Category: முக்கிய செய்தி

  • உகாண்டா அரசர் ஓயோ நியம்பா காலமானார்!

    ஓயோ நியம்பா (Oyo Nyimba), உகாண்டா அரசராக 1995-ல் அரியணை ஏறியதன் மூலம் உலகின் மிக இளைய மன்னராக மாறினார். இவர் தனது 34-வது வயதில் நேற்று இரவு காலமானதாக அவரது இராஜ்ஜியத்தின் பிரதமர் அறிவித்துள்ளார். உகாண்டா ஒரு குடியரசாகும், இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டுத் தலைவரால் ஆளப்படுகிறது, ஆனால் அது காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தில் இருந்ததைப் போலவே தங்கள் இராஜ்ஜியங்களின் மீது தொடர்ந்து ஆட்சி புரியும் பல பாரம்பரிய அரசுகளைக் கொண்டுள்ளது. அவர்களின் அரசியல் அதிகாரம்…

  • மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாகிஸ்தான் தனது ராணுவ பலத்தை விரிவுபடுத்தி வருவதாக  செய்திகள்

    கட்டார் நாட்டுடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டதன் மூலம், பாகிஸ்தான் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனது ராணுவ பலத்தையும் செல்வாக்கையும் விரிவுபடுத்தி வருவதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் மற்றும் கட்டார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா அலி அப்துல்லா அல்-சலேம் அல்-சபா ஆகியோரிடையே ராவல்பிண்டியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. கட்டார் ராணுவத்திற்குப் பயிற்சி அளித்தல், அதன் பாதுகாப்புத் திறனை மேம்படுத்துதல் மற்றும் எல்லை மேலாண்மையில் உதவுதல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும்.…

  • நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்

    நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் தனது 89ஆவது வயதில் காலமானார். அரிய வகை இரத்த நோய் காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளாக நோர்வேயை ஆட்சி செய்த மன்னர் ஹரால்ட், 14ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் நோர்வேயிலேயே பிறந்த முதல் நோர்வே மன்னர் என்ற சிறப்பையும் பெற்றிருந்தார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் ஹாக்கோன், நோர்வேயின் புதிய மன்னராகப் பதவியேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  • ட்ரம்பிற்கு மனச்சிதைவு நோய் – 24 மணி நேர சிகிச்சை தேவை…! ஈரான் எச்சரிக்கை

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு மனச்சிதைவு நோய் இருப்பதாக ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரீபாபாடி (Kazem Gharibabadi) கடுமையாக விமர்சித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) அமெரிக்காவின் பகுதி எனக் கூறி ட்ரம்ப் பதிவிட்டமையை அடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க எல்லைப் பகுதியாகக் காட்டும் வரைபடப் பதிவொன்று வெளியிடப்பட்டது. அதில் உலகின் மிக முக்கியமான கடல்சார்…

  • நேபாளத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட மீட்பு பணிகள்

    நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 543 ஆக உயர்ந்துள்ளது. இவ்விபத்தில் 1,500 இற்கும் மேற்பட்டோர் இன்னமும் மாயமாகியுள்ள நிலையில், மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பனிப்பாறை உடைந்ததால் (Glacial Collapse) ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து உருவான தடுப்பு ஏரி உடைந்ததால், திரிசூலி ஆற்றுப் படுகைப் பகுதிகள் நீரில் மூழ்கின. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நேபாளத்தில் மட்டும் 538 பேரும் மற்றும்…

  • நேபாளப் பெருவெள்ளம்: மாயமான கனேடிய தம்பதியர்

    நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான கனேடிய தம்பதியரைக் காணாமல் அவர்களுடைய உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த, தவல், மேகா ஷா தம்பதியர், நேபாளத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார்கள். புதன்கிழமை காலை உள்ளூர் நேரப்படி சுமார் 8.37 மணியளவில், நேபாள திபெத் எல்லையில், திடீரென பனிப்பாறைச் சரிவு ஏற்பட, பனி, சேறு மற்றும் பாறைகள் பெயர்ந்து நதியாக உருமாற, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெருவெள்ளத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டவர்கள் பலியாக, 1,400க்கும் அதிகமானோர் மாயமாகிவிட்டார்கள். அப்படி மாயமானவர்களில், தவல்,…

  • ரஷ்யாவின் நோவோசிபிர்ஸ்க் – கொழும்பு இடையே புதிய நேரடி விமான சேவை

    ரஷ்யாவின் சைபீரிய நகரமான நோவோசிபிர்ஸ்க்கிலிருந்து கொழும்புக்கு புதிய சர்வதேச விமான சேவையை எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி முதல் எஸ்7 எயார்லைன்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது. வாரத்திற்கு இருமுறை வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. சைபீரியாவிலிருந்து இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் கொழும்புக்கு எளிதாகப் பயணிக்க வாய்ப்பு ஏற்படும். இதேவேளை, ஹிக்கடுவை,பெந்தோட்டை மற்றும் திருகோணமலை போன்ற பிரபல சுற்றுலாத் தலங்களுக்கு எளிதாகப் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விமான சேவைக்கான…

  • உலகம் நேபாளத்தில் அதிர்ச்சி.. அணை உடைந்ததால் மீண்டும் வெள்ளப்பெருக்கு.. மீட்புப்பணி நிறுத்தம்!

    நேபாளத்தில் நேற்று முன்தினம் பனிப்பாறை உடைப்பு காரணமாக ஏற்பட்ட பேரழிவு உலகையே உலுக்கியுள்ளது. நேபாள் – திபெத் எல்லையில் அமைந்துள்ள இமயமலை பகுதியில் இருந்த பனிப்பாறை தீடிரென உடைந்து அதில் இருந்த ஏராளமான நீர் ’போதே கோஷி (Bhote Koshi)’ ஆற்றில் பாய்ந்து வந்ததால் நேபாளத்தில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. சில வினாடிகளில் 9 மீட்டர் வரை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து, சுனாமி வேகத்தில் வந்த வெள்ளத்தால் நீர்மின் கட்டமைப்புகள், வீடுகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர்…

  • நேபாள விபத்துக்கு காரணம் இதுதான்! காட்டிக் கொடுத்தது இஸ்ரோ?

    நேபாளம் நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில், ஆகஸ்டு 26-ஆம் தேதி அன்று, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரால், ரசுவா, ரசுவாகடி, திமுரே ஆகிய பகுதிகளும், திரிசூலி நதி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களும், கடுமையான பாதிப்புகளுக்கு ஆளானதேடு, 165 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமின்றி, நேபாளத்தை சேர்ந்த 127 பேரும், இந்தியாவை சேர்ந்த 178 பேரும், அமெரிக்காவை சேர்ந்த 65 பேரும் என, 33 நாடுகளை சேர்ந்த 644 பேர்…

  • நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் – புதிய ஏரி உருவானதால் எச்சரிக்கை

    நேபாளத்தின் போடேகோஷி நதியின் கிளை நதியில் பனிச்சரிவு ஏற்பட்டு ஏரி உருவாகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சோச்சென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் பகுதிக்கு அருகில் புதிய ஏரி ஒன்று உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திபெத்தில் உருவாகி நேபாளம் வழியாகப் பாயும் இந்த ஆறுகள் பின்னர் போடேகோஷி நதியுடன் இணைகின்றன. புதிய ஏரியில் நேற்று காலை வரை சுமார் 20 இலட்சம்…