Author: Six Side Media

  • யுக்ரைன் போராட்டத்தை நாசி ஜெர்மனிக்கு எதிரான போருடன் ஒப்பிட்ட பிரித்தானிய பிரதமர் அண்டி பர்ன்ஹாம்!

    யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிராக, யுக்ரைன் முன்னெடுத்து வரும் போராட்டத்தை, இரண்டாம் உலகப் போரின்போது நாசி ஜெர்மனிக்கு எதிராக பிரித்தானியா மேற்கொண்ட போராட்டத்துடன் பிரித்தானிய பிரதமர் அண்டி பர்ன்ஹாம் ஒப்பிட்டுள்ளார். யுக்ரைனின் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு பிரித்தானியா தொடர்ந்து முழுமையான ஆதரவை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். யுக்ரைனின் 35ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தனது முதல் வெளிநாட்டு பயணமாக பிரதமர் அண்டி பர்ன்ஹாம் இன்று கியேவுக்கு சென்றுள்ளார். அங்கு யுக்ரைன்,ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி உள்ளிட்ட தலைவர்களை…

  • 117ம் பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின் மிக வயதான பெண்!

    உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் உள்ள பராமரிப்பு இல்லத்தில் ஆகஸ்ட் 21 அன்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து இவர் இந்த வரலாற்றுச் சாதனையை மகிழ்வோடு கொண்டாடினார். ஆகஸ்ட் 21, 1909 அன்று ஹாம்ப்ஷயரில் பிறந்த இவர், 117 வயதை எட்டிய முதல் பிரித்தானிய நபர் என்ற புதிய சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு…

  • வொஷிங்டன் வீதிகளில் முதன்முறையாக பிரம்மாண்டமான கார் பந்தயம்

    அமெரிக்காவின் 250ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் தலைநகரான வொஷிங்டன் வீதிகளில் முதன்முறையாக பிரம்மாண்டமான அதிவேக கார் பந்தயம் ஒன்றை ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் ஏற்பாடு செய்துள்ளார். அமெரிக்காவின் புகழ்பெற்ற முக்கிய நினைவிடங்கள் மற்றும் வீதிகளை உள்ளடக்கி நடத்தப்படும் இந்த ‘Freedom 250 Grand Prix’ கார் பந்தயத்தை சுமார் இரண்டு இலட்சம் பார்வையாளர்கள் வரை நேரில் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. வொஷிங்டனின் புகழ்பெற்ற ‘பென்சில்வேனியா’ வீதியில் கார்கள் மணிக்கு 185 மைல்…

  • ஓராண்டு காத்திருப்பு பின்.,இந்திய ஆண்களை திருமணம் செய்த 150 பாகிஸ்தான் பெண்கள்

    இந்திய ஆண்களுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பாகிஸ்தான் மணப்பெண்கள் ஓராண்டு காத்திருப்புக்கு பிறகு இந்தியா வந்துள்ளனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த சிந்தி சமூக குடும்பங்கள், இந்தியாவில் உள்ள தங்களுடைய உறவினர்கள் மற்றும் சிந்தி சமூகத்தினருக்கு தங்களுடைய மகள்களை திருமணம் செய்து கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். பஹல்காமில் கடந்த 2025ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்திய படைகள் ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கை மூலம் பதிலடி கொடுத்தனர். மேலும் பாகிஸ்தானுடனான…

  • பூனைக்கு CFO பதவி! பலரது கவனத்தை ஈர்த்த சம்பவம்

    மும்பை மெட்ரோவின் 7வது வழிதடத்தில் குண்டவாலி மெட்ரோ நிலைய நுழைவாயிலில் பூனைக்கு CFO கௌரவ பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக நுழைவாயிலில் அமர்ந்துள்ள பூனை பலருக்கும் பரீட்சியமாகிவிட்டன. இதன் அமைதியான தோற்றம் காரணமாக பலரும் அதை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட வைரலானது. இந்நிலையில் சந்தேஷ் சாமந்த் என்பவர் பூனையை படமெடுத்து மெட்ரோ நிர்வாகத்திடம், ”அன்பான உயிருக்கு பதவியை வழங்குங்கள் என்றும் ஊதியம் இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும்” குறிப்பிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட மும்பை மெட்ரோ நிர்வாகம்…

  • வங்கதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை

    வங்​கதேசத்​தில் 4 பேர் கொடூர​மாக கொலை செய்​யப்​பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்​கதேசத்​தின் ரங்க்​பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கணபதி சக்​கர​வர்த்தி (65). இவரது மனைவி பிரீத்தி லதா (50). இத்​தம்​ப​தி​யின் மூத்த மகள் அகாமி (23). இளைய மகன் பிரி​யம் (12). கடந்த சில நாட்களாக இவர்களது உறவினர்கள் போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது தொடர்புகொள்ள முடியவில்லை, அத்துடன் வீ்டும் வெளிப்புறமாக பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலிசில் புகார்…

  • திடீரென காணாமல்போன வைத்திய நிபுணர் சடலமாக மீட்பு

    காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணரின் மரணம் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். சிறப்பு மயக்கவியல் வைத்திய நிபுணரான பிரபாத் அனுராத தயரத்ன என்பவரே இன்று காலை (24) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று (23) காலை காணாமல்போனதாக கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் உடனடியாக விசாரணையை தொடங்கிய நிலையில், மஹியங்கனை வனப்பகுதியில் சுமார் 800 மீட்டர் தொலைவில் பாறையில் இன்று (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது சம்பவ…

  • இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

    எல் நினோ நிலைமையுடன் எதிர்காலத்தில் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கே.பி.எல்.சந்திரலால் தெரிவித்துள்ளார். நீர் ஆதாரங்கள் வறண்டு போவதன் காரணமாக மின் உற்பத்தி குறையக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அடிப்படையாக கொண்ட மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான விலைகள் வெளியிடப்படுவது தொடர்பில் இன்றைய தினம் (24.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்…

  • ஒன்ராறியோவில் காலியான கட்டிடத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

    கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள கிரிக்லான்ட் லேக் பகுதியில் காலியாக இருந்த கட்டிடம் ஒன்றில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒன்ராறியோ மாகாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி இரவு சுமார் 10 மணியளவில் அரசாங்க வீதிப் பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத கட்டிடம் ஒன்றில் மனித எச்சங்கள் இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பொலிஸார் அங்கு சென்றுள்ளனர். சம்பவ இடத்துக்கு கிரிக்லான்ட் லேக் தீயணைப்புப் பிரிவினரும் அவசர மருத்துவ சேவைப் பிரிவினரும்…

  • உரிமமின்றி மானை வேட்டையாடிய கனேடியருக்கு அபராதம்!

    கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த மார்க் ஜோடோயின் என்பவர், முறையான உரிமமின்றி ‘மூஸ்’ வகை மானை வேட்டையாடிய குற்றத்திற்காக 5,000 டொலர் அபராதமும், ஒரு ஆண்டு வேட்டையாடத் தடையும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 25, 2024 அன்று மாடாவா பகுதிக்கு அருகில் உள்ள முகாம் ஒன்றில் பாதுகாப்புக் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, சட்டவிரோதமாகச் சுடப்பட்டுத் தொங்கவிடப்பட்டிருந்த ஆண் மூஸ் மானின் உடலைக் கண்டறிந்தனர். விசாரணையில் ஜோடோயினைக் கண்டறிந்த அதிகாரிகள், அவரிடம் அந்த மானின் தலை இருப்பதைக் கண்டுபிடித்தனர்.…