Category: முக்கிய செய்தி

  • பிரிட்டனில் இருந்து பிரிவதற்கு 3 நாடுகள் கூட்டுப் பிரகடனம்

    ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்வது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தும் உரிமையை கோரும் கூட்டு பிரகடனம் இன்று வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நாடுகளும் பிரிட்டனின் அரசியலமைப்பின் கீழ் உள்ள நிலையில், நீண்டகாலமாக பிரிட்டனில் இருந்து விலகி தனி அரசியல் பாதையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அங்கு நிலவி வருகின்றன. சமீபத்திய தேர்தல்களில் பிரிவினையை ஆதரிக்கும் கட்சிகள் இந்த மூன்று நாடுகளிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளன. ஸ்காட்லாந்தில்…

  • முல்லைத்தீவில் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் – ரவிகரன் எம்.பி.

    முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கங்களின் ஆக்கிரமிப்பிலிருந்து ஏற்கனவே விடுவிக்கத் தீர்மானித்த 17,469.58 ஹெக்டயர் காணிகளையும் உடனடியாக விடுவித்து காணிகளுக்குரிய மக்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை யுத்தகாலத்தில் மக்களுக்கு காணி ஆவணங்களை எடுத்துச் செல்லக்கூடிய சூழல் இருக்கவில்லை என இதன்போது சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், அவ்வாறு ஏற்கனவே விடுவிப்பதெனத் தீர்மானிக்கப்பட்ட காணிகளுக்கு தற்போது மக்களிடமிருந்து ஆவணங்களைக் கோருவதை ஏற்றுக்கொள்ளமுடியாதெனவுந் தெரிவித்துள்ளார். குறிப்பாக இன்று (14) இடம்பெற்ற…

  • துருக்கி பில்லியனரின் விமானம் விபத்தில் சிக்கியது

    துருக்கி பில்லியனர் ஹம்டி அகினுக்கு சொந்தமான வர்த்தக விமானம் லிபியாவில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியுள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் அத்தாதுர்க் விமான நிலையத்திலிருந்து, செஸ்னா சிடேஷன் லாட்டிட்யூட் வர்த்தக விமானம் லிபியாவுக்குச் சென்று கொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி காலை 10:07 மணிக்கு மிஸ்ராட்டா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று தீப்பிடித்து விபத்தில் சிக்கியது. விமான நிலைய அவசர மீட்புக் குழுவினர் விரைந்து சென்று தீயை அணைத்து, விமானத்தில் இருந்த 2 விமானிகள் மற்றும் ஒரு…

  • முடிவடையும் மேக்ரானின் பதவிக்காலம்

    2027ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில், தீவிர வலதுசாரியினர் முதலானோருக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருக்கும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம், 2027ஆம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அடுத்து யார் பிரான்சின் ஜனாதிபதியாவார் என்னும் கேள்வி வலுத்தவண்ணம் உள்ளது. சமீபத்திய ஆய்வொன்றில், வலதுசாரிக் கட்சியான National Rally கட்சியைச் சார்ந்த மரீன் லெ பென்னுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. முதல் சுற்றுத் தேர்தலில், மரீன்…

  • 399 ட்ரோன்களை இடைமறித்த ரஷ்யா

    ரஷ்யாவின் சோச்சி மீது உக்ரைன் நடத்திய இரவுநேர தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர். ரஷ்யாவின் கடற்கரை நகரமான சோச்சி மீது உக்ரைன் நடத்திய இரவுநேர தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர். உக்ரைன் ரஷ்யாவின் கடற்கரை நகரமான சோச்சி மீது இரவுநேர தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர். மேலும், இந்த தாக்குதலின் விளைவாக மூன்று வீடுகள் சேதமடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். ரோஸ்டோவ் பிராந்தியத்தில் 50 ட்ரோன்…

  • ஈரான் போருடன் இணையும் ஏமன் போர்.. அதிர்ச்சியில் சவுதி!

