Author: Six Side Media

  • பல நூறாண்டுகள் மாறாத மரபு : நல்லூரை வந்தடைந்தது கொடிச்சீலை.

    வட புலத்தின் குடும்ப விழாவாக கொண்டாடப்படும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவம், நாளைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. நூற்றாண்டுகளைக் கடந்து தொடரும் அந்தப் பாரம்பரியத்தின் முக்கியமான ஒரு நிகழ்வாக, நல்லூரானுக்குரிய கொடிச்சீலை இன்று முற்பகல் ஆலயத்தை வந்தடைந்தது. நல்லூரானுக்குரிய கொடிச்சீலையை பாரம்பரியமாக வழங்கி வரும் செங்குந்தர் மரபினைச் சார்ந்தவர்களால், அந்தப் புனிதக் கொடிச்சீலை சிரசில் சுமந்து கொண்டு வரப்பட்டு, பின்னர் தேரில் வைத்து ஊர்வலமாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை வந்தடைந்தது. பாரம்பரியம் மாறாமல், வழிவழியாகப் பேணப்பட்டு வரும்…

  • டெங்கு பாதிப்பு: இலங்கையில் 92,000 ஐ கடந்த நோயாளர்களின் எண்ணிக்கை!

    இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,000 த்தை கடந்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 6,671 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,011 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை டெங்கு நோய் காரணமாக 68 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • கொத்துக்கொத்தாக இறந்து மிதக்கும் மீன்கள்

    சென்னை எண்ணூர் கழிமுகம் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலவகையான மீன்கள், இறால்கள் மற்றும் நண்டுகள் கொத்துக்கொத்தாக உயிரிழந்து நீரில் மிதப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் உயிரிழப்பால் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதுடன், கடல் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் இரசாயனக் கழிவுகள் நீரில் கலந்ததே மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் உயிரிழந்ததற்கு காரணமாக இருக்கலாம் என அப்பகுதி…

  • வெஸ்ட்ஜெட் பணியாளர் பாலியல் துன்புறுத்தல் வழக்கு: $4.5 மில்லியன் இழப்பீட்டு ஒப்பந்தத்திற்கு நீதிமன்றம் ஒப்புதல்

    வெஸ்ட்ஜெட் (WestJet) விமான நிறுவனத்தின் பெண் பணியாளர்கள் தொடர்ந்த கூட்டுப் பாலியல் துன்புறுத்தல் வழக்கில், $4.5 மில்லியன் (சுமார் ₹45 லட்சம்) இழப்பீடு வழங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக வழக்கறிஞர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘JFK Law’ என்ற சட்ட நிறுவனம் தனது இணையதளத்தில், இந்த இழப்பீட்டு ஒப்பந்தம் நியாயமானது மற்றும் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் நலனுக்கு உகந்தது என நீதிபதி தீர்ப்பளித்து ஒப்புதல் வழங்கியதாகத் தெரிவித்துள்ளது. பணிபுரியும் இடத்தில் பாலியல் துன்புறுத்தல் இல்லாத பாதுகாப்பான…

  • இலங்கை பள்ளர் – பாண்டியர் தொடர்பு: மறைக்கப்பட்ட வரலாறா?

    இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் தமிழ்ச் சமூகக் குழுக்களில் பள்ளர் சமூகமும் ஒன்றாகும். தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக மக்கள் இடம்பெயர்வு, வணிகம், அரசியல் மற்றும் இராணுவத் தொடர்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பாண்டியர் மற்றும் சோழர் காலங்களில் தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகள் குறிப்பிடத்தக்கவை. அப்படியானால் இலங்கைப் பள்ளர்களுக்கும் பாண்டியர்களுக்கும் தொடர்பு இருந்ததா? இது வரலாற்று ஆய்வுக்கு உரிய முக்கியமான கேள்வியாகும். சில சமூக வரலாற்றுக் கருத்துகள், தென்னிந்தியாவில் இருந்து…

  • மிக நீளமான சிறுநீரக கல்லை அகற்றி சாதனை படைத்த திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள்!

    திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிக நீளமான சிறுநீரக கல்லை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைத்துள்ளனர். சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் (14.08.2026) குறித்த சத்திர சிகிச்சை இடம்பெற்றது. பிரேசில் நாட்டில் 2003 ஆம் ஆண்டு 1.9 கிரேம் நிறையுடைய சிறுநீரக கல் அகற்றப்பட்டதாகவும் உலக சுகாதார திணைக்கள அறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனாலும் திருகோணமலை பொது வைத்தியசாலையில்…

  • நாடு எரிகிறது, ஆனால் மத்திய அரசு அமைதி காக்கிறது

    கனடாவில் காட்டுத்தீ தீவிரமடைந்து வரும் வேளையில், காலநிலை மாற்றம் மற்றும் உமிழ்வு குறைப்பு கொள்கைகள் குறித்த விவாதங்களை மத்திய அரசு தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் 3 மில்லியன் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு காட்டுத்தீயால் எரிந்து சாம்பலாகியுள்ளது. குறிப்பாக பி.சி (BC) மற்றும் ஒன்டாரியோ பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். தீவிர காலநிலை மாற்றச் சூழல் நிலவியபோதிலும், அரசாங்கம் நுகர்வோர் கார்பன் விலை நிர்ணயம் (carbon price), மின்சார வாகன தரநிலைகள்…

  • டொராண்டோ மிதிவண்டிப் பாதைகளை அகற்ற ஃபோர்டு அரசுக்கு ஒன்டாரியோவின் உச்ச நீதிமன்றம் அதிகாரம் அளித்துள்ளது

    ஒன்டாரியோவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் (Court of Appeal), டொராண்டோவின் மூன்று முக்கியச் சாலைகளில் உள்ள மிதிவண்டிப் பாதைகளை (Bike Lanes) அகற்றுவதற்கு டக் ஃபோர்டு (Doug Ford) தலைமையிலான மாகாண அரசுக்கு அதிகாரம் உண்டு எனத் தீர்ப்பளித்துள்ளது. புளூர் தெரு (Bloor Street), யாங் தெரு (Yonge Street) மற்றும் யுனிவர்சிட்டி அவென்யூ (University Avenue) ஆகியவற்றில் உள்ள மிதிவண்டிப் பாதைகளை அகற்றிவிட்டு, மோட்டார் வாகனப் பாதைகளாக மாற்ற வகை செய்யும் மாகாண அரசின் ‘சட்டம் 212’…

  • ஸ்பெயின் காட்டுத் தீ… 15,000 ஹெக்டேர் எரிந்து நாசம்.. வீடுகளை விட்டு வெளியேறிய குடும்பங்கள்!!

    ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் நிலவி வரும் கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக காட்டுத்தீ வேகமாகப் பரவி வரும் நிலையில், ஸ்பெயினின் மாட்ரிட் (Madrid) மற்றும் அவிலா (Avila) பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயால் சுமார் 15,000 ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே, வரலாறு காணாத கடும் வெப்ப அலையால் ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக காட்டுத்தீ சம்பவங்களும் அந்நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகின்றன. அந்தவகையில் தான், ஸ்பெயினில் கடந்த ஒருவாரமாக நிலவிவரும்…

  • மீண்டும் உணவு லாரியில் பதுங்க வேண்டிய நிலை வரும்’ – டிரம்புக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

    ஈரான் போரில் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ள நிலையில், அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானைத் தோற்கடித்த பிறகு ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாக விரைவில் அறிவிக்கப் போவதாக தெரிவித்தார். உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியமான இந்த நீரிணையை அமெரிக்கா கைப்பற்றும் என்ற அவரது பேச்சு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கருத்துக்கு…