Category: முக்கிய செய்தி

  • வான் மற்றும் கடல் கட்டுப்பாட்டை சீனா பலப்படுத்துவதாக தைவான் எச்சரிக்கை

    சீனாவின் நடவடிக்கைகளில் அதிகரித்து வரும் கணிக்க முடியாத தன்மையும், தைவான் மீதான ராணுவ அச்சுறுத்தலும் தீவிரமடைந்துள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகத்தின் வருடாந்திர ஆய்வு அறிக்கை எச்சரித்துள்ளது. தைவானைச் சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் தனது கட்டுப்பாட்டை சீனா படிப்படியாக இறுக்கி வருவதாக தைவான் தெரிவித்துள்ளது. தைவானின் வெளிநாட்டுப் போக்குவரத்து வழிகளைத் துண்டிக்கவும், ஆரம்பக் கட்ட மோதல்களிலேயே அதன் கட்டளை மற்றும் வான் பாதுகாப்பு வலைப்பின்னல்களைச் செயலிலக்கச் செய்யவும் சீனா இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இருப்பினும், தற்போது தைவான்…

  • யு.எஸ். விமானந்தாங்கி கப்பலின் பட்டாயா வருகை: பொருளாதார மீட்சியும் பாலியல் சுற்றுலா குறித்த கவலைகளும்

    அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த ‘யு.எஸ்.எஸ். அபிரகாம் லிங்கன்’ (USS Abraham Lincoln) விமானந்தாங்கி கப்பல் மற்றும் அதனுடன் இணைந்த போர்க்கப்பல்கள் தாய்லாந்தின் பிரபல சுற்றுலா நகரான பட்டாயாவிற்கு (Pattaya) வருகை தரவுள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் நீண்ட நாட்களாக முகாமிட்டிருந்த இந்த கப்பல், அங்குள்ள வீரர்களின் ஓய்வுக்காக வருகை தருகிறது. சுமார் 5,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க மாலுமிகளும் கடற்படை வீரர்களும் பட்டாயா நகருக்கு வருகை தரவுள்ளனர்.வியட்நாம் போர் காலத்திலிருந்து அமெரிக்க வீரர்களின் வருகையை நம்பி இயங்கும் இப்பகுதியில்,…

  • ஈரான் அதிபர் – நரேந்திர மோடி சந்திப்பு

    ஈரான் அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய மோதல் 6 மாதங்களைக் கடந்தும் நீடித்து வரும் நிலையில், உலகின் சுமார் 20 சதவீத கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணை முடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் எரிபொருள் விலையிலும், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் உயர்வு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இரு…

  • நீர்மின் நிலையச் சுரங்கப்பாதைகளில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கானவர்களைத் தேடும் பணியில் நேபாள மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட மாபெரும் பனிப்பாறைச் சரிவு (Glacier Collapse) காரணமாக, பனி, பாறைகள், சேறு மற்றும் இடிபாடுகள் வெள்ளம் போலத் Trishuli மற்றும் Bhotekoshi நதிப் படுகைகளில் பாய்ந்தன. இதனால் அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  நீர்மின் நிலையப் பணிகளில் ஈடுபட்டிருந்த 900-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் சேறும் பாறைகளும் மூடிய நீர்மின் நிலையங்களின் சுரங்கப்பாதைகளுக்குள் (Hydropower Tunnels) சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.  உள்நாட்டு பாதுகாப்புப் படையினருடன் இணைந்து, இந்தியா மற்றும்…

  • உஸ்பெகிஸ்தானுக்கு அரசு முறைப்பயணம் – வைரலாகும் இந்திய பிரதமரின் காணொளி

    உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு, நான்கு நாள் அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள காணொளி ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. தாஷ்கண்டில் இன்று நடைபெற்ற யோகா நிகழ்ச்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டுள்ளார். இதன்போது,யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் பிரதமர் மோடி காணொளி பதிவு செய்து அதனை தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில், ”நமஸ்தே, நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று சிறப்பாக யோகா செய்து காட்டி இருக்கிறீர்கள். அனைத்து வயதினரும் இந்த…

  • வாக்களித்தவர்களுக்கு உண்மையாக இருக்க விஜய் செய்த காரியம்

    வாக்களித்த மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக, 234 சட்டமன்ற உறுப்பினர்களையும் மேடையில் நிற்க வைத்து முதல்வர் விஜய் சத்தியம் பெற்றதாக தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் எந்த முதலமைச்சரும் இப்படி செய்தது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் பணம் படைத்தவர்கள் மட்டும்தான் ஆட்சியில் அமர முடியும் என்ற நிலையை தமிழக வெற்றிக்கழகம் மாற்றியுள்ளது என்று திண்டுக்கல்லில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், பெற்றோர்களை முதியோர்…

  • பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது- நள்ளிரவு முதல் அமுல்!

    இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று (30) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விலைத் திருத்தங்களின்படி, 92 ஒக்டென் பெட்ரோல் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ. 399.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (முன்னைய விலை ரூ. 414.00). 95 ஒக்டென் பெட்ரோல் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ. 475.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது…

  • ஈரானின் லராக் தீவிலுள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்

    ஈரானின் லராக் (Larak) தீவில் உள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் நேற்று (30) தாக்குதல் நடத்தியுள்ளன. கடந்த ஜூலை மாத இறுதிக்கு பின்னர் ஈரானிய நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்தும் நேரடி இராணுவத் தாக்குதல் இதுவாகும். ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கடல் கண்ணிவெடிகளை பொருத்துவதற்காக ஈரானியப் புரட்சிகர காவல்படை ஏவுகணைகளைத் தயார்படுத்திக் கொண்டிருந்ததை அவதானித்ததை அடுத்து, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில்சில இராணுவத்தினரும் பொதுமக்களும் உயிரிழந்ததாகவும் பலர்…

  • இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கட்டுப்பாடு

    பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலிப்பெருக்கி மற்றும் ஒலிபெருக்கிச் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒலி மாசுபாடானது குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்குப் பெரும் சுகாதார மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் 38/2005 இலக்க கட்டளை மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 261 ஆம் பிரிவின் கீழ், பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிபெருக்கிப் பயன்பாடானது பொது தொல்லையாகக் கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத்…

  • கனடா பிரதமர் மார்க் கார்னி ஆதரவுடன் உருவாக்கப்பட்டு வரும் புதிய உலகளாவிய பாதுகாப்பு வங்கி

    நாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பாதுகாப்புத் திட்டங்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்கவும் தோராயமாக €100 பில்லியன் ($116 பில்லியன்) நிதி திரட்ட இந்த வங்கி திட்டமிட்டுள்ளது. கனடாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்த வங்கிக்கு இதுவரை சுமார் €5 பில்லியன் நிதி உறுதியளிக்கப்பட்டுள்ளது. கனடாவுடன் இணைந்து அல்பேனியா, பெல்ஜியம், கிரீஸ், லாத்வியா,லக்சம்பர்க், ருமேனியா, துருக்கி மற்றும் உக்ரைன் ஆகிய ஒன்பது நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும், பிரிட்டன், ஜெர்மனி போன்ற பெரிய பொருளாதார நாடுகள் இன்னும் இதில் இணையவில்லை.…