Author: Six Side Media

  • மோர்கன் வாலன் இசைக்கச்சேரியில் குடும்பத்தினர் மீது சிறுநீர் கழித்த நபர் கைது

    பால்டிமோரில்  நடைபெற்ற பிரபல பாடகர் மோர்கன் வாலனின் இசைக்கச்சேரியின் போது, வட கரொலைனாவைச் சேர்ந்த ஜெய்சன் ரீட் (Jayson Reed – 33) என்ற நபர், அங்கு வந்திருந்த குடும்பத்தினர் மீது சிறுநீர் கழித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இரண்டாம் நிலைத் தாக்குதல் தொடர்பான 4 பிரிவுகள் மற்றும் பொது இடத்தில் சிறுநீர் கழித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. டிராய் கிரேவெல்டிங்  என்பவர் தனது மனைவி, சகோதரன் மற்றும் 8, 11 வயதுடைய இரு…

  • சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த ஹேமில்டன் நபர் 3 தசாப்தங்களுக்குப் பிறகு கலிபோர்னியாவில் கைது

    கனடாவில் சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஹேமில்டனைச் சேர்ந்த சார்லஸ் பீட்டர் பில்லோன் (Charles Peter Billone – 64) என்பவர், 3 தசாப்தங்களுக்கும் (30 ஆண்டுகள்) மேலாக தலைமறைவாக இருந்த நிலையில் கலிபோர்னியாவின் சாண்டா குரூஸ் (Santa Cruz) பகுதியில் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் (ICE) கைது செய்யப்பட்டுள்ளார். 1991-ஆம் ஆண்டு முதல் கனடாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியாக அமெரிக்க அதிகாரிகள் இவரைக் குறிப்பிட்டுள்ளனர்.…

  • மின்சார ஸ்கூட்டர், ஈ-பைக் விபத்துக்களால் 2025-இல் 10 கனடியச் சிறுவர்கள் உயிரிழப்பு

    கனடியக் குழந்தைகள் நலக் கண்காணிப்புத் திட்டம்  வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் மின்சார ஸ்கூட்டர் மற்றும் மின்சார மிதிவண்டிகளைப் (e-bikes) பயன்படுத்தியபோது ஏற்பட்ட படுகாயங்கள் காரணமாக 10 கனடியச் சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.  குழந்தைகள் நல மருத்துவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், 48 தீவிர காயங்கள் அல்லது உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 26 சிறுவர்கள் இரண்டு நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்; 12 சிறுவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சேர்க்கப்பட்டனர். விபத்துக்குள்ளானவர்களில் 47% பேருக்குத் தலையிலும், 40%…

  • நோர்த் பே சூதாட்ட விடுதியில் வன்முறை 44 வயது நபர் கைது!

    கனடாவின் ஒன்டாரியோவிலுள்ள நோர்த் பே பகுதியில் அமைந்துள்ள ‘காஸ்கேட்ஸ் கேசினோ’ சூதாட்ட விடுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து, ஸ்டர்ஜன் ஃபால்ஸ் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பைன்வுட் பார்க் டிரைவில் உள்ள அந்தச் சூதாட்ட விடுதிக்குள் இரண்டு ஆயுதங்களுடன் நபர் ஒருவர் நுழைந்துள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து, நேற்று முன்தினம் அதிகாலை 12:15 மணியளவில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். “அந்த நபர் சூதாட்டப் பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த பொருட்களைச்…

  • கனடாவின் நோவா ஸ்கோடியாவில் மனித எச்சங்கள் மீட்பு!

    கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்திலுள்ள கோல்செஸ்டர் கவுன்டீ பகுதியில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். டெபர்ட் பகுதிக்கு அருகிலுள்ள காடடர்ந்த பகுதியில் மனித எச்சங்கள் இருப்பதாகக் கடந்த ஜூலை 22 ஆம் திகதி கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டனர். மீட்கப்பட்ட எச்சங்கள் ஒரு ஆணுடையது என்றும், அவரது மரணத்தில் ஏதேனும் குற்றச் செயல்கள் அடங்கியிருக்கலாம் என நம்புவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், நோவா ஸ்கோடியா மருத்துவ பரிசோதனை…

  • கனடாவில் மகன்களைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை!

    கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திலுள்ள செயிண்ட் ஜான் நகரில், தனது இரு மகன்களைக் கொடூரமாகக் கொலை செய்த 46 வயதான ரோமன் காமிஷ்னி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி அதிகாலை, காமிஷ்னி தனது 10 மற்றும் 17 வயதுடைய இரு மகன்களையும் கத்தியால் குத்திக் கொலை செய்தார். பின்னர், ‘நெயில் கன்’ ஆணி அடிக்கும் கருவி மூலம் தனது தலையில் தானே அடித்துக்கொண்டு…

  • பிரித்தானிய பிரதமரின் நிபுணர் ஆலோசகராக தமிழ் வம்சாவளி

    தமிழ் வம்சாவளியான கெளதம் ரங்கராஜனை கட்டமைப்பு மற்றும் செயல்முறைக்கான புதிய நிபுணர் ஆலோசகராகத் தனது நிர்வாகத்தில் சேர்த்துள்ளார் பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம். பிரித்தானிய பிரதமராக பதவியேற்றுள்ள ஆன்டி பர்னாம், அமைச்சரவை மற்றும் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி, பிரித்தானியாவில் வசித்து வரும் தமிழ் வம்சாவளியான கெளதம் ரங்கராஜனை கட்டமைப்பு மற்றும் செயல்முறைக்கான புதிய நிபுணர் ஆலோசகராகத் தனது நிர்வாகத்தில் சேர்த்துள்ளார் ஆன்டி பர்னாம். கெளதம் ரங்கராஜன், தமிழ்நாட்டின் கும்பகோணத்தை பூர்விகமாக கொண்ட முன்னாள்…

  • கட்டுக்கடங்காத காட்டுத் தீ ; ஜெர்மனியில் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள்

    மேற்கு ஜெர்மனியில் பெல்ஜியம் எல்லைக்கு அருகில் ஏற்பட்ட காட்டுத் தீயின் பரவலை தொடர்ந்து, 2,000 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த பகுதியிலுள்ள கிராமத்தில் வசிக்கும் மக்கள் அதிகாலை 4:00 மணியளவில் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி, அருகிலுள்ள கிராமத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, மக்கள் அத்தியாவசியப் பொருட்கள், அடையாள ஆவணங்கள் மற்றும் அவசியமான மருந்துகளை மட்டும்…

  • சகோதரிகளென தெரியாமல் 30 வருடங்களாக நண்பிகளாக பழகிய அதிசயம்

    30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா, மினல் என்கிற இரண்டு பெண்கள் தாங்கள் சகோதரிகள் என்பது தெரியாமலேயே தோழிகளாக பழகியிருக்கிறார்கள். சமீபத்தில் டி.என்.ஏ சோதனையில் அவர்கள் இருவரும் சகோதரிகள் என்பதும் அவர்கள் 30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து தத்துக் கொடுக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து இரு தோழிகளும் கட்டியணைத்து, கண்ணீர் மல்க தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நாங்கள் இருவரும் முப்பது வருடங்களாக சகோதரிகளாகவே இருந்திருக்கிறோம். ஆனால் எங்களுக்கு அது தெரியவில்லை…

  • அம்பாறையில் தாவித்தாவி போதைப்பொருள் விற்ற ஸ்பைடர் வுமன்!

    அம்பாறை- சாய்ந்தமருதுப் பகுதியில் கட்டிடங்களின் மாடிகளுக்கு இடையே சிலந்தி போல் தாவித் தப்பிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததன் காரணமாக ஸ்பைடர் வுமன் என்றழைக்கப்பட்ட பெண் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார். அவர், நீண்டகாலமாக ‘ஐஸ்’ உள்ளிட்ட போதைப்பொருட்களை விநியோகித்து வருபவர் என பொலிஸார் கூறியுள்ளனர். அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, பெண் பொலிஸாரின் உதவியுடன் மாறுவேடத்தில் சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.…