Category: முக்கிய செய்தி
-
பில் கேட்ஸ் விடுத்த எச்சரிக்கை-100 கோடி மக்களின் உயிருக்கு ஆபத்து
கடந்த சில ஆண்டுகளாக AI என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சியடைந்து உள்ளது. இந்த AI மென்பொருள்கள் மனிதர்களின் வேலைகளை பறித்துக்கொள்வதாக தொடர்ந்து விமர்சனங்கள் வரும் நிலையில், எதிர்காலத்தில் இந்தச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித குலத்துக்கே மாபெரும் அச்சுறுத்தலாக வரும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ’செயற்கை நுண்ணறிவின் தந்தை’ என்று அழைக்கபடும் ஜெஃப்ரி ஹின்டன் Geoffrey Hinton) கூட செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும், ஏலியன்களின் வருகையும் ஒன்றுதான் என்றும், எதிர்காலத்தில் தன்னைக்…
-
வேலையில் மனஅழுத்தம்| உணவு இடைவேளையில் நிகழ்ந்த அதிர்ஷ்டம்.. ஒரே நிமிடத்தில் கோடீஸ்வரராக மாறிய பெண்!
அதிர்ஷ்டம் எல்லோருக்கும் கைவிடுவதில்லை. ஒருவேளை, அது கைகூடும் பட்சத்தில் அவர்களின் தலையெழுத்தே மாறிவிடும். ஆனால், சில நிமிடங்களில் லாட்டரி சீட்டு மூலம் பல கோடி ரூபாயை வென்றபோதும், அந்த நபர் அமைதியாக மீண்டும் வேலைக்குச் சென்றிருப்பது உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் போர்ட்ஸ்மவுத் (Portsmouth)பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், அன்றைய தினம் வேலையில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார். மதிய உணவு இடைவேளையின்போது நோர்போக் நகரில் உள்ள ‘லவ் ஃபுட் மார்ட்’ என்ற கடையில்…
-
ஏர் இந்தியா விமானியின் செயல்.. அதிர்ச்சி அடைந்த பயணிகள்!
சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் இருந்து டெல்லிக்கு, ஏர் இந்தியாவின் AI 151 என்ற விமானம், கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி அன்று புறப்பட இருந்தது. சூரிச் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, மது வாசனை வீசுவதாக, பணியாளர்கள் சிலர் கண்டுபிடித்து, அதிகாரிகளிடம் தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில், விமானத்தில் ஆய்வு செய்ததில், இணை விமானி மது அருந்தியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு, விமானத்தில்…
-
அழிவின் விளிம்பில் 49,500 உயிர்கள்.. அதிகம் பாதிக்கப்பட்டது எவை? எச்சரிக்கும் IUCN Red List!
மனிதன் இந்தப் பூமியில் பிறப்பதற்கு முன்பே இங்கே வாழ்க்கை இருந்தது. அடர்ந்த காடுகளின் இருளுக்குள் நடந்த விலங்குகளும், மரக்கிளைகளில் கூடு கட்டிப் பாடிய பறவைகளும், மண்ணுக்குள் ஊர்ந்த சிற்றுயிர்களும், கடலின் ஆழத்தில் நீந்திய உயிரினங்களும் சேர்ந்து இந்தப் பூமியை உயிரோட்டமுள்ளதாக்கின. காலையில் எழுந்தவுடன் வீட்டைச் சுற்றிக் கேட்கும் பறவைகளின் சத்தம், ஒரு மரத்தின் நிழலில் நாம் இளைப்பாறும்போது, அதன் கிளையில் அமரும் ஒரு பறவை, மழைக்குப் பிறகு துள்ளிக்குதிக்கும் தவளை, மரத்தின் உச்சியில் அமர்ந்து பழம் கொத்தும்…
-
ட்ரம்ப் – சீ ஜின்பிங் பேச்சுவார்த்தை நிறைவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. வொஷிங்டனில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, சர்வதேச வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் கடந்த 23ஆம் திகதி அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார். இந்தச் சந்திப்பின்போது, அமெரிக்கா…
-
கொங்கோ விமான விபத்தில் இரு மூத்த இராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் நேற்று (25) இடம்பெற்ற விமான விபத்தில் இரு மூத்த இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். கிக்விட்டில் இருந்து தலைநகர் கின்ஷாசாவுக்கு பயணித்த இராணுவ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கெங்கே பகுதியில் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. விபத்தில் இராணுவ நீதிமன்றத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முடோம்போ கட்டலாய் டியெண்டே மற்றும் ஆயுதப் படைகளின் தணிக்கை ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் பாகுமி லிகுலியா ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும்,…
-
சிறுநீரக வைத்தியசாலையில் சிலிண்டர் வெடிப்பு – 7 பேர் காயம்
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த சிறுநீரக வைத்தியசாலை ஊழியர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக வைத்தியசாலை கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
-
புலம்பெயர்தல் தொடர்பில் கனடாவை சாடிய ட்ரம்ப்: கனடா பதிலடி
கனடா, புலம்பெயர்தல் மூலம் தன்னையே அழித்துக்கொள்வதாக ட்ரம்ப் சாடியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவின் புலம்பெயர்தல் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார். கனடாவின் கனடாவின் புலம்பெயர்தல் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ள, ட்ரம்ப், கனடா தனது புலம்பெயர்தல் கொள்கைகளால் தன்னையே அழித்துக்கொள்வதாக சாடியுள்ளார். அதாவது, சரியான பாதுகாப்புச் சோதனைகள் இல்லாமலே பல மில்லியன் புலம்பெயர்வோரை கனடா அனுமதிப்பதாகவும், அதன் மூலம் தன்னையே அழித்துக்கொள்வதாகவும் விமர்சித்துள்ளார் ட்ரம்ப். தனது சமூக ஊடகப்பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ள இடுகை ஒன்றில், கனடா அளவுக்கதிகமான மக்களை…
-
100 ஆண்டுகளில் முதன்முறை.. தாலிபன் பாணியில் கொரில்லா தாக்குதல்.. US-வை எதிர்கொள்ளத் தயாராகும் கனடா!
அமெரிக்கா – கனடா இடையே உறவு விரிசலடைந்து வரும் நிலையில். அமெரிக்கா ஒருவேளை கனடாவின் மீது ராணுவத் தாக்குதல் அல்லது படையெடுப்பை நிகழ்த்தினால், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கனடா ரகசியத் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், உலகம் முழுவதும் வரி விதிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்தார். இதை, மீண்டும்…
-
பின்லேடனுக்கு பயிற்சி அளித்த பாகிஸ்தான்.? நிதியுதவி செய்த அமெரிக்கா.? – வெளியான பின்னணி!!
சோவியத் யூனியனுக்கு எதிரான ஆப்கானிஸ்தான் போரின்போது, அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய ஒசாமா பின்லேடன் மற்றும் அய்மான் அல்-சவாஹிரி (Ayman al-Zawahiri) உள்ளிட்டவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பயிற்சி அளித்ததாக, பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் முஷாஹித் ஹுசைன் சையத் (Mushahid Hussain Syed) கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த முஷாஹித் ஹுசைன், சமீபத்தில் அளித்த பேட்டியில், 1979 முதல் 1989-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சோவியத் படைகளுக்கு எதிரான போரின்போது…