Category: முக்கிய செய்தி

  • கனடா வேலைவாய்ப்பு மோசடி: மனிதக் கடத்தல் வலையமைப்பின் பிரதான சந்தேகநபர் கைது!

    கனடாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மூன்று இலங்கையர்களை எத்தியோப்பியாவுக்கு அழைத்துச் சென்று மேற்கொள்ளப்பட்ட ஆள்கடத்தல் மற்றும் மனித கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் ஆலோசனையின் பேரில் துபாய் ஊடாக எத்தியோப்பியாவுக்குச் சென்ற இந்த மூவரும், சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றினால் எத்தியோப்பியாவில் வைத்து கடத்தப்பட்டிருந்ததுடன், இது குறித்த முறைப்பாடு கடந்த மே 27 ஆம் திகதி பதிவாகியிருந்தது. குற்றப்…

  • செம்மணி என்புத் தொகுதிகள் ஆய்வு விவகாரம் : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மரபணு மாதிரிகளை சேகரித்து பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் – ரவிகரன்

    செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளின் தரவுகளோடு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யவேண்டிய சட்டத் தேவைப்பாடு இருப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின் மரபணுக்களை அவர்களின் ஒப்புதலுடன் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் இன்று (5) உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சபையில் அவர் மேலும் கூறுகையில், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின்…

  • டுபாயில் 20 நிமிடங்களில் 7 இடங்களில் தாக்குதல்

    டுபாயின் ஜெபல் அலி துறைமுகப் பகுதியில் 20 நிமிடங்களில் 7 இடங்களில் சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது. ஈரான் சார்பில் அதன் கூட்டாளி அமைப்பான ஏமன் ஹவுதி அமைப்பினருக்கும், வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், டுபாய் துறைமுகமான ஜெபல் அலி மற்றும் தொழில் மண்டலப் பகுதியில் இன்று அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட இடங்களில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை…

  • மாட்ரிட் காட்டுத் தீ பாதிக்கப்பட்டவர்களுக்கு மெஸ்ஸியின் நிதி உதவி

    ஸ்பெயினின் மாட்ரிட் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி நிதி உதவி வழங்கியுள்ளார். மாட்ரிட் பகுதியில் கடந்த ஜூலை 10-23 முதல் அதிகபட்சமான வெப்ப அலையினால் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. ஜூலை 24இல் 65 கி.மீ/ மணி வேகத்தில் காற்று வீசி இரண்டு தீ முகப்புகள் ஒன்றாக இணைந்து 50 கி.மீ/ மணி வேகத்தில் காட்டுத் தீயாக பரவியது. இந்தக் கடுமையான காட்டுத்தீயினால் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதனால், 84,000…

  • உலக தாய்ப்பால் வாரம் 2026: குழந்தைக்கு முதல் தடுப்பூசியான சீம்பாலின் முக்கியத்துவம்!

    ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை உலகம் முழுவதும் ‘உலக தாய்ப்பால் வாரம்’  கடைப்பிடிக்கப்படுகிறது. புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியம், வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதில் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதுடன் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த வாரத்தின் முக்கிய நோக்கமாகும். குழந்தை பிறந்த பிறகு தாயின் மார்பகங்களில் இருந்து முதன்முதலாக சுரக்கும் அடர்த்தியான மஞ்சள் நிறப் பால் சீம்பால் எனப்படுகிறது. அளவில் குறைவாக இருந்தாலும், இது…

  • 10 ஆண்டுகள் படுக்கைக்கு அடியில் இருந்த பல கோடி மதிப்புள்ள அரிய முத்து!

