Category: முக்கிய செய்தி

  • பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்

    பிரிட்டனின் ஆளும் தொழிலாளர் கட்சியின் (Labour Party) புதிய தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பிரிட்டனின் அடுத்த பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்க உள்ளார். பிரிட்டனின் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் ஜூலை 17, வெள்ளிக்கிழமை அன்று முறைப்படி அறிவிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவர் வரவிருக்கும் திங்கட்கிழமை (ஜூலை 20) பிரிட்டனின் புதிய பிரதமராக முறைப்படி பதவியேற்கவுள்ளார்.…

  • 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

    2024-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் உள்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இயக்குநர் ஜெயராஜ் தலைமையிலான 11 பேர் கொண்ட நடுவர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ்ப் படமாக தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.சிறந்த நடிகராக கார்த்திக் ஆர்யன் (சந்து சாம்பியன்) மற்றும் மம்மூட்டி (பிரமயுகம்) ஆகிய இருவரும் இந்த விருதை கூட்டாகப் பகிர்ந்து கொள்கின்றனர். மேலும்…

  • 2026 FIFA இறுதிப்போட்டியில் பங்கேற்கிறார் அமரிக்க அதிபர்: வெள்ளை மாளிகை

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூஜெர்சியில் உள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில்(MetLife Stadium)  நடைபெறும் 2026 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேரில் பங்கேற்கிறார். சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தலைவர் கியானி இன்ஃபான்டினோவுடன் இணைந்து, அவர் உலகக் கோப்பை கோப்பையை வெற்றிபெறும் அணியிடம் வழங்குவார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட், அமெரிக்க வரலாற்றிலேயே மிக வெற்றிகரமான மற்றும் பாதுகாப்பான உலகக் கோப்பைத் தொடரின் நிறைவாக அதிபர் டிரம்ப்…

  • எஜமானை காப்பாற்றி உயிரை விட்ட வளர்ப்பு நாய்

    தமிழகத்தில் எஜமானின் குடும்பத்தினரை காப்பாற்ற உயிரை விட்ட நாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியின் தக்கலை அருகே பிரம்மபுரம் பகுதியில் வசித்து வருபவர் விகேஷ்(வயது 35), திருவனந்தபுரத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காயத்ரி, 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுடன் காயத்ரியின் தாயாரும் உடன் இருக்கிறார். இவர்கள் சிஞ்சான் என்ற 2 வயது நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை காயத்ரியின் தாயார் இரவு உணவு சமைப்பதற்காக பொருட்களை எடுத்துக்கொண்டிருந்தார், அப்போது அந்த…

  • தமிழக முதலமைச்சர் விஜய்யால் பிரபல்யமடைந்த கேக்!

    தமிழக முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாளில் அவர் வெட்டிய ‘மேங்கோ வெண்ணிலா கேக்’ (Mango Vanilla Cake) தற்போது மிகவும் பிரபலமடைந்துள்ளது. சென்னை பேக்கரி ஒன்றில் தயாரிக்கப்பட்ட இந்த கேக், சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து தற்போது வாடிக்கையாளர்களால் ‘சிஎம் கேக்’ (CM Cake) என்றே அழைக்கப்பட்டு பெருமளவில் ஆர்டர் செய்யப்படுகிறது. முதலமைச்சர் விஜய்க்கு நடிகை த்ரிஷா வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட மேங்கோ வெண்ணிலா கேக்’ தான் இவ்வளவு பிரபல்யமாகியுள்ளது. இந்நிலையில், அந்த நிழற்படத்தில் இடம் பிடித்திருந்த…

  • இலங்கையில் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் மோசடி

    கனடா – லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் சுமார் 8 மில்லியன் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொலன்னாவ, வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த பாயிஸ் மொஹமட் நப்டிகா என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டி பகுதியில் மறைந்திருந்த நிலையில்…

  • கனடா மீது புதிய வரிகளை விதிப்பதாக டிரம்ப் மிரட்டல்

    கனடாவில் (Canada) பரவும் காட்டு தீ காரணமாக அமெரிக்காவின் சில நகரங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். நச்சு புகை பரவலை தடுக்க தவறிய கனடா மீது கூடுதல் வரி விதிக்க போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவிட்டுள்ள டிரம்ப், கனடா தனது காடுகளையும் அவற்றில் உள்ள புதர்ச் செடிகளையும் முறையாகப் பராமரிக்காததால், அமெரிக்காவுக்குள் அசுத்தமான, மாசுபட்ட மற்றும் ஆரோக்கியத்திற்குத்…

  • வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸ் காலமானார்!

    மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸ் (89) காலமானார். 1968-ல் நடைபெற்ற முதல் தர கிரிக்கெட் போட்டியின் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசிய சோபர்ஸ்க்கு, சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட் விளையாடியவர்களிலேயே மிகச்சிறந்த ஆல்ரவுண்டராகவும், மிகவும் திறமை வாய்ந்த வீரராகவும் பலரால் பரவலாகக் கருதப்படும் சோபர்ஸ், ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனாகச் சிறந்து விளங்கினார்.அவரால் இடது கை வேகப்பந்துடன், ஆர்த்தடாக்ஸ் மற்றும் ஆப் ஸ்பின் வீச முடிந்தது. மேலும்,…

  • 7ஆவது நாளாகவும் ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!

    தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ‘முடிவுக்கு வந்துவிட்டது’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக ஏழாவது நாளாக தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் படைகள் ஈரானின் ‘கண்காணிப்பு தளங்கள், இராணுவ தளவாட உள்கட்டமைப்புகள், நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடல்சார் திறன்களை’ தாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இத்தாக்குதல்களுக்குப் பதிலடியாக, குவைத் உள்ளிட்ட பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளை…

  • ஒன்லைன் விளையாட்டுக்காக கடையை உடைத்து திருடிய சிறுவர்கள்

    ஆன்லைன் விளையாட்டுக்காக கடையை உடைத்து, 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான மொபைல் போன்களைத் திருடிய 14 வயதுடைய இரண்டு மாணவர்கள் இலங்கையின் தம்புத்தேகம  பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 4ஆம் திகதி குறித்த இரு மாணவர்களும், எப்பாவல நகரில் பேருந்து நிலையம் அருகே உள்ள கைபேசிக் கடையை அதிகாலை நேரத்தில் உடைத்து தொலைபேசிகளை திருடிச் சென்றுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், தலவ நபாதவெவ மற்றும் எப்பாவல ரொட்டவெவ பகுதிகளில் வசிக்கும் 14…