Category: முக்கிய செய்தி
-
நோ’ஈஸ்டர் புயலால் நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சியில் அவசரநிலை பிரகடனம்
நோ’ஈஸ்டர் (Nor’easter) புயல் காரணமாக அமெரிக்காவின் நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சி மாநிலங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குதல், மின் தடை, போக்குவரத்து ஸ்தம்பிப்பு, திறந்தவெளி மைதானங்களில் நடைபெறவிருந்த பல்வேறு நிகழ்வுகள் இரத்து செய்யப்படுதல் போன்ற பல பாதிப்புகளை ஏற்படுத்தியவாறு, சக்திவாய்ந்த ‘நோ’ஈஸ்டர்’ புயல் தற்போது அமெரிக்காவின் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் கடும் நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளனர். அமெரிக்க தேசிய வானிலை சேவையின் அண்மைக்கால அறிக்கையின்படி,…
-
ஹோர்முஸ் நீரிணை முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது – ட்ரம்ப்
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான்–அமெரிக்கா இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது தொடர்பில் ஈரான் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் முன்வைத்துள்ள நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க முடியும் என்றும், அணுசக்தித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்றும் ஈரான் தரப்பு தெரிவித்திருந்தது. எனினும், அந்த நிபந்தனைகளை…
-
“உலகில் உள்ள தெற்கு நாடுகளில் ‘4F’-ல் இக்கட்டான சூழல்” – ஜ.நாவில் ஜெய்சங்கர் பேச்சு
அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. அந்தக் கூட்டத்தில் ஐ.நா.வின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். நேற்று இந்தியா சார்பாக இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐ.நா.வில் உரையாற்றினார். அவர் பேசியதாவது… இந்த ஆண்டில், வளைகுடாப் பகுதியில் ஒரு மோதலை நாம் காண்கிறோம். இது ஏற்கெனவே சிக்கலாக உள்ள சூழலை மேலும் தீவிரமாக்குகிறது. அங்குத் தொடரும் பகைமை குறித்து நாங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளோம். சர்வதேச நீர்வழிப் பாதைகளைக் கடந்து செல்லும்…
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் புதிய திட்டம்
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஈரானின் முன்மொழிவை ஏற்று, அதற்கான தனது கடமைகளை நிறைவேற்றினால், ஈரானும் தனது கடமைகளை நிறைவேற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான புதிய திட்டம் தொடர்பில் இராணுவம், பாராளுமன்றம் மற்றும் அரசாங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆறு பேர் கொண்ட குழு கலந்துரையாடி வருவதாகவும் ஈரான்…
-
லண்டன் வீதி விபத்தில் 16 வயது இலங்கை மாணவி உயிரிழப்பு
பிரித்தானியாவின் லண்டன் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் 16 வயதுடைய இலங்கை மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மெலீஷா பிரேமரத்ன என்ற அம்மாணவி, தனியார் பாடசாலையொன்றில் 12 ஆம் தரத்தில் கல்வி பயின்று வந்தார். கடந்த வியாழக்கிழமை (24) காலை 8.15 மணியளவில் அவர் வழக்கம்போல் பாடசாலைக்கு நடந்துகொண்டிருந்த வேளையிலேயே இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதியதில், பலத்த காயமடைந்த மெலீஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்து தொடர்பில் கைது…
-
ஹோர்முஸ் ஜலசந்திக்கு வேறு பெயரிட்டுள்ள ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஹோர்முஸ் ஜலசந்திக்கு ட்ரம்ப் ஜலசந்தி என பெயரிட்டு வரைபடம் ஒன்றை பகிர்ந்துள்ளார். கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என குறிப்பிட்டு, ஒன்ராறியோ ஏரியை அமெரிக்க ஏரி என குறிப்பிடும் வரைபடத்தை சமீபத்தில் ட்ரம்ப் பகிர்ந்தது நினைவிருக்கலாம். இந்நிலையில், ஈரானுடனான மோதல் அதிகரித்துவரும் நிலையில், ஹோர்மூஸ் ஜலசந்திக்கும் வேறு பெயரிட்டு அது தொடர்பான வரைபடம் ஒன்றை பகிர்ந்துள்ளார் ட்ரம்ப். தனது சமூக ஊடகப்பக்கத்தில், ஹோர்மூஸ் ஜலசந்தியை ட்ரம்ப் ஜலசந்தி என குறிப்பிட்டு வரைபடம் ஒன்றை…
-
புதிய ஏவுகணையை வீசிய ஈரான்.. ஹார்முஸில் பின்வாங்கிய அமெரிக்க கடற்படை?
