Author: Six Side Media

  • அமெரிக்கப் படைகளில் பற்றாக்குறை! ரத்து செய்யப்பட்டுள்ள இராணுவ பயிற்சி

    அடுத்த மாதம் தென் கொரியாவுடன் இணைந்து நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த “சாங்யோங்” கூட்டு நீர்நிலத் தரையிறக்கப் பயிற்சியை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக தென் கொரியக் கடற்படை தெரிவித்துள்ளது. ஈரானில் நடைபெற்று வரும் போர் காரணமாக அமெரிக்கப் படைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கக் கடற்படை, படைப்பிரிவு அளவிலான இந்த கூட்டுப் பயிற்சிக்குத் தங்களின் படைகள் பங்கு கொள்வதில் சிக்கல் நிலவுவதாக ஜூன் மாதமே தென் கொரியக் கடற்படைக்கு முறைப்படித் தெரிவித்துவிட்டதாக சர்வதேச வட்டாரங்கள்…

  • கனடா வாகனங்கள் மீது 50 வீத வரி விதிப்பேன்: ட்ரம்ப் எச்சரிக்கை!

    அண்டை நாடுகளான அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தநிலையில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதன்படி, கனடாவிலிருந்து வரும் சிற்றுந்துகள், கனரக வாகனங்கள், மற்றும் வாகனங்களின் உதிரி பாகங்கள் மீதான வரியை ஜனவரி 1 முதல் 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த வார இறுதியில் அமெரிக்கா – கனடா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை…

  • இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சீனா விஜயம்

    இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று (24) சீனா சென்றடைந்துள்ளார். இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை குறித்த சிறப்புப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, அவர் சீனா சென்றடைந்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் சீனாவின் சிறப்பு பிரதிநிதியும், வெளியுறவுத்துறை அமைச்சருமான வாங் யீ கலந்துகொள்ள உள்ளார். செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டிற்காக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இந்தியா வர உள்ள சூழலில், சீனாவில் அஜித் தோவல்-வாங்…

  • காங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ் தாக்கம்

    மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,642 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,515 ஆக அதிகரித்துள்ளது. , காங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு சுகாதாரத்துறை திணறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து எபோலா வைரசை கட்டுப்படுத்த…

  • ரஷ்ய ஜனாதிபதி – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இடையில் சந்திப்பு

    ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவு, உலகளாவிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். ரஷ்யாவிற்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள ஜெய்சங்கர், நேற்று இரவு மாஸ்கோ சென்றடைந்தார். இந்தியா-ரஷ்யா இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் இரு நாடுகளும் முயற்சித்து வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இன்று ரஷ்ய ஜனாதிபதி…

  • பஸ்லலித் CCIBக்கு சற்றுமுன் அழைத்துசெல்லப்பட்டார்

    லலித் கன்னங்கர என்ற ‘பஸ் லலித்’ சற்றுமுன் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) அழைத்துச் செல்லப்பட்டார். டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற ‘பஸ் லலித்’ இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து இவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் இவரை தொடர்ந்து பலர் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

  • பாகிஸ்தான் ராணுவத் தளபதி மீண்டும் ஈரானில்

    பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க இந்த ஆண்டில் 3-வது முறையாக ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குச் சென்றுள்ளார்.  ஜூன் 17-இல் கையெழுத்தான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) 60 நாள் கெடு முடிவடைந்ததாலும், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதாலும் பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் தொடர்பில் இருக்கும் பாகிஸ்தான், தூதரக வழிமுறைகளை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.…

  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22 அறிவிக்கப்படவுள்ளது!

    உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்சங்க மற்றும் இராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தக் கட்டளை அறிவிக்கப்பட்டது. இன்றைய தினம் பிரதிவாதிகள் தரப்பு வாய்மொழி மூல சமர்ப்பணங்கள் நிறைவடைந்ததை அடுத்து, இரு தரப்பினரின்…

  • வானில் மீண்டும் ஒரு அதிசய நிகழ்வு

    “இரத்த நிலவு” (Blood Moon) என அழைக்கப்படும் பகுதி சந்திர கிரகணம் எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதி நிகழவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திர கிரகணத்தின்போது, பூமியின் நிழல் சந்திரனின் ஒரு பகுதியை மறைக்கும். இதன்போது, சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தின் ஊடாகச் சென்று சந்திரனில் படுவதால், சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். எனினும், இந்த சந்திர கிரகணம் காலை 8.04 மணியளவில் ஆரம்பிக்கவுள்ளதால், இந்தியாவிலிருந்து இதனைக் காண முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இரத்த நிலவு” என அழைக்கப்படும்…

  • யுக்ரைன் போராட்டத்தை நாசி ஜெர்மனிக்கு எதிரான போருடன் ஒப்பிட்ட பிரித்தானிய பிரதமர் அண்டி பர்ன்ஹாம்!

    யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிராக, யுக்ரைன் முன்னெடுத்து வரும் போராட்டத்தை, இரண்டாம் உலகப் போரின்போது நாசி ஜெர்மனிக்கு எதிராக பிரித்தானியா மேற்கொண்ட போராட்டத்துடன் பிரித்தானிய பிரதமர் அண்டி பர்ன்ஹாம் ஒப்பிட்டுள்ளார். யுக்ரைனின் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு பிரித்தானியா தொடர்ந்து முழுமையான ஆதரவை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். யுக்ரைனின் 35ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தனது முதல் வெளிநாட்டு பயணமாக பிரதமர் அண்டி பர்ன்ஹாம் இன்று கியேவுக்கு சென்றுள்ளார். அங்கு யுக்ரைன்,ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி உள்ளிட்ட தலைவர்களை…