Author: Six Side Media

  • கனடா உயர்ஸ்தானிகர் – மத்திய மாகாண ஆளுநர் சந்திப்பு

    இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின், (H.E.Isabelle Martin) நேற்று (24) மத்திய மாகாண ஆளுநர் வைத்திய நிபுணர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோவை கண்டியிலுள்ள ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இதன்போது மத்திய மாகாணத்தின் சுற்றுலாத் துறையை மேலும் அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும், ‘டிட்வா’ பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மத்திய மாகாணத்தின் சுற்றுலாத் துறை வளங்களை உயர்மட்டத்தில் பயன்படுத்தி அத்துறையை மேலும் வலுப்படுத்துவது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.…

  • அடுத்த மாதம் புதிய ஐபோன் வாங்குவோருக்கு அதிர்ச்சித் தகவல்

    அடுத்த மாதம் அறிமுகமாகவுள்ள புதிய ஐபோன் (iPhone) மொடல்களின் விலையை 9 சதவீதம் வரை உயர்த்த அப்பிள் (Apple) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெமரி சிப்களின் (Memory Chip) விலை மற்றும் உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனைச் சமாளிக்கும் வகையில் புதிய விலை நிர்ணயத்தை மேற்கொள்ள அப்பிள் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே சாம்சங் (Samsung) மற்றும் கூகுள் (Google) உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது புதிய ஸ்மார்ட்போன்…

  • அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இராஜினாமா விவகாரம்!

    தமிழக சட்டசபையில் இன்று (25) இயற்கை வளங்கள், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகள் மீதான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. இதில் திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் தெரிவிக்கையில், 6 தொகுதியில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் மக்கள் தங்களது பிரச்சினைகளை யாரிடம்? கூறுவர் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “இராஜினாமா செய்யப்பட்ட 6 தொகுதிகளில் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அந்த தொகுதி மக்களின் குறைகள் கேட்கவும், தேவைகளை நிவர்த்தி செய்யவும்…

  • சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு

    அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 90 நாட்கள் தடுப்புக் காவல் காலம் முடிவடைந்துள்ளது. இந் நிலையிலேயே மேலும் 90 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக,…

  • தண்ணீர் என நினைத்து இரசாயனத்தைக் குடித்த சிறுமி உயிரிழப்பு!

    கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவிலிருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து வீட்டிலிருந்த ‘ஹைட்ரஜன் பெரோக்சைட்’ என்ற இரசாயனத்தைக் குடித்ததால் உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மரண விசாரணை நேற்று (24) அன்று கம்பளை வைத்தியசாலையில் நடைபெற்றபோதே இந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. வவுனியா, செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த தினேஸ்காரம் ஹயனிகா என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார். சிறுமியின் தாய், தந்தை உள்ளிட்ட…

  • ஈழமுரசின் இன்றைய ராசி பலன் (25.08.2026)

    இன்று (25) மகர ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்கிறார். மேலும் சித்த யோகம் கூடிய தினத்தில், சிம்ம ராசியில் சூரியன் நுழைகின்றார், அங்கு கேதுவுடன் இணைய உள்ளார். சிம்ம ராசியில் மூன்று கிரகங்களின் சேர்க்கை நடக்கிறது. குரு – சந்திரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கின்றனர். இன்று மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டம நாள். மேஷம் ராசி பலன்  மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று எந்தவொரு தனிநபர் அல்லது நிறுவனத்திடமிருந்தும் கடன் வாங்குவதைக் கருத்தில்…

  • டிரம்பின் மனைவி குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

    டிரம்பின் மனைவி குறித்து எந்த செய்திகள் வெளியானாலும் அதனை கேட்க வேண்டும் என்ற ஆர்வம் பார்வையாளர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. ஆனால், அவர் குறித்து தற்போது வெளியாகியிருக்கும் புதிய செய்தி, பலரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அவர் மீது டிரம்ப் உடன் நெருங்கி பணியாற்றிய ஒருவரே கூறியிருப்பது தான் பரபரப்பின் உச்சம். அதாவது, பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றில், ஜாக் கோச்சியரெல்லா என்ற நெறியாளர் Podcast நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில், வெள்ளை மாளிகையின்…

  • நெதன்யாகு மகனுக்கு குறி.. பயத்தில் இஸ்ரேல் பிரதமர்..? ரகசிய திட்டம் தீட்டிய ஈரான்!

    அணு ஆயுதம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு இன்றுவரை விடை கொடுக்கவில்லை. எனினும், அவற்றுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், தனது மகன்களில் ஒருவருக்கு ஈரான் குறிவைத்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருப்பது அரசியல் உலகை அதிரவைத்துள்ளது. இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், “இது ஒரு நம்பமுடியாத சம்பவம். ஈரான் என் மகன்களில் ஒருவரைக் குறிவைத்தது. ஈரான் அவரைக் கொலை செய்ய முயன்றது” என அதில்…

  • 2,00,000 இலட்சம் வெளிநாட்டினரின் விசாக்களை ரத்து செய்ய ட்ரம்ப் திட்டம் !

    அமெரிக்காவில் மீண்டும் அதிபரான டொனால்டு ட்ரம்ப், பதவியேற்ற நாள்முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவதுடன் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். அதில் விசா கட்டணம், குடியேற்றக் கொள்கை, வரிவிதிப்பு என அதிரடி காட்டி வருகிறார். இந்த நிலையில், அமெரிக்காவில் வணிக மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுவிட்டு, பின்னர் சட்டவிரோதமாகத் தஞ்சம் கோரும் முறையைத் தடுக்கும் வகையில், 2 இலட்சம் வெளிநாட்டினரின் விசாக்களை ரத்துசெய்ய ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. 2016 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் B1 (வணிகம்)…

  • இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகிறார்

    இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்தவகையில் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அவரது பயணத்தின் போது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு விடயம் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய…