Author: Six Side Media
-
வங்காள விரிகுடாவில் நிலநடுக்க அபாயம்.. ஆய்வில் அதிர்சித் தகவல்!
மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள ஐஐடி கரக்பூர் சமீபத்தில், வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலநடுக்கம் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில், வங்காள விரிகுடாவின் கடலுக்கு அடியில் இருக்கும் டெக்டோனிக் தட்டுகளின் (புவித்தட்டுகள்) இயக்கம், அதிக அளவிலான வண்டல் படிவுகள் மற்றும் பல ஆண்டுகளாகச் செயல்படாமல் இருக்கும் பழமையான புவியியல் பிளவுகள் மீண்டும் செயல்படத்தொடங்குதல் ஆகியவற்றின் காரணமாக வளைகுடா பகுதிகளில் மிதமானது முதல் தீவிரமானது வரையிலான நிலநடுக்கங்கள் வரை ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த…
-
இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 23, 2026 ஞாயிறு
பஞ்சாங்கம் நாள் ஞாயிற்றுக்கிழமை திதி ஏகாதசி நட்சத்திரம் மூலம் இரவு 7.48 வரை பிறகு பூராடம் யோகம் அமிர்தயோகம் இரவு 7.48 வரை பிறகு சித்தயோகம் ராகுகாலம் மாலை 4.30 முதல் 6 வரை எமகண்டம் பகல் 12.00 முதல் 1.30 வரை நல்லநேரம் காலை 7.45 முதல் 8.45 வரை / பகல் 3.15 முதல் 4.15 வரை சந்திராஷ்டமம் கிருத்திகை இரவு 7.48 வரை பிறகு ரோகிணி சூலம் மேற்கு பரிகாரம் வெல்லம் மேஷராசி…
-
ஐபோன் கேட்டு அடம்பிடித்த மகன்: குடும்பமே பலியான சோகம்!
புதிய ஐபோன் தொலைபேசியைப் பெற்றுத் தருமாறு கோரி ஆரம்பமான குடும்பத் தகராறு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொடூரமாக உயிரிழப்பதில் நிறைவடைந்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜிநகர், சால்டா ஃபாடா பகுதியைச் சேர்ந்த ஓட்டுநரான முரளிதர் சாந்த்குடே (48) என்பவரது 19 வயது மகனான குணால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குடும்பத்தின் வறுமை நிலை காரணமாகத் தந்தை போனை வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த குணால், அருகில் உள்ள…
-
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு!
ஜப்பானின் டோக்கியோ தலைநகர் உட்பட கிழக்கு காண்டோ (Kanto) பிராந்தியத்தில் ஜப்பனிய நேரப்படி அதிகாலை 2.00 மணியளவில் மெக்னிடியூட் அளவில் 5.9 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு இபராகி (Ibaraki) மாகாணத்தை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 70 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளதுடன், இதனால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். என்.எச்.கே. (NHK) செய்திச் சேவையின்படி, சைதாமா, சிபா மற்றும்…
-
BTS ரசிகர்களுக்கு ஆச்சரியம்! ‘நமஸ்தே இந்தியா’ என வைரலாகும் விளம்பர காணொளி!
பிரபல தென்கொரிய K-pop இசைக்குழுவான BTS, கூகுள் ஜெமினி (Google Gemini) விளம்பரத்தில் தோன்றி இந்திய ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது. கூகுள் இந்தியா வெளியிட்டுள்ள விளம்பர வீடியோவில், BTS குழுவினர் நமஸ்தே இந்தியா எப்படி இருக்கிறீர்கள்? உங்களை நாங்கள் மிஸ் செய்கிறோம், இந்தியாவுக்கு வர விரும்புகிறோம்” என ஹிந்தியில் பேசியுள்ளனர். தென்கொரிய இசைக்கலைஞர்கள் இந்திய மொழியில் பேசி அன்பு செலுத்தியுள்ளதால், இந்திய ரசிகர்கள் (ARMY) சமூக வலைதளங்களில் இதனை வைரலாக்கி வருகின்றனர். மேலும், BTS குழுவினர் விரைவில் இந்தியாவிற்கு…
-
அமெரிக்காவிற்கு கனடா அதிரடி பதிலடி: செப்டம்பர் 8 முதல் டொலருக்கு டொலர் வரி அமுல்!
அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீதக் கடுமையான புதிய இறக்குமதி வரிகளுக்கு பதிலடியாக, அமெரிக்கப் பொருட்களுக்கு, டொலருக்கு டொலர் வரி விதிப்பு தொடர்பான திகதியை கனடாப் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்த சில மணிநேரங்களிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, கனடாவின் பதிலடி வரி, எதிர்வரும் செப்டம்பர் 8 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்…
-
ஊதா நிற மின்னல்: விண்வெளியில் இருந்து நாசா வீரர் எடுத்த அபூர்வ புகைப்படம்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருக்கும் நாசா விண்வெளி வீரர் டான் பெட்டிட் (Don Pettit), பூமிக்கு மேலே உருவாகும் ஒரு அபூர்வ இயற்கை நிகழ்வைப் படம்பிடித்து வெளியிட்டுள்ளார். அடர்ந்த மேகங்களுக்கு இடையே பிரகாசமாக ஒளிரும் ஊதா நிற (Purple) மின்னலின் வியப்பூட்டும் காட்சியை அவர் விண்வெளியில் இருந்து படம்பிடித்துள்ளார். சாதாரண வானுார்திகள் பறக்கும் உயரத்தையும் தாண்டி, சுமார் 50,000 அடி உயரத்தில் உருவாகும் இத்தகைய புயல் மேகங்களை விண்வெளிச் சுற்றுப்பாதையில் இருந்து மட்டுமே மிகத் தெளிவாகக்…
-
உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இடமின்றி தவிக்கும் மக்கள் காஸாவில் தொடரும் மயான நெருக்கடி!
காஸா நகரின் ஜீடூன் பகுதியைச் சேர்ந்த 40 வயதான முகமது அல்-சஹ்வி என்பவர் வீதியோரக் விற்பனைத்தளத்தில் தேனீர் விற்றுக் கொண்டிருந்தபோது கழுத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இந்தநிலையில், அவரது உடலை அடக்கம் செய்வதற்காக, அவரது 20 வயதான மகன் உமர் அல்-சஹ்வி மயானத்திற்குச் சென்றபோது, அங்கே இடநெருக்கடி காரணமாகப் பல உடலங்கள் மிக நெருக்கமாக அடக்கம் செய்யப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார். தற்போது காஸாவில் ஒரு புதைகுழியை அமைப்பதற்கு சுமார் 500 முதல் 1,000 டொலர்கள் வரை செலவாகிறது.…
-
முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் சுட்டுக்கொலை
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் ஜோலானி டெட், கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள எம்தான்சேனே பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 38 வயதான ஜோலானி தனது வீட்டிற்கு காரில் சென்றிருந்தபோது, முகமூடி அணிந்த இருவர் அவரை மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவருடன் காரில் இருந்த 27 வயதுடைய பெண்ணும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜோலானி டெட் 2007–2008ஆம் ஆண்டுகளில் டபிள்யூ.பி.எஃப். பறக்கும் எடைப் பிரிவிலும், 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் டபிள்யூ.பி.ஓ. இளம்பருவ…
-
வங்காள விரிகுடாவில் பனாமா சரக்குக் கப்பல் விபத்து
ஒடிசா கடலோரப் பகுதியிலிருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில், பனாமா கொடியுடன் கூடிய என்ற சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒகஸ்ட் 20 அன்று இரவு 10.30 மணியளவில் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பலில் சுமார் 1,700 தொன் இரும்புத் தாது ஏற்றிச் செல்லப்பட்டது. கப்பலில் மொத்தம் 24 பணியாளர்கள் இருந்துள்ளனர். அவர்களில் 20 பேர் சீனாவையும், 3 பேர் மியான்மரையும், ஒருவர் பங்களாதேஷையும் சேர்ந்தவர்கள். ஒகஸ்ட் 23 இரவு…