Author: Six Side Media

  • கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்.. 22 மாலுமிகள் மாயம்.. தேடுதல் பணியில் இந்தியக் கப்பற்படை!!

    இந்தியாவில் இருந்து புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே பனாமா நாட்டுக் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் வங்கக் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில், கப்பலில் இருந்த 24 பேரில் 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 22 மாலுமிகளைத் தேடும் பணியில் 2வது நாளாக இந்திய கடலோரக் காவல்படை மற்றும் கடற்படை மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்த பனாமா நாட்டைச் சேர்ந்த எம்.வி. ஓஷன் வின்னர் (MV…

  • யாழில் பல வீடுகளில் பதிவான திருட்டுச் சம்பவங்கள் – மூவர் கைது

    யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 9ஆம் திகதி சாவகச்சேரி நகரில் உள்ள நகைக்கடை உரிமையாளரின் வீட்டில் இருந்து 17 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…

  • வலி.வடக்கில் தொடரும் காணி விடுவிப்பு போராட்டம் – சுமந்திரன், சாணக்கியன் நேரில் பங்கேற்பு

    யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி, மயிலிட்டி, வசாவிளான் மற்றும் பலாலிச் சந்தி பகுதிகளில் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பலாலிச் சந்தி மற்றும் வசாவிளான் பகுதிகளில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்று வரும் காணி விடுவிப்புப் போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் நேரில் கலந்துகொண்டனர். இதற்கமைய, இன்றைய போராட்டத்திலும் எம்.ஏ.சுமந்திரன்…

  • தீவிரவாத இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால் பாலஸ்தீனியர்களின் வீடுகள் முற்றுகை

    ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள குஸ்ரா (Qusra) கிராமத்தில், தீவிரவாத இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் பாலஸ்தீனியர்களின் வீடுகளைச் சூழ்ந்து முற்றுகையிட்டு, அங்கிருப்பவர்களுக்கான நீர் மற்றும் மின்சார விநியோகத்தைத் துண்டித்துள்ளனர். ஓஹியோவைச் சேர்ந்த பாலஸ்தீனிய-அமெரிக்க தொழிலதிபரான லூயி ரிடி (Loui Ridi), தனது குடும்பச் சொத்தைப் பாதுகாக்கவும், சர்வதேச கவனத்தை ஈர்க்கவும் குஸ்ராவிற்கு நேரில் சென்று தனது வீட்டின் கூரையில் அமெரிக்கக் கொடியை ஏற்றியுள்ளார்.  ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, சொத்துக்களை அழிப்பது மற்றும் மக்களை அச்சுறுத்துவது போன்ற குடியேற்றவாசிகளின்…

  • கனடாவில் நரிகள் முகாமையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் காலணிகளைத் திருடி வருகின்றன.

    கனடாவின் சாஸ்காட்செவன் மாநிலத்தில் உள்ள கிரேட் ப்ளூ ஹெரன் மாகாண பூங்காவில் (Great Blue Heron Provincial Park) நரிகள் முகாமையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் காலணிகளைத் திருடி வருகின்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த திருட்டில் ஐந்து நரிகள் கொண்ட குழு ஒன்று சேர்ந்து இயங்குகிறது. இதில் ஒரு நரி வேவு பார்க்க, மற்றொரு நரி கூடாரங்களில் இருந்து காலணிகளைத் திருடிச் செல்கிறது.  க்ராக்ஸ் (Crocs), ஃபிலிப்-ஃப்ளாப்ஸ், ரன்னிங் ஷூக்கள், பிர்கன்ஸ்டாக்ஸ் மற்றும் அடிடாஸ் சாம்பாஸ் உள்ளிட்ட…

  • அண்டை நாடுகளுக்கு ஈரான் மிரட்டல்

    ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதையடுத்து இரு தரப்பும் அமைதி பேச்சுவார்த்தை நடந்த இடைக்கால ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தம் எந்தவித முன்னேற்றமுமின்றி காலாவதியானது. அதேவேளை, ஹோர்முஸ் நீரிணையை தங்களுக்கு சொந்தம் என்று அமெரிக்காவும்,…

  • “இவர்தான் மருத்துவர்!” – மணக்கோலத்தில் கேரள மணமகளின் மனிதம்!

    கேரள மாநிலத்தில், தனது திருமணச் சடங்குகளுக்கு மத்தியிலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உடனடியாக முதலுதவி அளித்துக்காப்பாற்றிய மணமகளான இளம் பெண் மருத்துவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திருமண மண்டபத்தில் உணவளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பெண் ஊழியர்களுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதில் ஒருவருக்கு மூக்கில் இரத்தக்கசிவும், மற்றொருவருக்கு மயக்கமும் ஏற்பட்டது. மணமகள் ஒரு மருத்துவர் என்பதை அறிந்த உறவினர்கள் அவரை உதவிக்கு அழைத்தனர். மணக்கோலத்தில் இருந்தபோதிலும், சடங்குகளைச் சற்று நேரம் நிறுத்தி வைத்துவிட்டு, பாதிக்கப்பட்ட இருவருக்கும்…

  • ஐரோப்பிய பந்தயப் பயிற்சியில் நடிகர் அஜித்தின் சிற்றூந்து விபத்து

    ஐரோப்பாவில் நடைபெறும் சர்வதேச சிற்றூந்து பந்தயப் பயிற்சியின் போது நடிகர் அஜித் குமார் ஓட்டிய சிற்றூந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான நிலையில், அவர் காயங்களின்றிப் பாதுகாப்பாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ‘மிச்சலின் லீ மேன்ஸ்’ கிண்ணத்துக்கான சிற்றூந்து பந்தயப் பயிற்சியில் நடிகர் அஜித் ஈடுபட்டிருந்தபோது, அவர் ஓட்டிய சிற்றூந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவருக்கு எந்தவிதக் காயமும் ஏற்படவில்லை என்றும், அவர் முழுப் பாதுகாப்புடன் நலமாக உள்ளார் என்றும்…

  • இனப்படுகொலை குற்றச்சாட்டு.. நெதன்யாகு மீது சர்வதேச கைது நடவடிக்கை.. துருக்கி அரசாங்கம் அதிரடி!!

    2023ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் காசா இடையே தொடங்கிய போர் 2025 வரை நீடித்தது. இந்தப் போரில், 73 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உட்பட 76 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டால், எகிப்தில் கையெழுத்தானது. இதன்மூலம் இஸ்ரேல் காசா இடையேயான போர் முடிவுக்கு வந்திருக்கிறது. எனினும், காசா…

  • இனி இஸ்ரோ ராக்கெட் ஏவாது : அது தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.. மத்திய அரசின் அறிவிப்பால் அதிர்ச்சி!

    இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்திற்காக விண்வெளித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு இஸ்ரோ நிறுவனம் 1969-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவை ஏவியதில் தொடங்கி, சொந்தமாக விண்வெளிக்கு செயற்கைகோள்களை அனுப்பும் ராக்கெட்களை உருவாக்குவது வரை பல்வேறு சாதனைகளை படைத்தது. அதன் உச்சமாக சந்திரயான் திட்டத்தின் மூலம் நிலவுக்கே விண்கலனை அனுப்பி இஸ்ரோ உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதோடு உலகிலேயே செயற்கைக்கோள்களை மிகவும் குறைந்த கட்டணத்தில் துல்லியமாக விண்ணில் ஏவி, சர்வதேச அளவில்…