Category: முக்கிய செய்தி
-
நடுவானில் விமானத்தை நெருங்கிய பறக்கும் தட்டு – விமானி அதிர்ச்சி
இங்கிலாந்தில் நடுவானில் விமானம் வந்தபோது, 300 அடி தொலைவில் பறக்கும் தட்டு நெருங்கி விமானிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் கேட்விக் விமான நிலையத்தில் எயார்பஸ் ஏ319 என்ற பயணிகள் விமானம் தரையிறங்க வேண்டி இருந்தது. இதற்காக கேட்விக் பகுதிக்கு தெற்கே 7 மைல்கள் தொலைவில், சசெக்ஸ் கவுன்டி பகுதியில் ஹேங்கிராஸ் அருகே நடுவானில் பறந்து வந்து கொண்டிருந்தது. விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும்போது, அந்த சம்பவம் நடந்தது. திடீரென மர்ம பொருள்…
-
எகிப்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
எகிப்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இஸ்மாயிலியா பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தரை மட்டத்திலிருந்து 5.47 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட பல நகரங்களில் நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்ட போதிலும், உயிர்ச் சேதமோ சொத்துச் சேதமோ எதுவும் பதிவாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-
மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை கடற்பயணம் செய்ய வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம், கடற்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (2) மாலை விடுத்துள்ள அறிக்கையொன்றில், இந்த எச்சரிக்கை நாளை (3) பி.ப. 8.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது நாளை அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அப்பகுதிகளிலுள்ள கடல்…
-
இலங்கை: மூதூரில் பொறியியல் பீட மாணவன் கோர விபத்தில் பலி
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் மூதூர் -கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பீட முதலாம் வருட மாணவன், மற்றொருவர் பிரான்ஸ் செல்லத் தயாராக இருந்த 19வயது இளைஞரும் உயிரிழந்துள்ளனர். டிப்பர் வாகனச் சாரதி மூதூர் பொலிஸ்…
-
ஸ்பெயின் தீயை அணைக்க கட்டார் உதவி
ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, கத்தார் சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் குழுவை (Qatar International Search and Rescue Team) கத்தார் அரசு அனுப்பியுள்ளது. கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியின் வழிகாட்டுதலின் பேரில், இந்த சிறப்பு மீட்புக் குழு தோஹாவிலிருந்து ஸ்பெயினின் டொரெஜோன் விமான நிலையத்திற்குப் புறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் 129 காட்டுத்தீ நிபுணர்கள் இடம்பெற்றுள்ளதுடன், தொழில்நுட்ப மற்றும் தளவாட ஆதரவுக்குத் தேவையான மேம்பட்ட…
-
கொங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் : 1,556 பேர் பலி!
கொங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,556 ஆக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள நாடு கொங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்நிலையில் 3,532 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், எபோலா வைரஸ் பாதிப்பால் 1,556 பேர் உயிரிழந்துள்ளதாக கொங்கோ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும்…
-
ஒற்றை அணு மின் நிலையத்தையும் மூடும் நாடு
ஐரோப்பிய நாடான ஹங்கேரி, தனது ஒரே அணு மின் நிலையமான பாக்ஸ் (Paks) அணு மின் நிலையத்தை மூடுவதாக அறிவித்துள்ளது. கடந்த 44 ஆண்டுகளில் முதல் முறையாக முழுமையாக இந்த அணுமின் நிலையம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த மின் நிலையம் நாட்டின் மின்சார தேவையின் அரைபங்கிற்கும் மேல் வழங்கி வருகிறது. ஆனால், டானியூப் ஆற்றின் நீர்மட்டம் வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலையில் சென்றதால், ரியாக்டர்களை குளிர்விக்க தேவையான நீர் கிடைக்கவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை உற்பத்தி 965 மெகாவாடாகக்…
-
கனடாவில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் பாதிப்பு!
கனடாவில் தொடர்ச்சியாக நிலவி வரும் வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பணவீக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து வருகிறது. இந்நிலையில், ‘நாரடிவ் ரிசர்ச்’ அமைப்பினால் நடத்தப்பட்ட புதிய தேசிய அளவிலான ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 76 சதவீதத்தினர், உணவு மற்றும் மளிகைப் பொருட்களின் அதிகப்படியான விலையேற்றமே தங்களது குடும்பப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 47 சதவீதத்தினர் எரிபொருள் விலையேற்றத்தை இரண்டாவது பெரிய நிதி நெருக்கடியாகக் குறிப்பிட்டுள்ளனர்.…
-
படகு விபத்தில் காணாமல் போன ரொறன்ரோ தம்பதியின் உடல்கள் மீட்பு!
கனடாவின் முஸ்கோக்கா பகுதியில் இடம்பெற்ற படகு மோதல் விபத்தொன்றில் காணாமல் போயிருந்த இருவரின் உடல்களையும் புலனாய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். உயிரிழந்தவர்கள் ரொறன்ரோவைச் சேர்ந்த 32 வயது ஆண் மற்றும் 30 வயது பெண் என பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு 10:40 மணியளவில், பேக்கன்ரிக் பே பகுதிக்கு அருகிலுள்ள ரொசோ ஏரியில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்தபோது, பலத்த சேதமடைந்த நிலையிலிருந்த படகு ஒன்று பாறை…
-
பூமியை நோக்கி பாயும் விண்வெளிக் குப்பைகள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!…
ஆயுட்காலம் முடிவடைந்த விண்கலங்கள் மற்றும் செயலிழந்த செயற்கைக்கோள்கள் பூமி மீது விழுகின்றன. பூமியின் தாழ்வட்டப் பாதையில் வலம் வரும் பல்லாயிரக்கணக்கான டன் எடையுள்ள ‘விண்வெளிக் கழிவுகள்’, கட்டுப்பாட்டை இழந்து விழும் அபாயம் அதிகரித்து வருவதாக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில தசாப்தங்களாக மனிதர்களால் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகளின் பாகங்கள் மற்றும் உடைந்த நுண் பொருட்கள் என சுமார் 13,000 டன்களுக்கும் அதிகமான விண்வெளிக் கழிவுகள் பூமியின்…