Author: Six Side Media
-
பூமியை நோக்கி பாயும் விண்வெளிக் குப்பைகள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!…
ஆயுட்காலம் முடிவடைந்த விண்கலங்கள் மற்றும் செயலிழந்த செயற்கைக்கோள்கள் பூமி மீது விழுகின்றன. பூமியின் தாழ்வட்டப் பாதையில் வலம் வரும் பல்லாயிரக்கணக்கான டன் எடையுள்ள ‘விண்வெளிக் கழிவுகள்’, கட்டுப்பாட்டை இழந்து விழும் அபாயம் அதிகரித்து வருவதாக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில தசாப்தங்களாக மனிதர்களால் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகளின் பாகங்கள் மற்றும் உடைந்த நுண் பொருட்கள் என சுமார் 13,000 டன்களுக்கும் அதிகமான விண்வெளிக் கழிவுகள் பூமியின்…
-
இந்தோனேசியாவில் பயணிகள் படகில் தீப்பரவல்: 5 பேர் பலி; 41 பேரைக் காணவில்லை!
இந்தோனேசியாவின் மதுரா தீவுக்கு அப்பால் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் படகு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 41 பேர் காணாமல் போயுள்ளனர் என அந்த நாட்டின் தேடுதல் மற்றும் மீட்பு பணியகம் தெரிவித்துள்ளது. 271 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த இந்த படகில் இருந்து, இன்று பிற்பகல் வரை 225 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு ஜாவா மாகாணத்தின் சுரபயாவில் இருந்து தெற்கு சுலவேசியில் உள்ள மகசார் நகரை நோக்கிப்…
-
மீண்டும் களத்தில் லியோனல் மெஸ்ஸி – கைநழுவிய வெற்றி
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்குப் பிறகு, மெஸ்ஸி முதன்முறையாக மீண்டும் களமிறங்கியுள்ளார். MLS தொடரில் கொலம்பஸ் அணிகளுக்கெதிரான போட்டியில் இன்டர் மியாமி அணிக்காக மெஸ்ஸி களமிறங்கினார். போட்டியின் இரண்டாம் பாதியில் மாற்று வீரராகக் களம் கண்ட அர்ஜென்டினாவின் மெஸ்ஸிக்கு, கோல் அடிக்க சில வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அதை கோலாக மாற்ற முடியாமல் போனது. மழை காரணமாக 40 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கிய இந்த போட்டியில், மியாமி அணியின் லூயிஸ் சுவாரெஸ் 16ஆவது நிமிடத்தில்…
-
இலங்கை: ‘பூஜித் ஜயசுந்தரவை நியமிக்க வேண்டுமென அநுரவே கோரினார்’ விமல் வீரவங்ச
நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்டோரின் கோரிக்கைக்கு அமைவாகவே, பூஜித் ஜயசுந்தர காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டதாகத் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். நல்லாட்சி காலத்தில் காணப்பட்ட ஊழல் ஒழிப்புக்குழுவில் அங்கம் வகித்திருந்த அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட பலர், ஊழல் ஒழிப்புப் பணிகளைத் திறம்பட முன்னெடுக்க பூஜித் ஜயசுந்தரவையே காவல்துறை மா அதிபராக நியமிக்க…
-
ஸ்பைடர்மேன் பார்க்க சென்ற ரசிகர்களை ஜனநாயகன் படம் பார்க்க வற்புறுத்திய தியேட்டர் ஓனர்.. ரசிகர்கள் கொந்தளிப்பு
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு திரையரங்கில் ‘ஸ்பைடர்மேன்’ படம் பார்க்க வந்த ரசிகர்களை, விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை பார்க்குமாறு தியேட்டர் நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பைடர்மேன் திரைப்படத்தை காலை 11:30 மணி காட்சிக்காக செல்போன் செயலி மூலம் டிக்கெட் புக் செய்து திரையரங்கிற்கு வந்த ஏராளமான ரசிகர்கள், டிக்கெட்டில் நேரம் தவறாக அச்சிடப்பட்டுள்ளதாகவும், படம் இரவு 11 மணிக்குத்தான் திரையிடப்படும் என்றும் தியேட்டர் நிர்வாகம் திடீரென தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.…
-
டேட்டிங் செயலியின் மோசடிகள்..
