Category: முக்கிய செய்தி
-
உண்மையை அறியாமல் எவரும் உயிரிழக்கக்கூடாது! யாழில் ஐ. நா பணிக்குழு உறுப்பினர் எடுத்துரைப்பு
வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் முறையான நம்பகமான ஆதாரங்கள் உள்ள போதிலும், அவற்றை அரச அதிகாரிகள் மறுப்பதை நாம் வலுவாக எதிர்க்கிறோம் என வலிந்து காணாமலாக்கபடலகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் உறுப்பினர் அனா லொரெனா டெல்கடில்லோ பேர்ஸ் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளினால் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டில் அவர் ஆற்றிய சிறப்புரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். “உண்மை, நீதி, மீள்நிகழாமைக்கான பயணத்தில்…
-
நாசாவின் (NASA) நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கி (Nancy Grace Roman Space Telescope) கென்னடி விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
நாசாவின் (NASA) புதிய மற்றும் ஆற்றல் வாய்ந்த நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கி (Nancy Grace Roman Space Telescope) புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. தோராயமாக $4 பில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்வெளி ஆய்வுக்கூடம், ஸ்பேஸ்எக்ஸின் (SpaceX) பல்கான் ஹெவி (Falcon Heavy) ராக்கெட் மூலம் சூரிய உதயத்திற்குப் பிறகு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பூமியிலிருந்து சுமார் 1 மில்லியன் மைல்கள் (1.6 மில்லியன் கி.மீ) தொலைவில்…
-
வடக்கு சைப்ரஸ் கடற்கரை பகுதியில் பயணிகள் கப்பல் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு
வடக்கு சைப்ரஸ் (Northern Cyprus) கடற்கரை பகுதியில் பயணிகள் கப்பல் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக வடக்கு சைப்ரஸ் பிரதமர் Ünal Üstel உறுதிப்படுத்தியுள்ளதாக BBC News செய்தி வெளியிட்டுள்ளது. கியிரீனியா (Kyrenia) துறைமுகத்திலிருந்து 4 கடல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்த ‘Filo Jet’ என்ற பயணிகள் கப்பல், நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கப்பலில் மொத்தம் 267 பயணிகள் மற்றும் ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர். இதில் 237 பேர் மீட்கப்பட்டுள்ள…
-
ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் பிரிட்டிஷ் பெண் ஒருவர் உயிரிழப்பு
ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் உள்ள ரோசென்ஹீம் (Rosenheim) இரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் 31 வயது பிரிட்டிஷ் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் . ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்கு ரோசென்ஹீம் இரயில் நிலையத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. படுகாயமடைந்த அந்தப் பெண் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பவேரிய காவல்துறை (Bavarian Police) தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் நடந்த உடனேயே அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், 27…
-
ஐரோப்பிய யூனியனில் (EU) இணைவது குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஐஸ்லாந்து நாட்டு மக்கள் வாக்களித்து முறியடித்துள்ளனர்
பொது ஒளிபரப்பாளரான RUV வெளியிட்டுள்ள தகவலின்படி, மொத்த வாக்குகளில் 52.8% பேர் அரசாங்கத்தின் இந்த யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஆதரவாக 47.2% பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்; இரு தரப்புக்கும் இடையே சுமார் 12,600 வாக்குகள் வித்தியாசம் இருந்தது. ஏற்கனவே ஐரோப்பிய யூனியனின் ஒற்றை சந்தை மற்றும் ஷெங்கன் வலயத்தில் ஐஸ்லாந்து அங்கம் வகித்தாலும், யூனியனின் பொதுவான மீன்பிடி கொள்கையால் தங்கள் நாட்டின் மீன்பிடி உரிமைகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சமே இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகும். மீன் மற்றும்…
-
திபெத் மக்களுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சீன அரசு
திபெத்தில் ஏற்கனவே இருந்த தடுப்பு ஏரிக்குக் கீழ்நோக்கிய பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, புதிதாக மற்றொரு ஏரி உருவகியுள்ளதாகச் சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக உருவான முந்தைய தடுப்பு ஏரி, கூடுதல் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், இயற்கை முறையிலேயே வற்றி வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கண்காணிப்பு ட்ரோன் ஒன்று நேற்று(30) இந்த நிலச்சரிவை கண்டறிந்ததாகவும், அதன் இடிபாடுகள் ஆற்று நீரை மறித்து புதிய தடுப்பு ஏரியை…
-
யாழில் வீடொன்றின் மீது தாக்குதல் – பொலிஸாரிடம் சிக்கிய கும்பல்
யாழ்ப்பாணம் – நெல்லியடியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு, அங்கிருந்த கண்காணிப்பு கமராக்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர் உள்ளிட்ட கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடாத்தி, வீட்டு வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களையும் குறித்த உள்ளூராட்சி உறுப்பினர் தலைமையிலான கும்பல் சேதப்படுத்தி உள்ளது. இது தொடர்பில் வீட்டார் நெல்லியடி பொலிஸ்…
-
கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் – பிரதேச சபை அனுமதியின்றி அடாத்தாக அமைப்பு
வலி.தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி கந்தரோடை விகாரைக் காணிக்குள் பௌத்த மத்திய நிலையம் அடாத்தாக அமைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சுமார் 4 பரப்பு விஸ்தீரனம் உள்ள கந்தரோடை விகாரை காணியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு குறித்த பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. அக்காலப்பகுதியில் பிரதேச சபை அனுமதியின்றி கட்டப்படும் கட்டடத்தை நிறுத்துமாறு அறிவித்தல் ஒட்டியிருந்த நிலையில் குறித்த கட்டுமானங்கள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் குறித்த பௌத்த மத்திய நிலையக் கட்டுமானம்…
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இன்று
ஒவ்வொரு ஆண்டும் ஒகஸ்ட் 30 ஆம் திகதியானது ‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக’ (International Day of the Victims of Enforced Disappearances) உலகளாவிய ரீதியில் அனுசரிக்கப்படுகிறது. அனைத்து நபர்களையும் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனம் நிறைவேற்றப்பட்டு இருபது ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான தினம் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது. அந்த வகையில், “பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை. இப்போதே செயல்படுவோம்” என்ற தொனிப்பொருளை மையமாகக் கொண்டு இம்முறை சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகின்றது.…
-
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ராட்சத கணவாய் இனப்பெருக்க நிகழ்வு இந்த ஆண்டு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது
ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரைப் பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகின் மிகப்பெரிய ராட்சத கணவாய் (Giant Cuttlefish) இனப்பெருக்க நிகழ்வு இந்த ஆண்டு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. வழக்கமாக லட்சக்கணக்கான கணவாய்கள் கூடும் இந்தப் பகுதியில், இந்த ஆண்டு வெறும் 1,811 கணவாய்கள் மட்டுமே வந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் (63,000) 97% குறைவு ஆகும். பொதுவாக மில்லியன் கணக்கில் இடப்படும் முட்டைகள், இந்த முறை வெறும் 440…