Category: முக்கிய செய்தி

  • ஜப்பானில் குழந்தைகள் பெறுவதில் ஆர்வம் காட்டாத மக்கள்

    ஜப்பானில் பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் இளம் தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. 2026-ஆம் ஆண்டின் புதிய புள்ளிவிவரங்களின்படி, ஜப்பானில் 30 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாதவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களுக்குக் குழந்தைகள் வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் அந்நாட்டில் பிறப்பு விகிதம் மிக வேகமாகச் சரிந்து, மக்கள் தொகை வீழ்ச்சி ஒரு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது. குறைந்த ஊதியம், அதிகமான வாடகை, குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவு போன்ற காரணங்களால் ஜப்பான் நாட்டு இளைஞர்களிடம் திருமணம் செய்யும்…

  • பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் கடும் எச்சரிக்கை

    பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ள Fontainebleau காட்டில் பற்றிய தீ, காட்டின் 10 சதவிகித பரப்பை அழித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், காட்டில் தீவைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரான்ஸ் ஜனாதிபதியான மேக்ரான் எச்சரித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ள Fontainebleau காட்டில் பற்றிய தீ 35,000 ஹெக்டேர் சதவிகித காட்டை அழித்து விட்ட நிலையில், வேண்டுமென்றோ அல்லது தெரியாமலோ தீயை வைத்த பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவர்…

  • பிரிட்டன் வானை மூடும் சகாரா புழுதி; ஆய்வில் எச்சரிக்கை

    ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனத்தில் இருந்து கிளம்பும் பிரம்மாண்ட புழுதிப் புயல் (Saharan Dust Plume) தீவிரமடைந்து, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய வான்பகுதியை மூடி வருவதாகப் புதிய அறிவியல் ஆய்வுகள் எச்சரித்துள்ளன. சுவீடனின் Lund University மற்றும் இங்கிலாந்தின் Manchester University இணைந்து நடத்திய புதிய ஆய்வின்மூலம் இத்தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் பிரிட்டனின் வான்பகுதி முற்றிலும் மங்கலான ஆரஞ்சு நிறமாக மாறுவதுடன், அங்கு ‘இரத்த மழை’ (Blood Rain)  எனப்படும் செம்பழுப்பு நிற மழை பொழிவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக…

  • இலங்கையில் ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவரிற்கு ஜூலை 28 வரை விளக்கமறியலில்

    இலங்கையின் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான அருண வருணஹெந்திகே ஆகிய மூவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று (17) முற்பகல் குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 28ஆம்…

  • மீண்டும் பரவும் கொவிட்- நான்கு பேர் உயிரிழப்பு

    இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில், சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த நான்கு பேரும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் பிற நீண்டகால உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 26 ஆம் திகதி…

  • சுரேஷ் சலே வழக்கு : இடைக்கால மனுக்களை பரிசீலிக்க நீதிமன்றம் திகதி நிர்ணயம்

    இலங்கை: குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தன்னைக் கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்குமாறு கோரி அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனுவில், தங்களையும் இணைத்துக்கொள்ளுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுக்களை பரிசீலிப்பதற்காக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 மற்றும் 6 ஆம் திகதிகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து…

  • கடும் வெப்பம் காரணமாக ஐரோப்பாவில் சீன தயாரிப்பு குளிரூட்டிகளுக்கு கடும் தட்டுப்பாடு

    ஐரோப்பிய நாடுகளில் நிலவும் வழக்கத்திற்கு மாறான கடும் வெப்ப அலை காரணமாக, சீன தயாரிப்பு குளிரூட்டிகளுக்கு (Air Conditioners) சந்தையில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, சீனாவின் ‘மீடியா’ (Midea) நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ‘போர்ட்டா-ஸ்பிலிட்’ (PortaSplit) வகை குளிரூட்டிகளுக்கு ஐரோப்பிய நுகர்வோர் மத்தியில் மிக அதிக தேவை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவின் பல முக்கிய நகரங்களில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கோடை வெப்பநிலை 40 பாகை செல்சியஸைத் தாண்டிப் பதிவாகியுள்ளது.ஐரோப்பிய நகரங்களில் உள்ள பல பாரம்பரிய, பழமையான மற்றும்…

  • லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் ஜஃப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைது

      லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் Jaffna Kings அணியின் உரிமையாளர், விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் காவல்துறை விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை பொலிஸின் விளையாட்டுத் துறை தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவினரால் (SIU) இந்த அதிரடிக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போட்டி ஒத்திவைப்பு, ஸ்பாட்-பிக்ஸிங் மற்றும் சூதாட்ட முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலான விசாரணைகளின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர்…

  • இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை ஹரியானாவில் தொடக்கி வைத்தார் மோடி

    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலின் சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையிலான ரயில் என்ஜினை தயாரிக்கும் முயற்சிகள் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கியது. வடக்கு மண்டல ரயில்வேயிற்காக 140 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் தொடங்கிய நிலையில், சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு வந்தன. இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்ததை அடுத்து, ரயில்…

  • சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள பதாகை

    ஈரானில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தை ட்ரம்ப் ரத்து செய்ததுடன் மீண்டும் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஏற்கனவே, கமேனியின் கொலைக்கு நிச்சயம் பழிதீர்ப்போம் என ஈரானின் புதிய தலைமை மதகுரு மொஜ்தபா கமேனி அறிவித்திருந்தார். மேலும், கமேனியின் இறுதிச்சடங்கில் அமெரிக்கா மற்றும் ட்ரம்ப்புக்கு எதிரான…