Author: Six Side Media

  • பத்தேகம துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் உயிரிழப்பு

    பத்தேகம, ஹல்பேதொட பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது இன்று (27) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கார் ஒன்றில் வந்த நபர்கள் இத்துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பெண்களும், ஒரு ஆணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்தனர்.

  • ஹோர்முஸ் நீரிணை முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது – ட்ரம்ப்

    ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான்–அமெரிக்கா இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது தொடர்பில் ஈரான் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் முன்வைத்துள்ள நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க முடியும் என்றும், அணுசக்தித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்றும் ஈரான் தரப்பு தெரிவித்திருந்தது. எனினும், அந்த நிபந்தனைகளை…

  • பேங்கொக்கில் கடும் வெள்ளம்

    கனமழையால் பேங்கொக்கில் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தாய்லாந்து தலைநகர் ‘பேரிடர் பாதிப்புக்குள்ளான மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ளது. 48 மணி நேரத்தில் சுமார் 300 மில்லிமீற்றர் மழை பெய்ததால், முக்கிய வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பல பகுதிகளில் மக்கள் இடுப்பளவு நீரில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழை தொடரக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரித்துள்ள நிலையில், கால்வாய்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்கு மாற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பேரிடர் நிவாரண…

  • “உலகில் உள்ள தெற்கு நாடுகளில் ‘4F’-ல் இக்கட்டான சூழல்” – ஜ.நாவில் ஜெய்சங்கர் பேச்சு

    அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. அந்தக் கூட்டத்தில் ஐ.நா.வின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். நேற்று இந்தியா சார்பாக இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐ.நா.வில் உரையாற்றினார். அவர் பேசியதாவது… இந்த ஆண்டில், வளைகுடாப் பகுதியில் ஒரு மோதலை நாம் காண்கிறோம். இது ஏற்கெனவே சிக்கலாக உள்ள சூழலை மேலும் தீவிரமாக்குகிறது. அங்குத் தொடரும் பகைமை குறித்து நாங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளோம். சர்வதேச நீர்வழிப் பாதைகளைக் கடந்து செல்லும்…

  • இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 27, 2026 ஞாயிறு

    பஞ்சாங்கம் நாள் ஞாயிற்றுக்கிழமை திதி பிரதமை இரவு 9.59 வரை பிறகு துவிதியை நட்சத்திரம் உத்திரட்டாதி பகல் 12.35 வரை பிறகு ரேவதி யோகம் அமிர்தயோகம் ராகுகாலம் மாலை 4.30 முதல் 6 வரை எமகண்டம் பகல் 12.00 முதல் 1.30 வரை நல்லநேரம் காலை 7.45 முதல் 8.45 வரை / பகல் 3.15 முதல் 4.15 வரை சந்திராஷ்டமம் மகம் பகல் 12.35 வரை பிறகு பூரம் சூலம் மேற்கு பரிகாரம் வெல்லம் மேஷம்…

  • ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் புதிய திட்டம்

    ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஈரானின் முன்மொழிவை ஏற்று, அதற்கான தனது கடமைகளை நிறைவேற்றினால், ஈரானும் தனது கடமைகளை நிறைவேற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான புதிய திட்டம் தொடர்பில் இராணுவம், பாராளுமன்றம் மற்றும் அரசாங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆறு பேர் கொண்ட குழு கலந்துரையாடி வருவதாகவும் ஈரான்…

  • அச்சுவேலி சிறுவர் சீர்திருத்தப் பாடசாலை தாக்குதல் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

    அச்சுவேலி பகுதியில் இயங்கும் சிறுவர் சீர்திருத்தப் பாடசாலையில் இடம்பெற்றதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தாக்குதல் காட்சிகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த சீர்திருத்தப் பாடசாலையில் தங்கியுள்ள மாணவர்கள் சிலரை, மற்றுமொரு மாணவர் குழுவினர் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள், குறித்த சீர்திருத்தப் பாடசாலைக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில்…

  • லண்டன் வீதி விபத்தில் 16 வயது இலங்கை மாணவி உயிரிழப்பு

    பிரித்தானியாவின் லண்டன் நகரில் இடம்பெற்ற  வீதி விபத்தில் 16 வயதுடைய இலங்கை மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மெலீஷா பிரேமரத்ன என்ற அம்மாணவி, தனியார் பாடசாலையொன்றில் 12 ஆம் தரத்தில் கல்வி பயின்று வந்தார். கடந்த வியாழக்கிழமை (24) காலை 8.15 மணியளவில் அவர் வழக்கம்போல் பாடசாலைக்கு நடந்துகொண்டிருந்த வேளையிலேயே இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதியதில், பலத்த காயமடைந்த மெலீஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்து தொடர்பில் கைது…

  • ஹோர்முஸ் ஜலசந்திக்கு வேறு பெயரிட்டுள்ள ட்ரம்ப்

    அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஹோர்முஸ் ஜலசந்திக்கு ட்ரம்ப் ஜலசந்தி என பெயரிட்டு வரைபடம் ஒன்றை பகிர்ந்துள்ளார். கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என குறிப்பிட்டு, ஒன்ராறியோ ஏரியை அமெரிக்க ஏரி என குறிப்பிடும் வரைபடத்தை சமீபத்தில் ட்ரம்ப் பகிர்ந்தது நினைவிருக்கலாம். இந்நிலையில், ஈரானுடனான மோதல் அதிகரித்துவரும் நிலையில், ஹோர்மூஸ் ஜலசந்திக்கும் வேறு பெயரிட்டு அது தொடர்பான வரைபடம் ஒன்றை பகிர்ந்துள்ளார் ட்ரம்ப். தனது சமூக ஊடகப்பக்கத்தில், ஹோர்மூஸ் ஜலசந்தியை ட்ரம்ப் ஜலசந்தி என குறிப்பிட்டு வரைபடம் ஒன்றை…

  • புதிய ஏவுகணையை வீசிய ஈரான்.. ஹார்முஸில் பின்வாங்கிய அமெரிக்க கடற்படை?

    ஈரான் போர் தற்போது ஒரு ராணுவ மோதலாக மட்டுமின்றி, எண்ணெய், கப்பல் போக்குவரத்து, உலக எரிபொருள் விலை மற்றும் மத்திய கிழக்குப் பாதுகாப்பு ஆகியவற்றையும் நேரடியாகப் பாதிக்கும் சர்வதேச நெருக்கடியாக மாறியுள்ளது. இந்தச் சூழலில் அமெரிக்கா தனது கடற்படை நிலைப்பாட்டை மாற்றியதாக ஈரான் ஆதரவு ஊடகங்கள் வெளியிட்ட தகவல் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரான் ஏவியதாகக் கூறப்படும் ’காஸம் பாசீர்’ (Qasem Basir) கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க போர்க்கப்பல்கள் ஹார்முஸ் நீரிணைக்கு…