Author: Six Side Media

  • தனது உறவினர்களுக்கு நச்சுக்காளான் கலந்த உணவை வழங்கி மூவரைக் கொன்றவருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனைக் கோரிக்கை

    ஆஸ்திரேலியாவில் தனது உறவினர்களுக்கு நச்சுக்காளான் கலந்த உணவை வழங்கி மூவரைக் கொன்ற வழக்கிலும், மற்றொருவரைக் கொல்ல முயன்ற வழக்கிலும் தண்டனை பெற்ற ஏரின் பேட்டர்சன் (Erin Patterson) வழக்கில் மேல்முறையீடு நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் வாதிடுகையில், பேட்டர்சனின் குற்றங்கள் “மிகவும் கொடூரமானவை” என்றும், அவருக்கு வழங்கப்பட்ட 33 ஆண்டுகள் கழித்து பிணை வழங்கும் தண்டனை போதாது என்றும் கூறினர். அவருக்குக் கடைசி வரை பிணை இல்லாத முழு வாழ்நாள் சிறைத்தண்டனை…

  • ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் கீவ் நகரில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்

    ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் கீவ் நகரில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நகரின் குடியிருப்பு கட்டிடங்கள், சேமிப்புக் கிடங்குகள், ஒரு பள்ளி மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஆகியவை பலத்த சேதமடைந்துள்ளன. தாக்குதலால் மின்சாரக் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. ரஷ்யா ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை (Ballistic Missiles) உக்ரைன் வான் பாதுகாப்புப் படையினரால் தடுக்க முடியவில்லை என்பதை உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்கா வழங்கிய ‘பேட்ரியாட்’…

  • அமெரிக்காவின் வாஷிங்டன் பெல்லா கடற்கரையில் கொலையாளி திமிங்கிலங்கள் கரைக்கு மிக அருகில் நீந்தி வந்துதுள்ளன

    அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஃபாக்ஸ் தீவின் (Fox Island) பெல்லா  கடற்கரையில் (Bella Bella Beach) விசித்திரமான மற்றும் அபூர்வமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. கடற்கரையில் மக்கள் நின்றுகொண்டிருந்தபோது, ஓர் உயிரியல் குடும்பத்தைச் சேர்ந்த கொலையாளி திமிங்கிலங்கள் (Orcas) கரைக்கு மிக மிக அருகில் நீந்தி வந்து அவர்களுக்கு ஆச்சரியமளித்தன. கடற்கரை மணல் கரைக்கு சில அடிகளே தூரத்தில் ஆழமற்ற பகுதியில் இந்தக் கொலையாளி திமிங்கலக் கூட்டம் மிக அமைதியாக நீந்திச் சென்றது. அந்தப் பகுதியில்…

  • அமெரிக்க மதுபானங்கள் விற்பனைக்கு வந்தாலும், பெரும்பான்மையான கனடியர்கள் அதை வாங்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

    மீண்டும் விற்பனைக்கு வந்தாலும் அமெரிக்க மதுபானங்களை வாங்கப்போவதில்லை என பெரும்பாலான கனடியர்கள் தெரிவித்துள்ளனர். கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான தற்போதைய வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் வரி விவகாரங்கள் காரணமாகவே இந்த புறக்கணிப்பு மனநிலை உருவாகியுள்ளது. சாத்தியமான வர்த்தக வரி விலக்கு ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக, அமெரிக்க மதுபானங்களை மீண்டும் கடைகளில் விற்பனைக்குக் கொண்டுவரத் தயாராக இருக்குமாறு ஃபெடரல் அதிகாரிகள் மாகாணங்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். இருப்பினும், பல மாகாணத் தலைவர்களும் நுகர்வோரும் அமெரிக்க மதுபானங்களை மீண்டும் வாங்க விருப்பமின்றித் தயக்கம்…

  • பங்களாதேஷின் புதிய ஜனாதிபதி தெரிவு

    பங்களாதேஷின் புதிய ஜனாதிபதியாக பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் மூத்த தலைவர் மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பங்களாதேஷின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த முகமது ஷஹாபுதீன், தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக கடந்த ஜூலை மாதம் பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் வேட்பாளராக 78 வயதான மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் முன்னிறுத்தப்பட்டார். இந்நிலையில், பங்களாதேஷில் சுமார் 35 ஆண்டுகளுக்குப் பின்னர்…

  • இந்திய உயர்ஸ்தானிகர் – சிறீதரன் எம்.பி. சந்திப்பு!

    இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் சிறீதரன் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார். இதன்போது, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. நீண்டகாலமாக இடம்பெறாமல் உள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துதல், அதிகாரப் பரவலாக்கத்தை உறுதிப்படுத்துதல், வடக்கு மற்றும் கிழக்கு…

  • “இதுவே எனது கடைசி உரையாக இருக்கலாம்” – சபையில் இராமநாதன் அர்ச்சுனா நெகிழ்ச்சி

    “இதுவே தனது கடைசி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம்” என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் தன்னிடம், “நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர் யார்?” எனக் கேள்வி எழுப்பியதாக அவர் குறிப்பிட்டார். அப்போது, வேறு எந்தப் பெயரும் தனது நினைவுக்கு வராத நிலையில், “நளிந்த அண்ணா” எனத் தான் பதிலளித்ததாகவும் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். எனினும், நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்த அவர், இனிமேல்…

  • சமூக ஊடக விளம்பரத்துக்காக நெடுஞ்சாலையில் தவறான பாதையில் பயணம் செய்து உயிரிழந்த இளைஞர்கள்!

    அயர்லாந்தில் சமூக ஊடகங்களில் அதிகப் பார்வையாளர்களைப் பெறுவதற்காக இளைஞர்கள் நெடுஞ்சாலைகளில் தவறான திசையில் வாகனம் செலுத்தும் ஆபத்தான போக்கில் ஈடுபட்டு வருவதாக அயர்லாந்து காவல்துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், டப்ளின் வானூர்தி நிலையத்துக்குப் பயணித்த மற்றுமொரு வாகனத்தின் மீது, தவறான திசையில் அதிவேகமாக வந்த வாகனம் மோதி இடம்பெற்ற பயங்கர விபத்தில் 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மற்றைய வாகனத்தில் பயணித்த மூன்று பெண்களும் ஒரு குழந்தையும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில்…

  • மகாத்மா காந்தியின் கையெழுத்து பிரதி ஏலம்.. படைத்தது உலக சாதனை

    மகாத்மா காந்தி தனது நெருங்கிய தோழரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஆனந்த் டி. ஹிகோரணிக்கு எழுதிய 688 அரிய கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பு, சாஃப்ரனாட் ஏல நிறுவனத்தின் மூலம் ரூ.16.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்று ஆவணம் ஒன்று இதுவரை ஏலம் போனதில் இதுவே உலக சாதனையாகும். உண்மை, அகிம்சை, சேவை, பிரம்மச்சரியம் மற்றும் ஒழுக்கம் போன்ற பல்வேறு தலைப்புகளில் காந்தியடிகள் எழுதிய தினசரி குறிப்புகள் இதில் அடங்கும். ஹிகோரணியின் மனைவி வித்யாவின் மறைவுக்குப் பிறகு,…

  • ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு .

    எல் நினோ விளைவு காரணமாக உலகம் முழுவதும் இந்த ஆண்டு இயல்பை விட வானிலையில் தீவிரமான மாற்றம் இருக்கும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர புயல்களும், பெருவெள்ளங்களும் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவிலும் தென்மேற்கு பருவமழை காலங்களில் வடமாநிலங்களின் சில முக்கிய இடங்களில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. உத்தரகாண்ட், அசாம் ஆகிய மாநிலங்களில் அதீத மழைபொழிவால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அந்த வரிசையில் ஜம்மு…