Category: முக்கிய செய்தி
-
ஒன்லைன் விளையாட்டுக்காக கடையை உடைத்து திருடிய சிறுவர்கள்
ஆன்லைன் விளையாட்டுக்காக கடையை உடைத்து, 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான மொபைல் போன்களைத் திருடிய 14 வயதுடைய இரண்டு மாணவர்கள் இலங்கையின் தம்புத்தேகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 4ஆம் திகதி குறித்த இரு மாணவர்களும், எப்பாவல நகரில் பேருந்து நிலையம் அருகே உள்ள கைபேசிக் கடையை அதிகாலை நேரத்தில் உடைத்து தொலைபேசிகளை திருடிச் சென்றுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், தலவ நபாதவெவ மற்றும் எப்பாவல ரொட்டவெவ பகுதிகளில் வசிக்கும் 14…
-
இலங்கையின் முன்னாள் காவல்துறை மா அதிபரின் மரணம் குறித்த விசாரணைகள் தீவிரம்
முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, சம்பவம் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கியை, மேலதிக விசாரணைக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக, மேல் மாகாண தெற்கு வலய குற்றத்தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் சமந்த விஜேசேகர தெரிவித்தார். நீதிமன்றத்துக்கு விடயங்களை அறிக்கைப்படுத்தியதன் பின்னர், குறித்த துப்பாக்கியை எதிர்வரும் திங்கட்கிழமை பகுப்பாய்வாளரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சி.டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகளை எதிர்வரும்…
-
சோனம் வாங்சுக்கை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற காவல்துறையினர்
இந்தியா: டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை அதிகாலை காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 21-வது நாளை எட்டியுள்ளது. பிடிஐ செய்தி நிறுவனத்தின்படி, கடந்த 20 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த…
-
புற்றுநோய்க்கு எதிராக தன்னையே ஆய்வகமாக மாற்றிய விஞ்ஞானி!
புற்றுநோய்க்கு எதிராகத் தன்னையே ஒரு நடமாடும் ஆய்வகமாக மாற்றிக்கொண்டு, மருத்துவ வரலாற்றில் புதிய மைல்கல்லைப் பதித்த உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்கோல்யர் (Professor Richard Scolyer) ஆவார். உலகப் புகழ்பெற்ற புற்றுநோய் ஆராய்ச்சியாளரான பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்கோல்யர், தனது உயிருக்கு ஆபத்தான மூளைக் கட்டிக்கு (Glioblastoma) பரிசோதனை நோய் எதிர்ப்பு சிகிச்சையை (Experimental Immunotherapy) முதலில் தன் உடலிலேயே சோதித்த விஞ்ஞானியாக அறியப்பட்டவர். அவர் தனது 59-வது வயதில் காலமானார். 2023-ஆம் ஆண்டு, குணப்படுத்த…
-
ஜனாதிபதி மீது தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்: செல்வம் அடைக்கலநாதன்
தமிழ் இனத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் ஆதரவு இருப்பதாக டெலோ (Telo) அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், தமிழ் இனத்தை ஒழிக்க வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயற்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படுவதற்கான ஒரு சாதகமான சூழல் உருவாகி…
-
இலங்கையில் தீவிரமாகும் டெங்குவின் தாக்கம்: இதுவரை 53 பேர் பலி
நாட்டில் டெங்கு நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 74,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, நோயாளர்களின் எண்ணிக்கை 74,000-ஐத் தாண்டியிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோஷிதவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
நிதிச் சலவை தடுப்பு சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது முறைப்பாட்டுத் தரப்பு சாட்சியாளர்களிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்டிஸ் முன்னிலையாகி சாட்சியாளர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். இதனையடுத்து மேலதிக சாட்சி விசாரணைகளுக்கென வழக்கு இம்மாதம் 24ம் தகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதியில் 730 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐந்து காணித்…
-
இலங்கையில் சவர்க்காரங்களுக்கு புதிய கட்டுப்பாடு
இலங்கையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு வகையான சவக்கார உற்பத்திகளுக்கான கட்டாய பெயரிடல் தேவைகளை உள்ளடக்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஒழுங்கு விதிகள் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், களஞ்சியசாலையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியின் பெயர், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அல்லது ஏதேனும் இரு மொழிகளில் தடித்த எழுத்துக்களில் பிரதான பக்கத்தில் அச்சிடப்பட வேண்டும். மூன்றாவது மொழி ஏதேனும் ஒரு பக்கத்தில் இடம்பெற…
-
நியூசிலாந்தில் உள்நாட்டுப் பறவைக்கு H5N1 பறவைக் காய்ச்சல்
நியூசிலாந்தில் முதன்முறையாக அந்தநாட்டின் பூர்வீகப் பறவை இனத்தைச் சேர்ந்த ‘சுவாம்ப் ஹாரியர்’ (Swamp Harrier) வகை கழுகுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வட தீவின் வைராபா பிராந்தியத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கழுகுக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, அந்தநாட்டின் உயிரியல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்ட்ரூ ஹொகார்ட் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் கடந்த புதன்கிழமை அன்று, வெலிங்டன் அருகே கண்டெடுக்கப்பட்ட ‘ப்ரவுன் ஸ்குவா’ (Brown Skua) எனும் கடல் பறவைக்கு முதன்முதலில் இந்த நோய் பாதிப்பு உறுதி…
-
சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக காவல்துறை தெரிவிப்பு
இலங்கையின் முன்னாள் காவல்துறை மாஅதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மாலபே, தலஹேனமாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை அவர் உடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இது உயிர்மாய்ப்பு என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 63 வயதான சி.டி. விக்ரமரத்ன, இரு பிள்ளைகளின் தந்தையாவார். இந்தச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவரது குடும்ப உறுப்பினர்களும் வீட்டிலேயே இருந்துள்ளனர். அவரது பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவருக்குச் சொந்தமான…