    பிலிப்பைன்ஸின் பளவான் தீவைச் சேர்ந்த ஒரு மீனவர், 2006ஆம் ஆண்டு கடலில் கண்டெடுத்த 34 கிலோ எடையுள்ள மிகப்பெரிய இயற்கை முத்தை அதன் உண்மையான மதிப்பு தெரியாமல் சுமார் 10 ஆண்டுகள் தனது வீட்டில் படுக்கைக்கு அடியில் அதிர்ஷ்டப் பொருளாக வைத்திருந்தார்  என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? கடந்த 2006ஆம் ஆண்டு, பளவான் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடல் சிப்பிக்குள் சிக்கியிருந்த இந்தப் பிரம்மாண்ட முத்தை அந்த மீனவர் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது. அதன் அரிய தன்மையை அறியாத…

  • எல்-நினோ தாக்கம்: 4.9 கோடி மக்கள் பட்டினியில் வாடலாம்- ஐ.நா.

    எல்-நினோவின் தாக்கத்தால் உலகில் 4.9 கோடி மக்கள் பசிப் பட்டினியில் வாடலாம் என ஐ.நா. எச்சரித்துள்ளது. உலக உணவு திட்டம் (WFP) வெளியிட்ட புதிய அறிக்கையில், வலுவான எல்-நினோ வானிலை நிகழ்வு காரணமாக, உலகில் அதிகமாக பாதிக்கப்படவுள்ள பல பகுதிகளில் கூடுதலாக 4.9 கோடி மக்கள் பசியின் கோரப்பிடியில் சிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, தற்போது 45 நாடுகளில் 22 சதவீதம் அதிகரிப்புடன் மொத்தம் 274 மில்லியன் மக்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்ள நேரிடும் அபாயம்…

  • கனடாவில் தவறான திசையில் வாகனத்தை செலுத்திய நபர்: 4 பேர் பலி

    கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் நிகழ்ந்த விபத்தொன்றில் குழந்தை உட்பட நான்கு பேர் பலியாகியுள்ளார்கள். கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள கால்கரி நகரில் நிகழ்ந்த விபத்தொன்றில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் பலியாகியுள்ளார்கள். ஞாயிற்றுக்கிழமை இரவு 11.00 மணியளவில், கால்கரி நகரிலுள்ள Stoney Trail என அழைக்கப்படும் நெடுஞ்சாலையில், கார் ஒன்று தவறான திசையில் வேகமாக சென்றுள்ளது. அதிவேகத்தில் சென்ற அந்தக் கார், எதிரே வந்துகொண்டிருந்த இரண்டு கார்களுடன் மோதியதில், இரண்டு கார்களில் தீப்பற்றியுள்ளது, ஒரு கார் கடும்…

  • கனடாவில் Mrs Canada World 2026 பட்டம் வென்ற இந்திய வம்சாவளி பெண்

    Mrs Canada World 2026: இந்திய வாசவளியைச் சேர்ந்த பல்லவி முகீஜா கனடாவின் தேசிய அழகிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் கோராயா பகுதியில் பிறந்த பல்லவி முகீஜா, தற்போது கனடாவில் வசித்து வருகிறார். அவர், Mrs Canada World 2026 என்ற தேசிய அழகிப்போட்டியில் வெற்றி பெற்று, பட்டம் சூட்டப்பட்டுள்ளார் இந்தப் போட்டி, ஜூலை 25, 2026 அன்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் உள்ள Bell Performing Arts Centre-இல்…

  • இத்தாலியில் தீவிரமடையும் கடும் வெப்ப அலை: 27 முக்கிய நகரங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை!

    இத்தாலியில் கோடைகாலத்தின் நான்காவது வெப்ப அலை தீவிரமடைந்துள்ள நிலையில், வியாழக்கிழமையன்று நாட்டின் 27 முக்கிய நகரங்களுக்கும் அதிஉயர் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் 25 நகரங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை (Red alert) விடுக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டின் தெற்கே உள்ள மெஸ்சினா (Messina) மற்றும் ரெஜியோ கலாப்ரியா (Reggio Calabria) ஆகிய இரு நகரங்கள் மட்டுமே குறைந்த அளவிலான ‘அம்பர்’ எச்சரிக்கையில் (Amber alert) இருந்தன. நீடித்த அதிக…