டெல்லியில் டேட்டிங் செயலி மூலம் ஒருவரை சந்தித்த இளைஞருக்கு முதல் நாளில் 20,500 ரூபாய் செலவான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் அறிமுகமான பெண்ணை சந்திக்க சென்ற அந்த இளைஞர், குறிப்பிட்ட ஒரு பப்புக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார். அங்கு மது அருந்தாத போதிலும், அந்த பெண் ஷாம்பெயின் மற்றும் ஹூக்கா என விலையுயர்ந்த பொருட்களை தாராளமாக ஆர்டர் செய்துள்ளார். இறுதியில் பில் தொகை 20,500 ரூபாயை தாண்டியபோது, பில் வரும் நேரத்தில் அந்த…
-
யாழ் வசாவிளானில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்: இராணுவத்திடம் மனுவும் கையளிப்பு!
யாழ்ப்பாணம் – வசாவிளான் பகுதியில் 40 ஆண்டுகளாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் நிறைவில், வசாவிளான் பகுதியில் உள்ள இராணுவ முகாம் அதிகாரிகள் ஊடாக யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதிக்குக் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றையும் அவர்கள் கையளித்தனர். தமது நிலங்கள் மீள ஒப்படைக்கப்படும் வரை, இனிவரும் ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை முதல் மதியம்…
-
அலையோடு விளையாடும் நாய்கள்!
மனிதர்கள் அலையாடல் செய்து பார்த்திருப்போம். நாய்கள் செய்து பார்த்ததுண்டா? உலக நாய் அலையாடல் போட்டியில் (World Dog Surfing Championships) வெவ்வேறு இனங்களின் சிறிய, பெரிய நாய்கள் பங்கெடுத்தன. ஆண்டுதோறும் வட கலிபோர்னியாவின் பசிஃபிக்கா (Pacific) நகரில் நடைபெறுகிறது போட்டி. இந்த ஆண்டு 10ஆவது முறையாக நடைபெறுகிறது. செல்லப்பிராணிகளைத் தத்தெடுப்பது, விலங்குகளுக்கு நிதி திரட்டுவது ஆகியவை இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும். வெற்றியாளர் எதைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்? 🐕 அலையாடல் பலகையில் மிதக்கும் நேரம் 🐕 அலைகளின் அளவு…
-
தென்கொரியாவில் இதுவரை இல்லாத வெப்பம்
தென்கொரியாவில் இன்று (2 ஆகஸ்ட்) வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. யாங்சான் (Yangsan) நகரில் 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. தென்கொரியாவில் நூறாண்டுக்கு முன்பு வெப்பநிலைப் பதிவு தொடங்கியது முதல் இதுவே ஆக அதிக வெப்பம். யாங்சான் நகரம், தலைநகரிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அந்நகரில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக வெப்பம் 40 டிகிரி செல்சியசைக் கடந்திருக்கிறது. தென்கொரியாவின் பல நகரங்களில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்குமேல் உயர்ந்திருக்கிறது. இன்று 20க்கும் அதிகமான…
-
இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கி 43 ஆண்டுகள்
43 ஆண்டுகளுக்கு முன்பு, 1983 ஜூலை கடைசி நாட்களில், ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கத்தினதும் பாதுகாப்புப் படைகளினதும் ஆதரவுடன் சிங்களப் பேரினவாத குண்டர்கள் கொழும்பு மற்றும் இலங்கையின் பிற பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளை கட்டவிழ்த்துவிட்டனர். இது பிரிவினைவாத, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் நடத்தப்பட்ட 26 ஆண்டுகால இனவாதப் போரைத் தூண்டியது. 1 ஆகஸ்ட் 1983 அன்று இலங்கையின் கொழும்பு நகரின் புறக்கோட்டை பகுதியில் தமிழர்களின் கடைகள் எரிக்கப்பட்டன. இனக்…