ஈரான் போர் தற்போது ஒரு ராணுவ மோதலாக மட்டுமின்றி, எண்ணெய், கப்பல் போக்குவரத்து, உலக எரிபொருள் விலை மற்றும் மத்திய கிழக்குப் பாதுகாப்பு ஆகியவற்றையும் நேரடியாகப் பாதிக்கும் சர்வதேச நெருக்கடியாக மாறியுள்ளது. இந்தச் சூழலில் அமெரிக்கா தனது கடற்படை நிலைப்பாட்டை மாற்றியதாக ஈரான் ஆதரவு ஊடகங்கள் வெளியிட்ட தகவல் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரான் ஏவியதாகக் கூறப்படும் ’காஸம் பாசீர்’ (Qasem Basir) கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க போர்க்கப்பல்கள் ஹார்முஸ் நீரிணைக்கு…
-
ரஷ்யாவிற்கு எதிராக ரோபோக்களை தரையிறக்கி 3000 வீரர்களை..உக்ரைனின் சஃபாரி நடவடிக்கை
உக்ரைன் இராணுவம் தரை ரோபோக்களை ரஷ்ய போரில் களமிறங்கியதாக தெரிய வந்துள்ளது. ரஷ்யாவின் 3,000 எதிரி வீரர்களைக் குறிவைத்து, தரை ரோபோக்களை களமிறக்கி உக்ரைன் சஃபாரி நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, உக்ரைன் இராணுவ ட்ரோன் தொழில்நுட்பத்தில் பெருமளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீண்ட தூர ட்ரோன்கள், ஏவுகணைகளை ரஷ்யாவின் ஆழத்திற்குள் தாக்குதல் நடத்த பயன்படுத்துகிறது. அந்த வகையில், புதிய சஃபாரி நடவடிக்கையில் ரஷ்ய முன்னணிப் படையின்…
-
3 மாத குழந்தையாக இருந்ததிலிருந்தே நினைவுகளை மீட்டெடுக்கும் சிறுவன்
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கடந்த வாரம் என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தி பார்ப்பது கூட சிரமமாக இருக்கும். ஆனால் 16 வயதான சிறுவன் ஒருவரால், தான் 3 மாத குழந்தையாக இருந்த காலத்திலிருந்து தனக்கு நடந்த நிகழ்வுகளை நினைவு கூற முடிவதாக தெரிவித்துள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த சிறுவனின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக ஆய்வாளர்கள் அந்த சிறுவனுக்கு KCL என பெயரிட்டுள்ளனர். ஆய்வாளர்களின் கூற்றுப்படி, உலகின் 99 சதவீத மக்களை விட, KCL தனது கடந்த கால நிகழ்வுகளை இளம்…
-
வெடுக்குநாறி ஆலயத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்
வவுனியா வடக்கு, நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் திடீரென புத்தர் சிலை ஒன்று கொண்டு வந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று(26) புரட்டாசிச் சனிக்கிழமையை முன்னிட்டு, வெடுக்குநாறி ஆலயத்தில் பெருந்திரளான இந்து பக்தர்கள் வருகை தந்து அன்னதானத்துடன் கூடிய விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பௌத்த பிக்கு ஒருவர் தலைமையில் வருகை தந்த குழுவினர், ஆலய வளாகத்தில் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த மத வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை…