Category: முக்கிய செய்தி
-
நேபாளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் – டிரம்ப் அறிவிப்பு
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவைத் தொடர்ந்து, அந்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மத்திய மாவட்டங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து லெண்டே கோலா ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு, பாறைகள் மற்றும் சேறுகளுடன் சுமார் 30 அடி உயரத்தில் பெருக்கெடுத்து நேபாளத்தை நோக்கி பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளம் ரசுவா மற்றும் தாடிங் உள்ளிட்ட மாவட்டங்களில்…
-
யாழ். மணற்காட்டில் தொடரும் காட்டுத்தீ: உலங்குவானூர்தி மூலம் தீயணைப்பு நடவடிக்கை
யாழ்ப்பாணம், மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில் வெள்ளிக்கிழமை(28) ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், பெருமளவிலான சவுக்கு மரங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், தீ மேலும் பரவக்கூடிய அபாயமும் காணப்படுகின்றது. தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை(28) தினத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில். இந் நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, தீயை விரைவாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரின் ஒருங்கிணைப்பின் ஊடாக உலங்குவானூர்தி மூலம் தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் …
-
பிஹாருக்கு அபாய எச்சரிக்கை
கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நேபாள – திபெத் எல்லையில் சீன பகுதியில் அமைந்துள்ள இமயமலை பகுதியில் இருந்த பனிப்பாறையில் திடீரென பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டது. இந்த பனிப்பாறை உடைப்பால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பாறைகள், மண் ஆகியவை ஆற்றின் பாதையை தடுத்ததால் அங்கு நீர் பெருமளவில் சேர்ந்துள்ளது. இப்படி சேர்ந்த நீர் ஒரு கட்டத்தில் தடுப்பை உடைத்துக்கொண்டு பெரும் ஆக்ரோஷத்தோடு அங்கிருந்த போதேகோஷி (Bhote Koshi) ஆற்றில் சேர்ந்து மலை சரிவுகளை நோக்கி இறங்கியுள்ளது.…
-
சர்வதேச உதவிகளை மறுத்த நேபாள அரசு: அழுத்தத்துக்குப் பிறகு முடிவில் மாற்றம்!
நேபாள நாட்டின் போடேகோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இதுவரை 550-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. காணாமல் போன வெளிநாட்டவர்களில் அதிகபட்சமாக இந்தியர்கள் 288 பேர் அடங்குவர். தவிர, சீனா (100), அமெரிக்கா (65), உக்ரைன் (53), ஆஸ்திரேலியா (35) மற்றும் பிரிட்டன் (33) ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில் நேபாளத்துக்கு இந்தியா உள்ளிட்ட…
-
கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிப்பு
பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கமைய, கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலையை 17 ரூபாவால் உயர்த்த அந்நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, உயர்த்தப்பட்டுள்ள கோதுமை மாவின் விலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு வரும் திங்கள்கிழமை (31) கூடுவதெனத் தீர்மானித்துள்ளது.…
-
சீனாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தின் லோங்சாங் நகரில், 5.1 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமியின் ஆழத்தில் 13 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று, சீனாவின் நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக, நோபளத்தில் நிலவி வரும் வெள்ளப் பாதிப்புகளும், பேரிடர் அபாயங்களும் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக திபெத் எல்லை பகுதியில் உள்ள…
-
’ஆபிரகாம் லிங்கனை விட நானே சிறந்த அதிபர்..’ TOP LIST தரவரிசையை வெளியிட்ட ட்ரம்ப்!
ஆபிரகாம் லிங்கன் மற்றும் ஜார்ஜ் வாஷிங்டனை விட தானே அமெரிக்காவின் சிறந்த அதிபர் என டொனால்ட் ட்ரம்ப் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து முன்னாள் அதிபர்கள் புகைப்படங்களுடன் ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள ட்ரம்ப், லிங்கன், வாஷிங்டன் போன்ற வரலாற்றுத் தலைவர்களை ‘சிறந்தவர்கள்’ என பட்டியலிட்டுள்ளார். ஒபாமா, ஜோ பைடன் ஆகியோரை ‘தோல்வியடைந்தவர்கள்’ என வரிசைப்படுத்தி உள்ளார். முன்னாள் அதிபர்களான ரீகன், கென்னடி போன்ற பல முக்கியத் தலைவர்களின் பெயர்களைப் பட்டியலில் புறக்கணித்துவிட்டு…
-
அமெரிக்காவுடன் வர்த்தகப்போர்- கனடாவே அதிகம் பாதிக்கப்படும்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது ஆரம்பித்துள்ள வர்த்தகப் போர் இரண்டு நாடுகளின் வணிகங்களையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும், கனேடியப் பொருளாதாரம் கடுமையான மந்தநிலையைச் சந்திக்கும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இரண்டு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா, கனடாவின் 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் மீது 50 சதவீத வரியை விதித்துள்ளது. ஜனவரி 1 முதல் அனைத்து சிற்றுந்து தயாரிப்புகள் மீதும் 50 சதவீத வரி விதிக்கப்படும்…
-
உகாண்டா அரசர் ஓயோ நியம்பா காலமானார்!
ஓயோ நியம்பா (Oyo Nyimba), உகாண்டா அரசராக 1995-ல் அரியணை ஏறியதன் மூலம் உலகின் மிக இளைய மன்னராக மாறினார். இவர் தனது 34-வது வயதில் நேற்று இரவு காலமானதாக அவரது இராஜ்ஜியத்தின் பிரதமர் அறிவித்துள்ளார். உகாண்டா ஒரு குடியரசாகும், இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டுத் தலைவரால் ஆளப்படுகிறது, ஆனால் அது காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தில் இருந்ததைப் போலவே தங்கள் இராஜ்ஜியங்களின் மீது தொடர்ந்து ஆட்சி புரியும் பல பாரம்பரிய அரசுகளைக் கொண்டுள்ளது. அவர்களின் அரசியல் அதிகாரம்…
-
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாகிஸ்தான் தனது ராணுவ பலத்தை விரிவுபடுத்தி வருவதாக செய்திகள்
கட்டார் நாட்டுடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டதன் மூலம், பாகிஸ்தான் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனது ராணுவ பலத்தையும் செல்வாக்கையும் விரிவுபடுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் மற்றும் கட்டார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா அலி அப்துல்லா அல்-சலேம் அல்-சபா ஆகியோரிடையே ராவல்பிண்டியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. கட்டார் ராணுவத்திற்குப் பயிற்சி அளித்தல், அதன் பாதுகாப்புத் திறனை மேம்படுத்துதல் மற்றும் எல்லை மேலாண்மையில் உதவுதல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும்.…