- ஞாயிற்றுக்கிழமை
பஞ்சாங்கம் நாள்- ஞாயிற்றுக்கிழமை திதி -சதுர்த்தி இரவு 10.08 பிறகு பஞ்சமி நட்சத்திரம் -பூரட்டாதி இரவு 9.14 வரை பிறகு உத்திரட்டாதி யோகம் – சித்தயோகம் இரவு 9.14 வரை பிறகு அமிர்தயோகம் ராகுகாலம் – மாலை 4.30 முதல் 6 வரை எமகண்டம் -பகல் 12.00 முதல் 1.30 வரை நல்லநேரம் -காலை 7.45 முதல் 8.45 வரை ஃ பகல் 3.15 முதல் 4.15 வரை சந்திராஷ்டமம் -ஆயில்யம் இரவு 9.14 வரை பிறகு…
-
இலங்கை :மஹர ஊரடங்கு தொடர்ந்து அமுலில்
மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள 246 கெண்டலியத்த வீதி – மேற்கு, 246 சி கெண்டலியத்த வீதி – வடக்கு மற்றும் 181 ஜி – தம்புவ ஆகிய கிராம சேவைப் பிரிவுகளுக்குள் மட்டும், நேற்று இரவு முதல் அமுலான பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்து நீடிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது என்றும் அவசர தேவைகள் இருப்பின் அண்மையில் இருக்கும் பாதுகாப்புத் துறையை தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸ் திணைக்களம் கேட்டுள்ளது.
-
மாந்தை துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளில் உலகின் மிகப்பழமையான கிராம்பு கண்டெடுப்பு
சமையலிலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் நறுமணப் பொருளான கிராம்பு பயன்படுத்தப்படுகின்றது. உலகளவில் இந்தோனீசியா மிகப்பெரிய கிராம்பு உற்பத்தியாளராக உள்ளது. அதேவேளையில், இந்தியா உலகின் முக்கிய கிராம்பு இறக்குமதியாளர்களில் ஒன்றாக விளங்குகிறது ஆனால், நவீன வர்த்தக உலகிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட உலகின் மிகப்பழமையான கிராம்பு மாதிரி எங்கு கண்டெடுக்கப்பட்டது தெரியுமா? இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள பண்டைய ‘மாந்தை’ (பண்டைய காலத்தில் ‘மகாதீத்த’) துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளில், அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட உலகின் மிகப்பழமையான…
-
ஈரான் விமான நிறுவனத்துடன் தொடர்புடைய 6 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை
ஈரானின் மகான் எயார் விமான நிறுவனத்துக்கு விற்பனை முகவர்களாகச் செயல்பட்டு வரும் இந்திய நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள், தனி நபர்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஈரானைச் சோ்ந்த மகான் எயார் விமான நிறுவனம், போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் தனது விமானங்களில் அந்த நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படைக்கு வீரர்களை ஏற்றிச் செல்லுதல், ஆயுதங்களைக் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட உதவிகளைச் செய்வதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து, அந்த விமான நிறுவனத்துக்கு உதவி செய்ததாகக் கூறி, இந்தியாவின் அதன் விற்பனை…
-
உக்ரைன் மீது ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல் – 9 பேர் உயிரிழப்பு
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததுடன், 28 பேர் காயமடைந்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ரஷ்யா–உக்ரைன் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில். இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றது. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்காத நிலையில், மோதல்கள் தொடர்கின்றன. இந்நிலையில்,…