Author: Six Side Media

  • ஸ்பெயின் தீயை அணைக்க கட்டார் உதவி

    ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, கத்தார் சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் குழுவை (Qatar International Search and Rescue Team) கத்தார் அரசு அனுப்பியுள்ளது. கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியின் வழிகாட்டுதலின் பேரில், இந்த சிறப்பு மீட்புக் குழு தோஹாவிலிருந்து ஸ்பெயினின் டொரெஜோன் விமான நிலையத்திற்குப் புறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் 129 காட்டுத்தீ நிபுணர்கள் இடம்பெற்றுள்ளதுடன், தொழில்நுட்ப மற்றும் தளவாட ஆதரவுக்குத் தேவையான மேம்பட்ட…

  • கொங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் : 1,556 பேர் பலி!

    கொங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,556 ஆக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள நாடு கொங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்நிலையில் 3,532 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், எபோலா வைரஸ் பாதிப்பால் 1,556 பேர் உயிரிழந்துள்ளதாக கொங்கோ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும்…

  • ஒற்றை அணு மின் நிலையத்தையும் மூடும் நாடு

    ஐரோப்பிய நாடான ஹங்கேரி, தனது ஒரே அணு மின் நிலையமான பாக்ஸ் (Paks) அணு மின் நிலையத்தை மூடுவதாக அறிவித்துள்ளது. கடந்த 44 ஆண்டுகளில் முதல் முறையாக முழுமையாக இந்த அணுமின் நிலையம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த மின் நிலையம் நாட்டின் மின்சார தேவையின் அரைபங்கிற்கும் மேல் வழங்கி வருகிறது. ஆனால், டானியூப் ஆற்றின் நீர்மட்டம் வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலையில் சென்றதால், ரியாக்டர்களை குளிர்விக்க தேவையான நீர் கிடைக்கவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை உற்பத்தி 965 மெகாவாடாகக்…

  • இந்தியருக்கு UAE Lottery-ல்- விழுந்த பரிசு

    UAE Lottery-ல் இந்தியர் ஒருவர் 30 மில்லியன் திர்ஹாம் பரிசு வென்றுள்ளார். சுனில் குமார் சதாசிவன் எனும் இந்தியர், UAE Lottery-ல் 30 மில்லியன் திர்ஹாம் பரிசுத்தொகையை வென்றுள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர், 18 வயதில் இந்தியாவை விட்டு வெளிநாட்டில் வேலை தேடி சென்றார். தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஆறு சகோதரிகளின் திருமணத்திற்கும் குடும்ப நலனுக்கும் அர்ப்பணித்தார். 2006-இல் திருமணம் செய்து அமீரகத்திற்கு குடிபெயர்ந்தார். பின்னர் இந்தியாவில் டைல்ஸ் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டார். ஆனால் நிதி சிக்கல்கள்…

  • கனடா டிம்மின்ஸ் நகரில் 1 நாளில் இரு கொலைகள் !

    கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள டிம்மின்ஸ் நகரில், சுமார் 24 மணி நேர இடைவெளியில் இரண்டு வெவ்வேறான கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரு சம்பவங்களும் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்றும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பழக்கவழக்கங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட மோதல்களே காரணம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜூலை 31-ஆம் திகதி அதிகாலை 1:00 மணியளவில், ‘பால்சம் வீதி வடக்கு’ பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தீவிர…

  • நாய்க் குட்டிகளை மீட்கச் சென்ற தன்னார்வலர் நாய்களால் கடியுண்டு பலி

    தெருவில் தவிக்கும் விலங்குகளின் துயரம் கண்டு உருகும் நெஞ்சங்களும், அவற்றைக் காக்கத் துடிக்கும் கரங்களும் தான் இந்த உலகை இன்னும் மனிதநேயத்துடன் இயங்க வைக்கின்றன. ஆனால், அதே ஜீவன்களைக் காப்பாற்றச் சென்ற ஒரு இளம் பெண்ணின் உயிர், அதே மிருகத்தனமான தாக்குதலுக்குப் பலியாகிப்போன சோகம் கனடாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 37 வயதான அமண்டா நோபிஸ் விலங்குகள் மீது அளவில்லா அன்பு கொண்ட ஒரு தீரமிக்க ஆர்வலர். ‘K9 அட்வகேசி மணிட்டோபா’ அமைப்பில் தன்னார்வலராகச் செயல்பட்டு வந்த அமண்டா,…

  • கனடாவில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் பாதிப்பு!

    கனடாவில் தொடர்ச்சியாக நிலவி வரும் வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பணவீக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து வருகிறது. இந்நிலையில், ‘நாரடிவ் ரிசர்ச்’ அமைப்பினால் நடத்தப்பட்ட புதிய தேசிய அளவிலான ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 76 சதவீதத்தினர், உணவு மற்றும் மளிகைப் பொருட்களின் அதிகப்படியான விலையேற்றமே தங்களது குடும்பப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 47 சதவீதத்தினர் எரிபொருள் விலையேற்றத்தை இரண்டாவது பெரிய நிதி நெருக்கடியாகக் குறிப்பிட்டுள்ளனர்.…

  • படகு விபத்தில் காணாமல் போன ரொறன்ரோ தம்பதியின் உடல்கள் மீட்பு!

    கனடாவின் முஸ்கோக்கா பகுதியில் இடம்பெற்ற படகு மோதல் விபத்தொன்றில் காணாமல் போயிருந்த இருவரின் உடல்களையும் புலனாய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். உயிரிழந்தவர்கள் ரொறன்ரோவைச் சேர்ந்த 32 வயது ஆண் மற்றும் 30 வயது பெண் என பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு 10:40 மணியளவில், பேக்கன்ரிக் பே பகுதிக்கு அருகிலுள்ள ரொசோ ஏரியில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்தபோது, பலத்த சேதமடைந்த நிலையிலிருந்த படகு ஒன்று பாறை…

  • பூமியை நோக்கி பாயும் விண்வெளிக் குப்பைகள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!…

    ஆயுட்காலம் முடிவடைந்த விண்கலங்கள் மற்றும் செயலிழந்த செயற்கைக்கோள்கள் பூமி மீது விழுகின்றன. பூமியின் தாழ்வட்டப் பாதையில் வலம் வரும் பல்லாயிரக்கணக்கான டன் எடையுள்ள ‘விண்வெளிக் கழிவுகள்’, கட்டுப்பாட்டை இழந்து விழும் அபாயம் அதிகரித்து வருவதாக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில தசாப்தங்களாக மனிதர்களால் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகளின் பாகங்கள் மற்றும் உடைந்த நுண் பொருட்கள் என சுமார் 13,000 டன்களுக்கும் அதிகமான விண்வெளிக் கழிவுகள் பூமியின்…

  • இந்தோனேசியாவில் பயணிகள் படகில் தீப்பரவல்: 5 பேர் பலி; 41 பேரைக் காணவில்லை!

    இந்தோனேசியாவின் மதுரா தீவுக்கு அப்பால் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் படகு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 41 பேர் காணாமல் போயுள்ளனர் என அந்த நாட்டின் தேடுதல் மற்றும் மீட்பு பணியகம் தெரிவித்துள்ளது. 271 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த இந்த படகில் இருந்து, இன்று பிற்பகல் வரை 225 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு ஜாவா மாகாணத்தின் சுரபயாவில் இருந்து தெற்கு சுலவேசியில் உள்ள மகசார் நகரை நோக்கிப்…