Author: Six Side Media

  • தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பு

    கூட்டுறவு வங்கிகளில் ரூ 75,000 ரூபாய் வரையிலான விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாகவும், ஒரு லட்சம் வரை பயிர் கடன் பெற்றவர்களுக்கு 75,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை தொடர்பான கூட்டத்தொடர் நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் நடைபெற்றது. இதில் பேரவை விதி எண் 110 கீழ் தமிழக முதலமைச்சர் விஜய் பயிர் கடன் தள்ளுபடி குறித்து தெரிவித்ததாவது, ”மக்கள்…

  • காசா அமைதித் திட்ட பேச்சுவார்த்தையில் முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயர் பங்கேற்பு

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடங்கியுள்ள காசா அமைதித் திட்டத்தை மீண்டும் புதுப்பிக்கும் உயர்மட்ட பேச்சுவார்த்தையில், முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயர் ஜெருசலேமில் பங்கேற்றார். போருக்குப் பிந்தைய காசாவின் நிர்வாகம் மற்றும் மறுசீரமைப்பைக் கண்காணிப்பதற்காக அமெரிக்காவின் ஆதரவோடு உருவாக்கப்பட்ட ‘அமைதி வாரியத்தின்’ (Board of Peace) நிர்வாகக் குழு உறுப்பினராக பிளேயர் செயல்படுகிறார். ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களை முழுமையாகத் துறக்கும் வரை காசாவிலிருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்காது என்றும், மறுசீரமைப்புப் பணிகள் தொடங்காது என்றும்…

  • திட்டமிடப்பட்ட கொலை முயற்சியுடன் தொடர்புடைய துப்பாக்கி கூலிப்படை வலையமைப்பு – வெளியான குறுஞ்செய்திகள்

    டொராண்டோ தெற்கு தடுப்புக் காவல் மையத்தின்  உயர் சிறை அதிகாரி ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொலை முயற்சிக்குப் பின்னால், ‘Signal’ செயலி மூலம் இயங்கிய கூலிப்படை வலையமைப்பு உள்ளதை நீதிமன்ற ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.  “Danny Phantom”, “Lebron James”, “Dwayne Casey”, மற்றும் “Reality” போன்ற போலி பெயர்களைப் பயன்படுத்தி, சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்ட அதிகாரியின் முகவரி, வரைபடம் மற்றும் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.  டொராண்டோ காவல் அதிகாரி ஒருவரால் சட்டவிரோதமாக அணுகப்பட்ட போக்குவரத்து அமைச்சகத்தின்…

  • ஆண்டின் இறுதிக்குள் ‘எல் நினோ’ தீவிரமடைய 90% வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    நடப்பு ஆண்டில் நிலவும் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றம் ஆண்டின் இறுதிக்குள் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறுவதற்கு 90 சதவீத வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் பதிவான எல் நினோ நிகழ்வுகளை விட இது மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என கணிப்புகள் காட்டுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார். வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் வாழும் மக்களின் உடல் வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க…

  • மறைமுக விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்துமாறு ஷாருக் கான் உள்ளிட்ட பொலிவூட் பிரபலங்களுக்கு மஹாராஷ்டிர அரசு எச்சரிக்கை!

    தடைசெய்யப்பட்ட பாக்கு (Pan Masala) உற்பத்தி நிறுவனங்களின் மறைமுக விளம்பரங்களில் நடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என முன்னணி பொலிவூட் நடிகர்களான ஷாருக் கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெரொஃப் ஆகியோருக்கு, மஹாராஷ்டிர மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பிட்ட நடிகர்கள் ‘விமல்’ (Vimal) நிறுவனத்தின் ஏலக்காய் தயாரிப்பை விளம்பரப்படுத்துவது போல் நடித்திருந்தாலும், அந்த வர்த்தகநாமம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பாக்கு தயாரிப்புகளுக்கே பெரிதும் அடையாளப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 3.50 விலையில் விற்பனை செய்யப்படும் இந்த பாக்குகள்…

  • கசிந்தது ரஷ்யாவின் ரகசிய Plan

    பெலாரஸ் மற்றும் உக்ரைன் எல்லைகளை ஒட்டி ரஷ்யா 10 ரகசிய ட்ரோன் தளங்களை அமைத்துள்ளது, அவற்றில் 59 ஏவுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தளங்கள் மூலம் போலந்து, லிதுவேனியா, லாட்வியா உள்ளிட்ட பல NATO நாடுகள் ரஷ்ய ட்ரோன்களின் தாக்குதல் வரம்புக்குள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் படங்கள் மற்றும் கசிந்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், இந்தத் பகுதிகளில் குறைந்தது 59 புதிய ஏவுதளங்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. ஓடுபாதைக்கு பதிலாக நிலையான…

  • “உங்கள் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டது தவறுதான்”: சட்டப்பேரவையில் மன்னிப்பு கோரிய முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு சட்டமன்றம் சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் விவாதமாக மாறி வருகின்றது. இந்தநிலையில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமாரின் சார்பாக அவையில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளமை அனைவரிடமும் கவனத்தை ஈர்த்துள்ளது. சட்டப்பேரவையில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசும்போது முன்னாள் முதல்வர் என்று குறிப்பிடாமல் கருணாநிதியின் பெயரைக் கூறினார். அவர் பேசுகையில், “திருமங்கலம் பார்முலா முதல் 2026 வரை ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திட்டம் வரை கருணாநிதி, முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி…

  • அமெரிக்காவுக்கு எதிராக சுத்துப்போட்ட ஈரான்!

    அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் அதிஉயர் தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய அரசியல், ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்டனர். எனினும் இந்த இழப்பில் இருந்து மீண்ட ஈரான், அமெரிக்க ராணுவத் தளங்கள் இருந்த வளைகுடா நாடுகள் மீது கடுமையாக தாக்குதலை நடத்தியது. அதோடு முக்கிய கச்சா எண்ணெய் வர்த்தக தடமான ஹார்முஸ் நீரிணையையும்…

  • இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 17, 2026 திங்கள்

    பஞ்சாங்கம் நாள் திங்கள்கிழமை திதி பஞ்சமி இரவு 8.26 வரை பிறகு சஷ்டி நட்சத்திரம் அஸ்தம் காலை 7.43 வரை பிறகு சித்திரை யோகம் சித்தயோகம் ராகுகாலம் காலை 7.30 முதல் 9 வரை எமகண்டம் காலை 10.30 முதல் 12 வரை நல்லநேரம் காலை 6.15 முதல் 7.15 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை சந்திராஷ்டமம் சதயம் காலை 7.43 வரை பிறகு பூரட்டாதி சூலம் கிழக்கு பரிகாரம் தயிர் மேஷராசி…

  • அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தக் கெடு முடிந்தது: ஓமானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

    அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தத்தை எட்டவும், ஹோர்முஸ் ஜலசந்தியைப் (Strait of Hormuz) மீண்டும் திறக்கவும் வழங்கப்பட்ட 60 நாட்கள் கெடு முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஓமான் நாட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தி வழியே கப்பல் போக்குவரத்தை சீரமைக்கும் அமெரிக்க முயற்சிகளுக்கு ஓமான் குறுக்கே நின்றால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.  ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்வதற்கான பாதைகளை நிர்வகிக்க…