Category: முக்கிய செய்தி
-
செயற்கை நுண்ணறிவு போட்டியில் வெல்பவர்களே உலகை வெல்வார்கள் – ட்ரம்ப்
செயற்கை நுண்ணறிவு (AI) போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களே உலகளவில் வெற்றியாளர்களாக இருப்பார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியின் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும் என ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி தெரிவித்திருந்த நிலையில், அவரது கருத்துக்கு ஓபன் ஏஐ, எக்ஸ் ஏஐ, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும், இதற்கு மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ள ட்ரம்ப், அயர்லாந்து…
-
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் – எண்ணெய் விநியோகத்துக்கு புதிய அச்சுறுத்தல்
மத்திய கிழக்கில் இராஜதந்திர முயற்சிகள் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் இடம்பெறும் தாக்குதல்கள் உலகளாவிய எரிசக்தி விநியோகம் தொடர்பான அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளன. ஈரான் மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (14) நடைபெறவிருந்த நிலையில், ஒருமித்த கருத்தை எட்டும் நோக்கில் அது ஒத்திவைக்கப்பட்டதாக ஓமான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் பத்ர் அல்-புசைதி தெரிவித்துள்ளார். ஓமான் ஏற்பாட்டில் நடைபெறவிருந்த இந்தச் சந்திப்பில் வளைகுடா அரபு நாடுகளுடன் ஈரானும்…
-
தெற்குலகில் ஒருங்கிணைந்த பெரும் சந்தையை உருவாக்க வேண்டும் – சீன ஜனாதிபதி
தெற்குலகில் வளரும் பொருளாதார நாடுகளை ஒருங்கிணைத்து, பெரிய சந்தையை உருவாக்கும் வகையில் பிரிக்ஸ் அமைப்பு செயல்பட வேண்டும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். டில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் நிறைவு அமர்வில் உரையாற்றிய அவர், வர்த்தகம், உற்பத்தி, முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட 5 அம்ச செயல்திட்டத்தை முன்வைத்தார். இதன் கீழ், அனைவரும் அணுகக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்குவதில் சீனா தலைமை வகிக்கும் என்றும் அவர் அறிவித்தார். சர்வதேச விதிமுறைகள்…
-
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சென்றுகொண்டிருந்த ஈரான் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு மாலுமிகள் படுகாயமடைந்துள்ளனர். ஈரானின் குவாசம் தீவு அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் என ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், தாக்குதல் தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகவில்லை. மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்கும்…
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணை உறுப்பினராக கனடா முயற்சி
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தும் நோக்கில் கனடாவை அதன் ‘இணை உறுப்பினராக’ மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி ஆராய்ந்து வருகின்றார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்துடனான வர்த்தகத் தகராறு மற்றும் பரஸ்பர வரிகள் காரணமாகக் கனடாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தனது வர்த்தகப் பங்காளிகளை வேறுபடுத்தும் முயற்சியில் கனடா தீவிரமாக இறங்கியுள்ளது. கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில்…
-
ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கு இரக்கமற்ற தண்டனை! பகிரங்கமாக அறிவித்தார் ஜனாதிபதி அநுர
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய எந்தவொரு நபருக்கும் கருணை காட்டாது அனைவருமே கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற மக்கள் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில், முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மக்கள் நலன் சார்ந்த அரசாங்கங்களாக இருக்கவில்லை. ஊழல் நிறைந்த அந்த அரசாங்கங்கள் திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஊழல்வாதிகளையே பாதுகாத்தன. நாட்டில் வேரூன்றி இருக்கும் பாதாள உலகக்…
-
பாகிஸ்தானில் தொடரும் அவலம் ; 10 நாட்களில் 6 ஹிந்து சிறுமிகள் கடத்தல்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஹிந்து சிறுமியர் கடத்தப்பட்டு, கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்யப்படும் அவலம் தொடர்கிறது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து பெண்கள், குறிப்பாக கோலி, பீல், மேக்வார் போன்ற ஏழை சமூகத்தைச் சேர்ந்த சிறுமியர் அடிக்கடி காணாமல் போகின்றனர். இவர்கள் கடத்தப்பட்டு, கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு, பின் திருமணம் செய்து வைக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. இந்தத் திருமணங்கள் சட்டவிரோதமானவை என சிறுபான்மையினர் நல அமைப்புகள் குரல் கொடுத்தும், இதுபோன்ற அவலங்கள் தொடர்கின்றன. அந்த…
-
கனடா குடியுரிமைச் சான்றிதழ் விண்ணப்பங்கள் தேக்கம்
கனடாவில் புதிய சி-3 சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, பரம்பரை வழியிலான குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும், அவற்றுக்கான காத்திருப்பு காலமும் மிகக் கடுமையாக அதிகரித்துள்ளன. கனடா குடியேற்ற, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது. தற்போது 1,36,000க்கும் அதிகமானோர் குடியுரிமைச் சான்றிதழ் முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர். ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 14,000 விண்ணப்பங்கள் அதிகம் ஆகும். விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான காலம் 33 மாதங்களுக்கும் மேலாக அதிகரித்துள்ளது.…
-
ஜாவா கடலில் காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு
இந்தோனேசியாவுக்குச் சொந்தமான ஜாவா கடல் பகுதியில் இன்று (13) காலை காணாமல் போன பயணிகள் கப்பலை மீட்புக் குழுவினர் தற்போது கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, மீட்புக் குழுவினர் இதுவரை 103 பயணிகளை மீட்டுள்ளனர். எவ்வாறாயினும், விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 140 பயணிகள் காணாமல் போயுள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுரபயா நகரிலிருந்து பன்ஜர்மசின் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தக் கப்பலில் விபத்து நேர்ந்தபோது 243 பயணிகள் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தோனேசியாவில் பயணிகள் கப்பல் விபத்து- 140 பேர் மாயம்,103 பேர் மீட்பு
இந்தோனேசியாவில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பயணிகள் உயிரிழந்தனர். வடக்கு இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்திற்கு அருகிலுள்ள கடல் பகுதியில் கே.எம். பார்சிலோனா 5 கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டபோது கப்பலில் 280 பயணிகள் இருந்தனர், மேலும் தீயில் இருந்து தப்பிக்க அவர்கள் கப்பலில் இருந்து கடலுக்குள் குதிக்கும் காட்சிகள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 150 பேர் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.