Category: முக்கிய செய்தி
-
பூமியை நோக்கி பாயும் விண்வெளிக் குப்பைகள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!…
ஆயுட்காலம் முடிவடைந்த விண்கலங்கள் மற்றும் செயலிழந்த செயற்கைக்கோள்கள் பூமி மீது விழுகின்றன. பூமியின் தாழ்வட்டப் பாதையில் வலம் வரும் பல்லாயிரக்கணக்கான டன் எடையுள்ள ‘விண்வெளிக் கழிவுகள்’, கட்டுப்பாட்டை இழந்து விழும் அபாயம் அதிகரித்து வருவதாக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில தசாப்தங்களாக மனிதர்களால் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகளின் பாகங்கள் மற்றும் உடைந்த நுண் பொருட்கள் என சுமார் 13,000 டன்களுக்கும் அதிகமான விண்வெளிக் கழிவுகள் பூமியின்…
-
இலங்கை: ‘பூஜித் ஜயசுந்தரவை நியமிக்க வேண்டுமென அநுரவே கோரினார்’ விமல் வீரவங்ச
நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்டோரின் கோரிக்கைக்கு அமைவாகவே, பூஜித் ஜயசுந்தர காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டதாகத் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். நல்லாட்சி காலத்தில் காணப்பட்ட ஊழல் ஒழிப்புக்குழுவில் அங்கம் வகித்திருந்த அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட பலர், ஊழல் ஒழிப்புப் பணிகளைத் திறம்பட முன்னெடுக்க பூஜித் ஜயசுந்தரவையே காவல்துறை மா அதிபராக நியமிக்க…
-
யாழ் வசாவிளானில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்: இராணுவத்திடம் மனுவும் கையளிப்பு!
யாழ்ப்பாணம் – வசாவிளான் பகுதியில் 40 ஆண்டுகளாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் நிறைவில், வசாவிளான் பகுதியில் உள்ள இராணுவ முகாம் அதிகாரிகள் ஊடாக யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதிக்குக் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றையும் அவர்கள் கையளித்தனர். தமது நிலங்கள் மீள ஒப்படைக்கப்படும் வரை, இனிவரும் ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை முதல் மதியம்…
-
தென்கொரியாவில் இதுவரை இல்லாத வெப்பம்
தென்கொரியாவில் இன்று (2 ஆகஸ்ட்) வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. யாங்சான் (Yangsan) நகரில் 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. தென்கொரியாவில் நூறாண்டுக்கு முன்பு வெப்பநிலைப் பதிவு தொடங்கியது முதல் இதுவே ஆக அதிக வெப்பம். யாங்சான் நகரம், தலைநகரிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அந்நகரில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக வெப்பம் 40 டிகிரி செல்சியசைக் கடந்திருக்கிறது. தென்கொரியாவின் பல நகரங்களில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்குமேல் உயர்ந்திருக்கிறது. இன்று 20க்கும் அதிகமான…
-
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 03 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் உள்ள ‘ட்வின் ஃபால்ஸ்’ நகரின் வணிக வளாகப் பகுதியில் சனிக்கிழமை (01) அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூட்டில், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வணிக வளாகப் பகுதியில் துப்பாக்கிதாரி திடீரெனத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் இந்த உயிரிழப்புகள் சம்பவித்துள்ளன. இத்தாக்குதலை நடத்திய துப்பாக்கிதாரியும் உயிரிழந்துவிட்டதாக ட்வின் ஃபால்ஸ் பொலிஸ் உயர் அதிகாரி மெத்யூ ஹிக்ஸ் அந்நாட்டு ஊடகவியலார்களிடம்…
-
உலகின் மிகப்பெரிய ஓர்கிட் மலர் பேராதனை தாவரவியல் பூங்காவில் பூத்துள்ளது
உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் தாவரமாகக் கருதப்படும் இராட்சத ஓர்க்கிட் பூக்கள் பேராதனை தாவரவியல் பூங்காவில் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. கிராமட்டோபில்லம் ஸ்பீசியோசம் (Grammatophyllum speciosum) என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படும் இந்த இராட்சத ஓர்க்கிட் தாவரம், உலகின் மிகப்பெரிய அளவிலான ஓர்க்கிட் தாவரமாகப் பதிவாகியுள்ளதாகப் பேராதனை தாவரவியல் பூங்காவின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாகப் பேராதனை அரச தாவரவியல் பூங்காவின் ஓர்க்கிட் பிரிவுத் தலைவி இரோஷணி அந்த்ராதி தெரிவிக்கையில், ‘இந்த இராட்சத ஓர்க்கிட் தாவரத்தின் பூக்களைப் பேராதனைத்…
-
அவுஸ்திரேலியாவில் தடையை மீறும் சிறுவர்கள்
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை அமுலுக்கு வந்து 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும், 80 சதவீதத்திற்கும் அதிகமான சிறுவர்கள் இன்னும் சமூக ஊடகங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக அந்த நாட்டின் இணைய பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. சமூக ஊடக நிறுவனங்கள் முறையான வயது சரிபார்ப்பு முறைகளை நடைமுறைப்படுத்த தவறியதே இதற்கு காரணம் என வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி தடை விதிக்கப்படுவதற்கு முன்னர், கணக்கெடுப்பில் பங்கேற்ற…
-
பெருவில் சுற்றுலா வானூர்தி விபத்து – 13 பேர் உயிரிழப்பு
பெருவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற Nazca Lines தொல்பொருள் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த சிறிய ரக சுற்றுலா வானூர்தியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் குறித்த வானூர்தியில் 11 பயணிகளும் 2 விமானிகளும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கை: சிறைச்சாலை மோதல்களுக்கு அரசாங்கத்தின் அலட்சியமே காரணம் – நாமல் குற்றச்சாட்டு!
நாட்டில் அடுத்தடுத்து இடம்பெற்று வரும் சிறைச்சாலை மோதல்கள் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். சில வார இடைவெளியில் இடம்பெற்ற இரண்டாவது பெரிய சிறைச்சாலை மோதல் இதுவென சுட்டிக்காட்டியுள்ள அவர், இது தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமல்ல என்றும், மோசமான நிர்வாகம், அலட்சியம் மற்றும் சீரழிந்து வரும் சிறைச்சாலை அமைப்பின் வெளிப்பாடு என்றும் விமர்சித்துள்ளார். சிறைச்சாலைத் துறை பெரும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையிலும், இதுவரை நிரந்தர ஆணையாளர் நாயகம்…
-
இந்தியா:ஜந்தர் மந்தர் போராட்டம்: குழந்தைகளை மன்னித்த மோடி; குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்க சொல்லும் தீப்கே!
ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தன்னை குறித்தும், தன் தாயார் குறித்தும் அவதூறாக பேசியதாக இந்திய நேற்று பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் முக்கியமாக பேசியிருந்ததாவது, ‘ஜந்தர் மந்தரில் நடந்த நிகழ்வுகளை, நாடும், உலகமும் பார்த்துள்ளன. சில குறும்புக்காரக் குழந்தைகள், எந்தவொரு நாகரிகமான சமூகத்திற்கும் பெருமை சேர்க்காத வகையில், மிகவும் ஆபாசமான வசவுச் சொற்களைப் பயன்படுத்தினர். நான் வசைபாடப்பட்டேன். எனது காலமான தாயாரும் வசைபாடப்பட்டார். அது எவ்வளவு மோசமான வடிவம் என்பது எனக்குத் தெரியும்.…