Category: முக்கிய செய்தி
-
வீதி விபத்தில் காயமடைந்த ‘ரந்தெனியா பண்டார’ யானை உயிரிழந்தது!
கேகாலை, ரந்தெனிய பகுதியைச் சேர்ந்த ‘ரந்தெனியா பண்டார’ என்ற யானை, மணம்பிட்டி பகுதியில் நடைபெற்ற பெரஹரா நிகழ்வுக்காக பாரவூர்தியில் அழைத்துச் செல்லப்பட்டபோது ஏற்பட்ட வீதி விபத்தில் படுகாயமடைந்த நிலையில், ஆறு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (04) அதிகாலை உயிரிழந்துள்ளது. கடந்த மாதம் 29ஆம் திகதி, மெல்சிரிபுர – ஓமரகொல்ல பகுதியில் யானையை ஏற்றிச் சென்ற லொறி இயந்திரக் கோளாறால் நின்றதாக தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, யானைப் பாகன் யானையை லொறியிலிருந்து இறக்கி பாதுகாப்பாக…
-
வசூலில் புதிய சாதனை படைத்த ‘ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே’
அமெரிக்கா மற்றும் கனடாவில் வெளியான முதலாவது வார இறுதியில் ‘ஸ்பைடர் மேன்பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) திரைப்படம் 360 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக வசூலித்து, சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 2019 ஆம் ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ (Avengers: Endgame) திரைப்படம் ஈட்டிய 357 மில்லியன் அமெரிக்க டொலர்களே அதிகபட்ச சாதனையாக இருந்தது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலக அளவில், ‘ஸ்பைடர் மேன்’ வரிசையின் இந்த புதிய…
-
கொளுத்தும் வெயில்: டோக்கியோ உயிரியல் பூங்காவில் 3 பெண் சிங்கங்கள் பலி!
ஜப்பானில் கோடைக்கால வெப்பம் தீவிரமடைந்து வரும் நிலையில், டோக்கியோவிலுள்ள தமா உயிரியல் பூங்காவில் (Tama Zoological Park) வெப்பம் தொடர்பான பாதிப்புகளால் மூன்று பெண் சிங்கங்கள் உயிரிழந்துள்ளன. கடந்த ஜூலை மாத இறுதியில், ஒரே வார இடைவெளியில் 3 முதல் 15 வயதுக்குட்பட்ட ‘முகி’ (Mugi – 3), ‘இச்சிகோ’ (Ichigo – 11), மற்றும் ‘லுவேனா’ (Luena – 15) ஆகிய மூன்று பெண் சிங்கங்கள் உயிரிழந்தன. உடற்கூறாய்வு முடிவுகளில், நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) மற்றும்…
-
பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், எதிர்வரும் ஆகஸ்ட் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த வழக்கில், பிள்ளையான் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
-
இளம் வயதிலேயே நிரந்தர கருத்தடையைத் தெரிவுசெய்யும் ஆண்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
குழந்தைப் பிறப்பு மற்றும் குடும்பத் திட்டமிடல் தொடர்பான தனிப்பட்ட அனுபவங்களின் பின்னணியில், ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சையான Vasectomy முறையைத் தெரிவுசெய்யும் ஆண்களின் எண்ணிக்கை சில நாடுகளில் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை தரவுகளின்படி, 2024-2025ஆம் ஆண்டில் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் 26,385 Vasectomy அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது 2023-2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 16 சதவீத அதிகரிப்பாகும். அதிக எண்ணிக்கையில் இந்தச்…
-
உதயநிதி ஸ்டாலின் கைதை தொடர்ந்து நடிகை நிவேதா பெத்துராஜின் திருக்குறள் வைரல்
தமிழ்நாட்டு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் பதிவிட்ட திருக்குறள் வைரலாகி வருகிறது. தஞ்சையில் நேற்று திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ், “புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல், அறங்கூறும் ஆக்கம் தரும்”…
-
சண்டீபுரா வைரஸ் அச்சம்: குஜராத்தில் 22 சிறுவர்கள் உயிரிழப்பு!
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ‘சண்டீபுரா’வைரஸ் தொற்றினால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் சுகாதார அதிதீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே சந்தேகத்தின் பேரில் பரிசோதிக்கப்பட்ட 184 பேரில், இதுவரை 22 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் எதிர்பார்க்கப்படுவதாகவும் குஜராத் சுகாதார அமைச்சர் பிரபுல் பஞ்சேரியா தெரிவித்துள்ளார். காந்திநகர், சபர்காந்தா-ஹிமத்நகர், படான், ராஜ்கோட் மற்றும் பவநகர் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் 7 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்…
-
இங்கிலாந்தில் குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவை!
பிரித்தானியாவில் குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய ஐந்து முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலான உள்ளூர் பேருந்து சேவைகளில் இலவசமாகப் பயணிக்கலாம். கோடை விடுமுறையில் குடும்பங்கள் மீதான நிதிச் சுமையை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, குடும்பங்களின் வாழ்க்கைச் செலவுகளுக்கு உதவுகிறது என்று போக்குவரத்துத் துறைக்கான மாநிலச் செயலாளர் ஹைடி அலெக்சாண்டர் தெரிவித்தார்.
-
காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி செஞ்சிலுவை சங்க பிரதிநிதியுடன் சந்திப்பு
பாங்காங்: கடந்த 2021ம் ஆண்டு மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து முன்னாள் தலைவர் ஆங் சாங் சூகி காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில், ஆங் சாங் சூகி சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதியை சந்தித்ததாக அரசு தெரிவித்துள்ளது.அது தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு “ஒப்பந்தம் (Deal) அல்லது முழுமையான சரணடைவு (Total Surrender)” என்ற இரண்டு வழிகளே உள்ளதாக கடுமையாக எச்சரித்துள்ளார். தனது சமூக வலைதளமான Truth Social-இல் வெளியிட்ட பதிவில், ஈரான் பேச்சுவார்த்தைக்காக மறைமுகமாக முயற்சி செய்தபோதும், பொதுவெளியில் அதை மறுப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். “ஈரான் ஒப்புக்கொண்டாலும் இல்லையென்றாலும், பல தசாப்தங்களாக அவர்கள் உருவாக்கிய பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும், உலகின் முக்கிய கடல் வர்த்தகப்…