இஸ்ரேல் – ஹமாஸ் போரினால் காசா பகுதியில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பேரிழப்புகளை கூகுள் மேப் தளத்தின் புதுப்பிக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. 1997இல் அமெரிக்கா இயற்றிய கைல்- பிங்கமன் திருத்தம் (Kyl-Bingaman Amendment ) போன்ற சட்டக் கட்டுப்பாடுகளால் காசா மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளின் கூகுள் செயற்கைக்கோள் படங்கள் பல ஆண்டுகளாகப் புதுப்பிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், கூகுள் நிறுவனம் உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளதால், காசா நகரின் குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்டவை தரைமட்டமாக்கப்பட்டு காட்சியளிப்பது தெரியவந்துள்ளது.
Leave a Reply