Author: Six Side Media

  • விண்வெளியில் இருந்து ஐபோன் மூலம் படம் பிடிக்கப்பட்ட பசிபிக் பெருங்கடல்!…

    டிஜிட்டல் கேமராக்களுக்கு இணையாக இந்த ஸ்மார்ட்போன் புகைப்படம் அமைந்துள்ளதாக விண்வெளி ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எவ்வித டிஜிட்டல் கேமராக்களும் இன்றி, சாதாரண ஸ்மார்ட்போன் மூலம் எடுக்கப்பட்ட பசிபிக் பெருங்கடலின் பிரமாண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நாசாவின் இந்திய வம்சாவளி விண்வெளி வீரரான அனில் மேனன், விண்வெளி நிலையத்தின் கப்போலா கண்காணிப்பு பகுதியில் இருந்து பசிபிக் பெருங்கடலின் வியத்தகு காட்சியைத் தனது ஐபோன் மூலம் படம் பிடித்தார். அந்த புகைப்படத்தை நேற்று…

  • தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

    6 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, முழுமையான அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருதல், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்தும் அது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையக சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் குறித்த பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில்…

  • ராணுவத்தில் ஏ.ஐ. பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் – சீன அதிபர் ஜின்பிங் உத்தரவு.

    சீன அதிபர் ஜின்பிங், மக்கள் விடுதலை ராணுவம் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆளில்லா தொழில்நுட்பங்களை ராணுவத்தில் விரைவாகப் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளார். ராணுவத்தின் 99-வது ஆண்டு விழாவை முன்னிட்டுபோர்க்களத் திறனே தேசிய பாதுகாப்பு நவீனமயமாக்கலின் அளவுகோல் என அவர் வலியுறுத்தினார். 2027-ம் ஆண்டு ராணுவத்தின் 100-வது ஆண்டு விழாவிற்குள் நவீனமயமாக்கலில் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைய இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆளில்லா விமானங்கள், ரோபோக்கள் மற்றும் தானியங்கி கப்பல்கள் உருவாக்கப்படுகின்றன.வுகானில் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளது. ராணுவ தொழில்நுட்பத் திட்டங்களில் வெளிப்படைத் தன்மையை…

  • பேராதனைப் பல்கலை கல்வி நடவடிக்கைகள் தற்காலிக இடைநிறுத்தம்

    நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேவேளை, பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய சேவைகள் வழமைபோல் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்குச் செல்லக்கூடிய மாணவர்கள் அவ்வாறு செல்லுமாறும், சீரற்ற வானிலையால் செல்ல முடியாதவர்கள் விடுதி நிர்வாகத்தின் அனுமதியுடன் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அபாயகரமான தனியார் விடுதிகளில் தங்கியிருக்கும்…

  • கொழும்பு – கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடல்

    வீதியில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் நிலவுவதால், கொழும்பு–கண்டி பிரதான வீதி கடுங்கன்னாவ மற்றும் கணேதென்னா பகுதிகளுக்கு இடையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வெளியாகும் வரை குறித்த வீதியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

  • நடுவானில் விமானத்தை நெருங்கிய பறக்கும் தட்டு – விமானி அதிர்ச்சி

    இங்கிலாந்தில் நடுவானில் விமானம் வந்தபோது, 300 அடி தொலைவில் பறக்கும் தட்டு நெருங்கி விமானிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் கேட்விக் விமான நிலையத்தில் எயார்பஸ் ஏ319 என்ற பயணிகள் விமானம் தரையிறங்க வேண்டி இருந்தது. இதற்காக கேட்விக் பகுதிக்கு தெற்கே 7 மைல்கள் தொலைவில், சசெக்ஸ் கவுன்டி பகுதியில் ஹேங்கிராஸ் அருகே நடுவானில் பறந்து வந்து கொண்டிருந்தது. விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும்போது, அந்த சம்பவம் நடந்தது. திடீரென மர்ம பொருள்…

  • எகிப்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

    எகிப்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இஸ்மாயிலியா பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தரை மட்டத்திலிருந்து 5.47 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட பல நகரங்களில் நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்ட போதிலும், உயிர்ச் சேதமோ சொத்துச் சேதமோ எதுவும் பதிவாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

  • ஈழமுரசின் இன்றைய ராசிபலன்-03.08.2026- திங்கட்கிழமை

    பஞ்சாங்கம் நாள் திங்கள்கிழமை திதி திரயோதசி மாலை 5.47 வரை பிறகு சதுர்த்தசி நட்சத்திரம் மூலம் பகல் 12.34 வரை பிறகு பூராடம் யோகம் அமிர்தயோகம் பகல் 12.34 வரை பிறகு சித்தயோகம் ராகுகாலம் காலை 7.30 முதல் 9 வரை எமகண்டம் காலை 10.30 முதல் 12 வரை நல்லநேரம் காலை 6.15 முதல் 7.15 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை சந்திராஷ்டமம் கிருத்திகை பகல் 12.34 வரை பிறகு ரோகிணி…

  • மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

    காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை கடற்பயணம் செய்ய வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம், கடற்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (2) மாலை விடுத்துள்ள அறிக்கையொன்றில், இந்த எச்சரிக்கை நாளை (3) பி.ப. 8.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது நாளை அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அப்பகுதிகளிலுள்ள கடல்…

  • இலங்கை: மூதூரில் பொறியியல் பீட மாணவன் கோர விபத்தில் பலி

    மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் மூதூர் -கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பீட முதலாம் வருட மாணவன், மற்றொருவர் பிரான்ஸ் செல்லத் தயாராக இருந்த 19வயது இளைஞரும் உயிரிழந்துள்ளனர். டிப்பர் வாகனச் சாரதி மூதூர் பொலிஸ்…