    செங்கடல் மற்றும் பாப் எல்-மண்டேப் ஜலசந்திப் பகுதியில் ஏமனின் ஹவுதி அமைப்பினர் தங்களின் தாக்குதல் திறனை விரிவுபடுத்திப்படுத்தி வரும் நிலையில், ஆப்பிரிக்காவின் ஜிபூட்டியில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஒரே நிரந்தர இராணுவத் தளமான கேம்ப் லெமோனியர் (Camp Lemonnier) அவர்களின் ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் நேரடி எல்லைக்குள் வந்துள்ளது. மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரில், ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சமீபத்திய தாக்குதலின்போது ஏமனின் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச்…

  • கோடிகளில் கலைப்பொருட்கள் கொள்ளை.. ஐரோப்பிய அருங்காட்சியகங்களை குறிவைக்கும் மர்ம கும்பல்?

    ஐரோப்பிய நாடுகளில் அண்மைக் காலமாக அருங்காட்சியகங்களைக் குறிவைத்து அதிர்ச்சி தரும் வகையில் கலைப் பொருட்கள் மற்றும் அரிய ஓவியங்கள் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் உள்ள உலகப் புகழ்பெற்ற அருங்காட்சியகங்களில், பல மில்லியன் யூரோ மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியங்கள் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. அண்மையில் பிரான்ஸின் ரென்வா அருங்காட்சியகத்தில் புகுந்த மர்ம நபர்கள், மூன்று நிமிடங்களுக்குள் பல கோடி…

  • புயல் காற்றில் சிக்கி கடுமையாக குலுங்கிய விமானம்

    கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தில் விமானம் துனிசியாவின் கார்த்தேஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முன்றபோது அங்கு வீசிய புயல் காற்றில் சிக்கியது. இதனால் 3 முறை முயன்றபோதும் விமானதால் தரையிறங்க முடியவில்லை. மேலும் விமானமானது கடுமையாக குலுங்கியுள்ளது. இதனால் பயணிகள் தங்கள் இருக்கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு பீதியில் கூச்சலிட்ட காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பயணிகளில் ஒருவரான மரினா மேஸ்காயா தெரிவிக்கையில், மூன்றாவது முயற்சியின் போது விமானம்…

  • 22 ஆண்டுகள் உறைநிலையிலிருந்த கரு மூலம் குழந்தை பிரசவித்த 54 வயது பெண்!

    கிரேக்கத்தில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் (Frozen Embryo) வைக்கப்பட்டிருந்த கரு மூலம் 54 வயது பெண் ஒருவர் பெண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். கிரேக்கத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா ரப்தி-ட்செலேபி (54) – கொன்ஸ்டான்டினோஸ் ரப்திஸ் (60) தம்பதியின் 21 வயது மகன் ஜியோர்ஜோஸ், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடந்த வீதி விபத்தொன்றில் உயிரிழந்தார். மகனின் பிரிவால் துயருற்ற தம்பதியினர், மீண்டும் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க தீர்மானித்தனர். இதற்காக, 22 ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் செயற்கை கருத்தரித்தல்…

  • அமெரிக்க தளத்தை உளவு பார்த்த சீனா? – ட்ரம்ப் பரபரப்பு பதில்

    ஈரான் அமெரிக்க நிலைகள் மீது நடத்திய சமீபத்திய தாக்குதலின்போது, ஜோர்டானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் செயற்கைக்கோள் படங்களை சீன உளவு அமைப்புகள் ஈரானுக்கு வழங்கியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஜூலை 17ஆம் திகதி ஜோர்டானில் உள்ள முவஃபாக் சால்டி விமானப்படைத் தளத்தில் அமெரிக்கப் படைகள் நிலைகொண்டிருந்த நிலையில், ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, குறித்த அமெரிக்க இராணுவத் தளம் தொடர்பான செயற்கைக்கோள்…