Author: Six Side Media
-
வீட்டு மொட்டை மாடியில் கஞ்சாத் தோட்டம்
கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் 4 ஆம் மாடி மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சாத் தோட்டத்தை பொலிஸார் கடந்த 19 ஆம் திகதி அதிரடியாகக் கண்டுபிடித்து முற்றுகையிட்டனர். அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களான ஜவாத், இஸ்மத் ஆகியோருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கல்முனை நகரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோதே, குறித்த…
-
உலக வசூலில் புது சாதனை படைத்தது ‘தி ஒடிசி’!
கிறிஸ்டோபர் நோலனின் பிரம்மாண்டமான திரைப்படமான ‘தி ஒடிசி’ (The Odyssey), வெற்றிகர திரையரங்க பயணத்தில் மற்றொரு சாதனை படைத்துள்ளது. ‘வெரைட்டி’ இதழின் தகவலின்படி, இப்படம் உலகம் முழுவதும் 1.352 பில்லியன் அமெரிக்க டொலர் வசூலித்து, இதுவரை வெளியான ‘ஆர்-ரேட்டட்’ (R-rated – பெரியவர்களுக்கானது) திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக அதிகாரப்பூர்வமாக மாறியுள்ளது. இதன் மூலம், 2024 இல் வெளியான ‘டெட் பூல் & வோல்வரின்’ திரைப்படம் ஈட்டிய 1.338 பில்லியன் டொலர் என்ற சாதனையை இது…
-
இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 21, 2026 வெள்ளி
பஞ்சாங்கம் நாள் வெள்ளிக்கிழமை திதி நவமி நட்சத்திரம் அனுஷம் பகல் 2.45 வரை பிறகு கேட்டை யோகம் சித்தயோகம் பகல் 2.45 வரை பிறகு மரணயோகம் ராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை எமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை நல்லநேரம் காலை 9.15 முதல் 10.15 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை சந்திராஷ்டமம் அசுவினி பகல் 2.45 வரை பிறகு பரணி சூலம் மேற்கு பரிகாரம் வெல்லம் இன்று…
-
அரச நிறுவனங்களில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்
தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மூன்று நாட்களும் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (20) காலமானார். பாடகி நந்தா மாலினியின் மறைவையடுத்து ஓகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய தினங்களை தேசிய துக்க தினங்களாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இதற்கமைவாக, இன்று (21),…
-
மேற்கு ஆபிரிக்க தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து- பலி எண்ணிக்கை அதிகரிப்பு
ஆபிரிக்க நாடான மத்திய ஆபிரிக்க குடியரசின் மேற்குப் பகுதியில் உள்ள ஜாம்போயே கிராமத்தில் அமைந்துள்ள தங்க சுரங்கத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த கடந்த 18ஆம் திகதி பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென பெரிய மண் குவியல் பொள பொளவென சரிந்து விழுந்தது. இதில், ஏராளமான தொழிலாளர்கள் மண்ணில் புதையுண்ட வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புப் பணியில்…
-
ஜப்பானில் ரயில் மோதியதில் நால்வர் உயிரிழப்பு
ஜப்பானில் ஷின் – கனுமா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது விரைவு ரயில் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ரயிலில் பயணித்த சுமார் 50 பயணிகள் உட்பட சம்பவ இடத்தில் பணியாற்றிய மேலும் 6 பேர் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். பாதுகாப்பான மற்றும் நேரம் தவறாத போக்குவரத்துக்கு பெயர் பெற்ற ஜப்பானில் இவ்வாறான ரயில் விபத்துகள் மிகவும் அரிதாகவே இடம்பெறுகின்றன. சம்பவம் தொடர்பில் ஜப்பான் ரயில்வே நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளது.
-
பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான பெருவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு சுமார் 1 மணியளவில், ஆண்டிஸ் மலைத்தொடர் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.7 ஆகப் பதிவாகியுள்ளது. பரினகொச்சோஸ் மாகாணத்தில் உபஹசொ நகரிலிருந்து சுமார் 38 கிலோமீட்டர் தொலைவில், 66 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதுடன், ஐகா மற்றும் அரேகிபா உள்ளிட்ட நகரங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில்…
-
நைஜீரியாவில் படகு விபத்து – 50 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் படகொன்று விபத்துக்குள்ளானதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த படகில் விவசாயப் பணிக்காக 70க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
-
தமிழ், முஸ்லிம் மக்கள் மோதிக்கொள்வதையே ஒரு தரப்பு விரும்புகிறது – சாணக்கியன் எம்பி குற்றச்சாட்டு!
இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் மக்கள் பேச வேண்டும், முஸ்லிம் மக்களுக்கு எதிராக தமிழ் மக்கள் பேச வேண்டும். இரண்டு இனத்தவர்களும் அடித்துக் கொள்ள வேண்டும்.அதனூடாக தாம் அரசியல் இலாபம் தேட வேண்டும் என்பது ஒரு தரப்பின் எண்ணமாகும்.தற்போதைய பிரச்சினையை கொண்டு ஒரு தரப்பு குளிர்காய்வது வெளிப்படையாக தெரிகிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குறிப்பிட்டார். முஸ்லிம் சகோதரிகள் அவர்களின் கலாசார அம்சங்களுடன் பணிகளில் ஈடுபடும்…
-
தாத்தா கொலையில் காதலனுடன் சிக்கிய 13 வயது பேத்தி
கேரளத்தில் 65 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது 13 வயது பேத்தி, அச்சிறுமியின் காதலன் மற்றும் இரண்டு நண்பர்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலப்புழாவில் 65 வயது முதியவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது உடல் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறையினர் அவரது வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, கை, கால்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில்,…