Author: Six Side Media

  • கின்னஸ் சாதனையை முறியடித்த 3 வயது குழந்தை

    ஹூலா ஹூப் வளையத்தில் சென்று வரும் கின்னஸ் சாதனையை, தந்தையுடன் இணைந்து 3 வயது குழந்தை முறியடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அமெரிக்காவின் ஐடஹோ மாகாணத்தைச் சேர்ந்தவர் டேவிட் ரஷ் (வயது 41) . இவருடைய மனைவி ஜெனிபர் ரஷ். இவர்களுக்கு ஜெரெமி (வயது 12) மற்றும் பீட்டர் (வயது 10) ஆகிய மகன்களும், பெலிசிட்டி (வயது 3) என்ற மகளும் உள்ளனர். மகன்கள் ஜெரெமி மற்றும் பீட்டர் ஆகியோர் தந்தையின் வழிகாட்டுதலுடன், கண்களை கட்டிக்கொண்டு சாண்ட்விச்…

  • எயார்பஸ் விவகாரத்தில் பணச்சலவைக் குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய, சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவை 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டதாக ‘அத தெரண’ நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்தார். சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்,…

  • இஸ்ரேல் போரின் கோர முகம்! காசாவில் 82% கட்டடங்கள் சிதைவு.. வெளியான செயற்கைக்கோள் படம்!

    இஸ்ரேல் – ஹமாஸ் போரினால் காசா பகுதியில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பேரிழப்புகளை கூகுள் மேப் தளத்தின் புதுப்பிக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. 1997இல் அமெரிக்கா இயற்றிய கைல்- பிங்கமன் திருத்தம் (Kyl-Bingaman Amendment ) போன்ற சட்டக் கட்டுப்பாடுகளால் காசா மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளின் கூகுள் செயற்கைக்கோள் படங்கள் பல ஆண்டுகளாகப் புதுப்பிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கூகுள் நிறுவனம் உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளதால், காசா நகரின்…

  • அரண்டுபோன பாகிஸ்தான் ராணுவம்.. அதிரடி காட்டும் தாலிபான்!

    அண்டை நாடுகளான பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பிரிட்டிஷ் காலத்தில் டுராண்ட் கோடு பொதுவான எல்லையாக முடிவு செய்யப்பட்டது. இதனை அப்போதைய ஆப்கானிய மன்னர்கள் ஏற்காத நிலையில், பின்னர் வந்தவர்களும் அதனை ஏற்கவில்லை. இந்த சூழலில் அங்கு தாலிபான்கள் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவர்களும் இந்த டுராண்ட் கோடு எல்லையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக சமீபகாலமாக இந்த பிரச்சனை அதிகரித்து வருகிறது. எல்லையில் சிறு சிறு மோதல்கள் வெடித்த நிலையில், அது சில மாதங்களுக்கு முன்னர் இரு நாடுகளுக்கு…

  • இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 30, 2026 புதன்

    பஞ்சாங்கம் நாள் புதன்கிழமை திதி சதுர்த்தி மாலை 5.06 வரை பிறகு பஞ்சமி நட்சத்திரம் பரணி காலை 10.18 வரை பிறகு கிருத்திகை யோகம் சித்தயோகம் காலை 10.18 வரை பிறகு அமிர்தயோகம் ராகுகாலம் பகல் 12 முதல் 1.30 வரை எமகண்டம் காலை 7.30 முதல் 9 வரை நல்லநேரம் காலை 9.15 முதல் 10.15 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை சந்திராஷ்டமம் அஸ்தம் காலை 10.18 வரை பிறகு சித்திரை…

  • முதல்முறை..? சிந்துவுக்குள் நுழைந்த தாலிபன்கள்.. விழிபிதுங்கி நிற்கும் பாகிஸ்தான்!

    பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) அமைப்பு, சிந்து (Sindh) மாகாணத்தில் தங்களின் இருப்பை அறிவிக்கும் வகையிலான புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இஸ்லாத்தின் கொடி, சிந்து மண்ணில் மீண்டும் ஏற்றப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) அமைப்பு, சிந்து மாகாணத்தில் தங்களின் இருப்பை அறிவிக்கும் வகையிலான புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஆயுதம் ஏந்திய நபர், சிந்துவின் ஒடுக்கப்பட்ட மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார். ”சிந்துவின்…

  • சேதமடையும் சீனப் பெருஞ்சுவர்.. சமூக ஆர்வலர்கள் கவலை!

    மங்கோலியா, மன்சூரியா உள்ளிட்ட அப்போதைய அண்டை நாடுகளின் படையெடுப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக சீனாவில் வடக்கு எல்லைப் பகுதியில் எழுப்பப்பட்ட சுவர்தான் இந்த சீனப் பெருஞ்சுவர். சுவர் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும், சீனாவை ஆண்ட வெவ்வேறு மன்னர்களால் வெவ்வேறு காலகட்டங்களில் சுவரின் வெவ்வேறு பகுதிகள் கட்டப்பட்டன. கிறிஸ்து பிறப்பிற்கு முன் 7 ஆம் நூற்றாண்டிலேயே சீனப் பெருஞ்சுவரின் கட்டுமானப் பணிகள் தொடங்கியதாக சொல்லப்படும் நிலையில், 1368 காலகட்டத்தில் சீனாவை ஆண்ட மிங் வம்சத்தினர் சுவரை கற்களால்…

  • முடிவுக்கு வந்த அமெரிக்காவின் 20 ஆண்டுகால ஆட்டம்.. வெற்றியில் திளைக்கும் ஈரான்?

    ஈராக்கில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அமெரிக்க ராணுவ இருப்பு தற்போது முடிவுக்கு வருகிறது. செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஈராக்கில் உள்ள கடைசி அமெரிக்க ராணுவத் தளங்களில் இருந்தும் படைகள் வெளியேற உள்ளதாக Reuters தெரிவித்துள்ளது. 2003-ல் தொடங்கிய அமெரிக்க ராணுவ நடவடிக்கையின் முக்கிய அத்தியாயம் இதன்மூலம் முடிவுக்கு வருகிறது. இந்த வெளியேற்றம் ஈரானுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஈராக் ஆயுதக் குழுக்களுக்கும் ஒரு முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அமெரிக்கப் படைகள் வெளியேறுவதால் உருவாகக்கூடிய…

  • ஹமாஸின் உயர்மட்டத் தளபதி இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழப்பு

    காசா நகரில் உள்ள அல்-நஸ்ர் பகுதியில் இன்று(29) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவின் வட காசா பிராந்தியத் தளபதி இஸ் அல்-டின் அல்-பெய்க் (Izz al-Din Al-Beik) கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீன அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. தாக்குதல்கள் மற்றும் படைகளுக்கெதிரான நடவடிக்கைகளைத் திட்டமிடுதல், புதிய போராளிகளைச் சேர்த்தல் போன்ற முக்கிய செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த இவரைக் குறிவைத்துத் தாக்கி அழித்ததாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்…

  • பென்டகன் தரவுத்தளத்தில் ஊடுருவல் – 30 இலட்சம் பேரின் இரகசிய விவரங்கள் கசிந்து அதிர்ச்சி!

    அமெரிக்க பாதுகாப்புத் துறையின் (Pentagon) தலைமையகக் கணினி அமைப்பான பாதுகாப்பு மனிதவள தகவல் மையத்தில் (DMDC) அடையாளம் தெரியாத நபர்கள் அத்துமீறி நுழைந்து, 30 லட்சத்திற்கும் அதிகமானோரின் முக்கிய தனிநபர் விவரங்களைத் திருடியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாதுகாப்பு மீறலில் உயிருடன் உள்ள சுமார் 27.6 லட்சம் நபர்கள் மற்றும் மறைந்த 2.94 லட்சம் நபர்களின் ஆவணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தரவுத்தளத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாட்டைப் பயன்படுத்தி, கடந்த ஒக்டோபர் 2025 முதல் ஜூலை 2026…