Author: Six Side Media
-
10 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை; தந்தையும் , தாத்தாவும் தலைமறைவு!
அம்பாலாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமியிடம், தனது தந்தை மற்றும் தாத்தா முறைக்கேடாக நடந்துக்கொண்டதாக பொலிஸாரிடம் இரண்டு வெவ்வேறான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. குறித்த சிறுமி, கடந்த 9ஆம் திகதி பாடசாலை விளையாட்டுப் போட்டிக்காக காலி பகுதிக்குச் சென்றுள்ளார். அதன்பின்னர் மிரிஸ்ஸவில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்குச் சென்றபோது, தான் சந்தித்த துயரங்கள் குறித்து பாட்டியிடமும் உறவினர் ஒருவரிடமும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சிறுமியை அம்பாலாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பாட்டி முறைப்பாடு அளித்துள்ளார். சிறுமி அளித்த…
-
டிரம்பின் வரிகளைத் தவிர்க்க சீனாவிற்கு உதவும் முக்கிய நாடுகளில் கனடாவும் ஒன்று: அமெரிக்கா குற்றச்சாட்டு
அமெரிக்க வெள்ளை மாளிகையின் வர்த்தக மற்றும் உற்பத்தி கொள்கை அலுவலகம் வெளியிட்ட “தி கிரேட் டிரான்ஸ்ஷிப்மென்ட் ஸ்கேம்” (The Great Transshipment Scam) என்ற அறிக்கையில், அமெரிக்க வரிகளைத் தவிர்ப்பதற்காகச் சீனா மேற்கொள்ளும் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தலுக்குக் கனடாவும் ஒரு முக்கியக் காரணியாக விளங்குவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிக வரிகளைத் தவிர்க்கும் பொருட்டு, சீனா தனது ஏற்றுமதிப் பொருட்களைச் சாதகமான வரி விகிதங்களைக் கொண்ட கனடா, மெக்சிகோ போன்ற மூன்றாம் நாடுகள் வழியாக அமெரிக்காவிற்குள் அனுப்புவதாக அவ்வறிக்கை…
-
இலங்கையில் அதிகரிக்கும் வெப்பநிலை – பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை, நாட்டின் பல மாவட்டங்களில் இன்று கவனத்திற்கொள்ள வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இந்த நிலைமை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை, சுமார் 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பமான காலநிலை காரணமாக…
-
நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் தாயும் அவரது காதலனும் கைது
கண்டி – வத்தேகம பகுதியில் நேற்று (13) நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைதான பெண் சிறுமியின் தாய் எனவும், ஆண் தாயின் காதலன் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
-
அந்த உணர்வு வந்தால் அந்த இடத்திலேயே நிற்க மாட்டேன் – திறந்த மனதுடன் பதிலளித்த அனிருத்!
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் பாடல்களை வழங்கி முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், தமிழில் மட்டுமின்றி, இந்தியத் திரையுலகிலும் பிரபலமான இசையமைப்பாளராகத் திகழ்ந்து வருகிறார். தற்போது ஷாருக்கானின் ‘கிங்’, ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’, ‘தர்மன்’, அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம், நானியின் ‘தி பாரடைஸ்’, ‘AK 64’ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவரிடம், திரைப்படப் பணிகளில் எப்போதாவது…
-
வெளிநாட்டு அரிய வகை குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமிடம் ஆவணங்களை கோரியது வனத்துறை!
தென்னிந்திய திரைப்பட நடிகர் விக்ரம், அரிய வகை விலங்கான ‘லார் கிப்பன்’ (Lar Gibbon) குரங்குடன் கொஞ்சி விளையாடும் காணொளி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது தேசிய அளவில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விக்ரம் லார் கிப்பன் வகை குரங்குடன் விளையாடும் காணொளியை திங்கட்கிழமை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இது இணையத்தில் பரவியதை அடுத்து எழுந்த எதிர்ப்பையடுத்து, சில மணி நேரங்களிலேயே அந்த காணொளி அவரது கணக்கிலிருந்து நீக்கப்பட்டது. இந்த…
-
மேரின்லேண்டில் இருந்து மேலும் 6 திமிங்கலங்கள் அமெரிக்க அக்வேரியங்களுக்கு இடமாற்றம்
ஒன்டாரியோவின் நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில் இயங்கி வந்த மேரின்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் இருந்து மேலும் 6 பெலுகா (beluga) திமிங்கலங்கள் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, இந்த திமிங்கலங்கள் டொராண்டோவின் பியர்சன் விமான நிலையத்திலிருந்து சிகாகோவில் உள்ள ‘ஷெட் அக்வேரியம்’ (Shedd Aquarium) மற்றும் அட்லாண்டாவில் உள்ள ‘ஜார்ஜியா அக்வேரியம்’ (Georgia Aquarium) ஆகியவற்றிற்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டன. இந்த மாற்றத்தின் மூலம் மேரின்லேண்டில் உள்ள திமிங்கலங்களின் எண்ணிக்கை 11…
-
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடாத்தும் ”நூல்களின் சங்கமம் நூல் கண்காட்சி 2026”
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடாத்தும் ”நூல்களின் சங்கமம் நூல் கண்காட்சி 2026″‘ ஆகஸ்ட் 16, 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை, தமிழிசை கலாமன்ற மண்டபத்தில் இரண்டாவது தடவையாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல எழுத்தாளர்கள் தங்களது நூல்களை காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் முன்வந்துள்ளார்கள். அத்துடன் சில புதிய நூல்களின் வெளியீடும் இடம்பெறவுள்ளதுடன் இளையோர் நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
-
‘யாருக்கும் தீங்கு செய்யாத தேவதை’: உயிரிழந்த 4 வயது சிறுமி குறித்து தாய் நெகிழ்ச்சி
மணிட்டோபாவில் உள்ள லாங் பிளைன் ஃபர்ஸ்ட் நேஷன் (Long Plain First Nation) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 4 வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்த சிறுமி குறித்து அவரது தாய் கூறுகையில், “அவள் தனது தங்கைகளுக்குக் கூட ஒருபோதும் தீங்கு செய்யாத ஒரு தேவதை. இந்த மாதத்துடன் அவளுக்கு 5 வயது பூர்த்தியாகி பள்ளிக்குச் செல்ல வேண்டியவள்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தின் போது சிறுமியின் 1 மற்றும் 2…
-
கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய இளைஞன், பெந்தோட்டை கடலில் மூழ்கி உயிரிழப்பு
இந்தியாவின் பெங்களூரிலிருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐந்து இந்திய இளைஞர்களில் ஒருவர், கடலில் மூழ்கிக் காணாமல்போயிருந்த நிலையில் அவரது உடலம் மீட்கப்பட்டுள்ளது. காலி – பெந்தோட்டை உள்ள சுற்றுலா விடுதிக்கு அருகில் கடலில் நீராடிக்கொண்டிருந்த குறித்த இளைஞன் கடல் அலையில் அள்ளுண்டுச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக விடுதி நிர்வாகத்தினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், பெந்தோட்டை காவல்துறையினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இளைஞனின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்…