Author: Six Side Media
-
மறைந்த ஊடகர் சபேஸ்வரனுக்கு வடமராட்சியில் அஞ்சலி
யாழ்.தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரான மறைந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மைக்கல் நேசக்கரம், மற்றும் மைக்கல் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் மைக்கல் நேசக்கரம் அலுவலகத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, மறைந்த ஊடகவியலாளர் ஆ. சபேஸ்வரனின் திருவுருவ படத்திற்கு அக வணக்கம் செலுத்தப்பட்டு, ஈகை சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.தொடர்ந்து நினைவுரைகளை மூத்த ஊடகவியலாளர் தயாபரன், யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் பிருந்தாபன் பொன்ராசா ஊடகவியலாளர்களான…
-
இன்று ஆகஸ்ட் 16, இராமகிருஷ்ண பரமஹாம்சர் நினைவு தினம்.
மகாவிஷ்ணு , சிவபெருமான் ஆகிய இருவரின் அருளால் 1836 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியன்று மேற்கு வங்காளத்தில் உள்ள குமார்பூர் என்ற கிராமத்தில் குடிராம் – சந்திராமணி என்ற தம்பதியருக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மகனாக பிறந்தார் . குழந்தைப் பருவத்தில் அவர் கதாதர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார் . கதாதர் தக்ஷினேஸ்வரில் தஞ்சமடைந்த போது ராமகிருஷ்ணர் என்ற பெயரைப் பெற்றார் . படிப்பில் நாட்டமில்லாத ராமகிருஷ்ணர் பஜனைகள் , புராணக் கதைகள் ,…
-
அமெரிக்க மத்திய கட்டளையின் தலைவர் USS ஆபிரகாம் லிங்கன் கப்பலுக்கு வருகை
அமெரிக்க மத்திய கட்டளையின் (US CENTCOM) தலைவர் அட்மிரல் பிராட் கூப்பர், மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள USS ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து போர்ப் பணியில் ஈடுபட்டுள்ள இந்த கப்பலின் மாலுமிகள் மற்றும் ஊழியர்களுக்கு நீட்டிக்கப்பட்ட பணிப் பிரிவு காரணமாக மனநல பாதிப்புகள் மற்றும் மன உறுதி (morale) குறைவது குறித்த கவலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து…
-
வவுனியாவில் வீடு உடைத்து பெண் கூட்டு பாலியல் துஸ்பிரயோகம் : ஐவர் கைது!
வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு பாலியல் துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. கடந்த 08 ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து உட் சென்ற சிலர் அங்கிருந்த வாகனச் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். பின்னர், வீட்டு உரிமையாளரான 51 வயது பெண் அணிந்திருந்த நகைகளை கழற்றி எடுத்து விட்டு மூவரும்…
-
ஷங்காய் மாநாட்டிற்கு செல்லும் ஜனாதிபதி அநுர
கொழும்பு மற்றும் வொஷிங்டன் இடையிலான ஆழமான இராஜதந்திர உறவுகள் நீடித்து வரும் பின்னணியில், சீனா இலங்கையுடனான தனது உறவை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள தீவிர வியூகங்களை வகுத்து வருகிறது. கடந்த காலங்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சிறப்புப் பிரதிநிதியான செர்ஜியோ கோருடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேரடியாகப் பல உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். வர்த்தகப் போரில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சீனாவுடன் இலங்கை சற்று இடைவெளியைப் பேணியதற்கும், சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய விதிக்கப்பட்ட…
-
கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!
கொழும்பு, காலி முகத்திடல் கடற்கரையை ஒட்டிய பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாகக் கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இன்று (16) ஞாயிற்றுக்கிழமைகாலை கோட்டை பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில் இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கரை ஒதுங்கிய சடலம் சிதைந்த நிலையில் காணப்படுவதால், உயிரிழந்தவர் யார் என்பதை உடனடியாக அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த நபர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட போது இளஞ்சிவப்பு நிற நீண்ட கை சட்டையும் மற்றும் அரைக்கால் சட்டையும்…
-
அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50 சதவீதமாக வீழ்ச்சி – வெரிட்டே ரிசர்ச் நிறுவனம்
வெரிட்டே ரிசர்ச் (Verité Research) நிறுவனம் நடாத்திய Gallup பாணியிலான தேசத்தின் மனநிலை (Mood of the Nation) பற்றிய ஒட்டுமொத்த ஜூலை 2026 கருத்துக்கணிப்பில், அரசாங்கத்தின் மீதான மக்களின் அங்கீகாரம் (Government approval rating) 50% ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த பிப்ரவரி 2026 இல் பெறப்பட்ட தேர்தல் வெற்றிக்கு பின்னரான உச்ச நிலையான 65% உடன் ஒப்பிடுகையில் ஒரு குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.கருத்துக்கணிப்பு பங்குதாரராக வான்கார்ட் சர்வே (பிரைவேட்) லிமிடெட் (Vanguard Survey (Pvt) Ltd.)…
-
ஹங்கேரியில் போலந்து சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பேர் உயிரிழப்பு
ஹங்கேரியின் நெடுஞ்சாலையில் போலந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டை வடகிழக்கு நகரமான நைரெஜிஹாசாவுடன் இணைக்கும் M3 நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உள்ளூர் நேரப்படி சுமார் 01:00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்தின் சாரதி வாகனத்தைச் செலுத்தும்போது தூங்கியதே விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸார் கருதுகின்றனர். இதனை…
-
பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை அணிந்து மக்கள் போராட்டம்!
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்று (16) ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இன்றைய தினம் போராட்ட வடிவத்தை சற்று மாற்றி , பலாலி செபஸ்தியார் ஆலய முன்றலில் இருந்து, கறுப்பு மேலங்கி அணிந்து, கறுப்புக்கொடிகளை கைகளில் ஏந்தியவாறு பலாலி சந்தி வரையில் ஊர்வலமாக வந்து , பலாலி சந்திக்கு அருகில் உள்ள இராணுவ முன்னரங்கு முன்பாக கூடி , கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் வசமுள்ள தமது…
-
ஹூதி (Houthi) அமைப்பினரின் தாக்குதல்களுக்குப் பிறகு செங்கடல் துறைமுக நடவடிக்கைகளை யேமன் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் 25-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதை அடுத்து, யேமனின் முக்கியச் செங்கடல் துறைமுகமான மோகா (Mokha) தனது செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1.6 கோடி அமெரிக்க டாலர் (around $16 million) மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாகத் துறைமுக இயக்குநர் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவின் ராணுவக் குவிப்புகள் மற்றும் அவர்களின் ஆதரவுப் படைகளைக் இலக்கு வைத்தே இந்தத் தாக்குதலை…