Author: Six Side Media
-
நெதன்யாகுவை சந்தித்தார் அமெரிக்கத் தூதர் ஜாரெட் குஷ்னர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அமைதித் திட்டத்தை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, அவரது மருமகனும் அமெரிக்கத் தூதருமான ஜாரெட் குஷ்னர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்துப் பேசினார். இதற்கு ஒரு நாள் முன்னதாக, எகிப்தில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் கலீல் அல்-ஹய்யா உடன் குஷ்னர் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தினார். ஆகஸ்ட் தொடக்கத்தில் இந்த 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்ததால், ஒப்பந்தத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் காசா மீதான தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே ஆயுதங்களை துறக்கும்…
-
தென்சீனக் கடலில் அமெரிக்கப் போர்க்கப்பல் 4 நாட்கள் மின்தடையால் பாதிப்பு
அமெரிக்க கடற்படையின் ‘யு.எஸ்.எஸ் பென்ஃபோல்ட்’ (USS Benfold) ஏவுகணை அழிப்புக் கப்பல், கடந்த ஜூலை 24 அன்று மின் உற்பத்திப் பொறிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தென்சீனக் கடலில் 4 நாட்கள் இயங்காமல் நின்றது. சுமார் 10,000 டன் எடையுள்ள இந்தக் கப்பலில் மின்தடை ஏற்பட்டதால், 32°C முதல் 37°C வரையிலான கடும் வெப்பத்தில் காற்றுச்சீரமைப்பி (AC), கழிப்பறைகள், சமையலறை மற்றும் குடிநீர் வசதிகள் இன்றி ஊழியர்கள் தவித்தனர். ‘யு.எஸ்.எஸ் ராபர்ட் ஸ்மால்ஸ்’ என்ற மற்றொரு அமெரிக்க…
-
தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை குறைக்க ட்ரம்ப் முடிவு
அமெரிக்காவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே நடைபெறும் கூட்டு இராணுவப் பயிற்சிகளை கணிசமாகக் குறைக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் தென் கொரியா அமெரிக்காவுக்கு போதிய ஆதரவு வழங்கத் தவறியதை இதற்கான காரணமாக ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். தனது சமூக ஊடகப் பதிவில், இந்த நடவடிக்கை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுடனான தனது நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் தென் கொரிய படைகள் ஆண்டுதோறும்…
-
சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த ஈரானின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்க வீரர்களைக் கொல்பவர்கள் அல்லது உயிருடன் பிடிப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என ஈரானிய இராணுவத் தலைமைத் தளபதி அமீர் ஹதாமி அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அமெரிக்க வீரர் ஒருவரைக் கொல்லும் அல்லது பிடிக்கும் ஈரானிய ஆணுக்கு 30,000 டொலரும், பெண்ணுக்கு 60,000 டொலரும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க வீரர் மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை அதன் மதிப்பை விட இருமடங்கு விலைக்கு அரசாங்கம் கொள்வனவு செய்து, அதற்குப் பதிலாக புதிய…
-
சர்வதேசத்தை அதிரவைத்த இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் பேச்சு!
காசாவில் தினமும் 30 முதல் 40 பேரைக் கொல்ல வேண்டும் என்றும், அங்கு மீண்டும் யூதக் குடியிருப்புகளை அமைக்க வேண்டும் என்றும் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்வீர் கூறியுள்ள கருத்து சர்வதேச அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இணையவழி உரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் இடாமர் பென்-க்வீர், “குஷ் கட்டிஃப் (Gush Katif) பகுதி மட்டுமல்லாது காசா முழுவதிலும் மீண்டும் குடியிருப்புகளை அமைக்க வேண்டும். பாலஸ்தீன மக்கள் அதிக அளவில்…
-
குமாரபுரம் படுகொலை – மீள விசாரிக்க உத்தரவு!
1996ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி திருகோணமலை, கிளிவெட்டி குமாரபுரம் கிராமத்தில் 24 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் அறுவருக்கு எதிராகவும் மறுவிசாரணை நடத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 24 தமிழ் பொதுமக்களைக் கொலை செய்தனர் எனவும் மேலும் 25 பேருக்குக் காயம் ஏற்படுத்தினர் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்துச் செய்யக்கோரி சட்ட மா அதிபர்…
-
ஹிருணிகா உள்ளிட்டோரின் வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பிரதிவாதிகள் தொடர்பான வழக்கை நவம்பர் 2ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதிகளை மறித்து, பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு இன்று (17) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது,…
-
நீதியின் ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிறைவடைந்த பேரணி
‘சர்வதேச விசாரணை தேவை’ என்ற கோரிக்கையை முன்வைத்து, தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ‘நீதியின் ஓலம்’ போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன. இன்று காலை யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணியாக ஆரம்பமான போராட்டம், வடக்கு–கிழக்கைச் சேர்ந்த மக்களின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து ஆஸ்பத்திரி வீதி ஊடாக கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் நோக்கி பேரணி சென்றடைந்தது. இதன்போது, கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல்…
-
இந்தியாவில் சோகம்: பீஹார் அசோக்தாம் கோவிலில் கூட்ட நெரிசல்; 07 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அசோக்தாம் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திங்கட்கிழமையான இன்று (17) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புனித ஸ்ராவன் மாதத்தில் மூன்றாம் திங்கட்கிழமை என்பதால் அசோக்தாம் சிவன் கோவிலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்காகத் திரண்டிருந்துள்ளனர். இதன்போது, மின்சார வயர் ஒன்று திடீரென அறுந்து விழுந்து மக்கள் நாலாபுறமும் அலறி ஓடியதால் ஏற்பட்ட கடும் கூட்ட…
-
பனிக் கரடியின் தூக்கத்தை கலைத்துவிட்டாராம்.. படகு ஓட்டுநருக்கு ரூ.5 லட்சம் அபராதம்!
அசந்து தூங்கி கொண்டிருந்த பனிக்கரடியின் தூக்கத்துக்கு இடையூறு செய்து எழுப்பிய புகாரில் படகு ஓட்டுநருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. பனிக்கரடியை தூக்கத்தை கலைத்ததற்கும் அபராதம் விதிப்பார்களா? என்று நீங்கள் கேட்டால் அந்த நாட்டின் சட்டம் அப்படியாக உள்ளது. இந்த சம்பவம் எங்கு நடந்தது? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். நார்வே நாட்டுக்கு சொந்தமாக ஸ்வால்பார்டின் என்ற தீவுக்கூட்டம் உள்ளது. இது நார்வே நாட்டின் வடதுருவத்தில் இருந்து சுமார் 620 மைல்…