Category: முக்கிய செய்தி
-
வல்வெட்டித்துறையில் குட்டிமணி, தங்கதுரை சிலை திறப்பிற்கு தற்காலிக தடை
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் குட்டிமணி மற்றும் தங்கதுரையின் உருவச்சிலைகள் திறக்கப்படவிருந்த நிகழ்வுக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. 1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (Telo) முன்னாள் தலைவர் தங்கதுரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் 43ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி வல்வெட்டித்துறை சந்திக்கு அருகில் இந்தச் சிலைகளைத் திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிலை திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து…
-
மர்ம மரணங்கள் சர்வதேச விசாரணை அவசியம்: பிரேம்நாத் சி.தொலவத்த
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மர்ம மரணங்கள் குறித்து முறையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக பதிவாகி வரும் சந்தேகத்திற்குரிய மற்றும் மர்மமான மரணங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளுக்கு அப்பால், வெளிப்படைத்தன்மையுடன் கூடிய சர்வதேச அளவிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய புதிய அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றதன் பின்னர் இவ்வாறான மர்ம மரணங்கள் தொடர்வதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இது குறித்து…
-
செம்மணி புதைகுழி – எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 450 ஆக உயர்வு
செம்மணி மனித புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 450ஆக உயர்வடைந்துள்ளது. 92 நாட்களாக இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் ஊடாக 454 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அகழ்ந்து எடுக்கப்பட்ட கால்களை குறுக்காக மடக்கிய நிலையில் காணப்பட்ட மனித எலும்புக்கூடு இன்னும் முழுமையாக மீட்கப்படவில்லையென அவர் சுட்டிக்காட்டினார்.
-
வெற்றிக் கிண்ணத்துடன் நாடு திரும்பிய ஸ்பெயின் அணிக்கு உற்சாக வரவேற்பு
2026 ஃபிஃபா (FIFA) உலகக் கிண்ணக் கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் தேசிய கால்பந்து அணி, வெற்றிக் கிண்ணத்துடன் தங்களது தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளது. நாட்டை வந்தடைந்த வீரர்களுக்கு அந்நாட்டு இரசிகர்கள் திரண்டு வந்து பிரம்மாண்ட வரவேற்பு அளித்துள்ளனர். அத்துடன், வெற்றியடைந்த வீரர்கள் உலகக்கிண்ணத்தை திறந்தவெளிப் பேருந்தில் சென்று நகரின் முக்கிய வீதிகளில் அணிவகுப்பு நடத்தினர். இந்தத் வெற்றி அணிவகுப்பைக் காணவும், வீரர்களை வாழ்த்தவும் இலட்சக்கணக்கான ஸ்பெயின் இரசிகர்கள் வீதிகளின் இருபுறமும்…
-
ஈரான் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் மீது அமெரிக்கா இன்று (21) தொடர்ந்து 10ஆவது நாளாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கூட்டுத் தாக்குதலை மேற்கொண்டபோது, இதற்குப் பதிலடியாக, உலகின் மிக முக்கிய கடல்வழி வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது. மேலும், அவ்வழியாகச் சென்ற மசகு எண்ணெய் மற்றும் சரக்குக் கப்பல்கள் மீதும், மத்திய கிழக்கில் உள்ள…
-
ஆப்கானிஸ்தானில் கனமழை 20 பேர் உயிரிழப்பு
கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நூரிஸ்தான் மாகாணத்தில் பெய்த கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளதுடன்,100 பேர் காணாமல் போயுள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்திசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காணாமல் போனவரகளை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
-
பயங்கரவாதத் தடைச்சட்டம் விரைவில் நீக்கப்படும் – நீதி அமைச்சர்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விரைவில் நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சற்றுமுன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பல தசாப்த கால பழமையான சட்டத்தை ஒழிப்பதற்கான தீர்க்கமான நடவடிக்கையாக, புதிய சட்டமூலம் ஏற்கனவே அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். ‘புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒழிக்கப்படும்’ என அமைச்சர் உறுதிப்படுத்தினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் இன்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் சம்பந்தப்பட்ட…
-
பெருவில் இரட்டை நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த ஜூலை 18 சனிக்கிழமை இரவு அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். பெருவின் தலைநகரான லிமாவிற்கு கிழக்கே அமைந்துள்ள ஜுனின் பிராந்தியத்தின் சுபாகா மாகாணத்தில் இந்த நிலநடுக்கங்கள் மையம்கொண்டிருந்தன.குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவானது. இது பூமியின் அடியில் சுமார் 24 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. சில மணி நேர இடைவெளியில் இரண்டாவது நிலநடுக்கமானது ரிக்டர்…
-
கனடா பொருட்களுக்கு 50 சதவீத வரி – ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நிர்வாகம், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பரந்த அளவிலான பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் சுங்கவரியை விதிப்பதாக அறிவித்துள்ளது. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வ உத்தரவு, இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் வர்த்தகப் போரின் மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது அமெரிக்காவின் மோட்டார் வாகனங்கள், வாகனப் பாகங்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் ஆகியவற்றுக்கு எதிராக கனடா அரசு நியாயமற்ற முறையிலும், பாகுபாட்டுடனும் வரிகளை விதித்து அமெரிக்க வர்த்தகத்தைப்…
-
உக்ரைன் சரக்குக் கப்பல் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்- 10 பேர் உயிரிழப்பு
உக்ரைன் சரக்குக் கப்பல் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 4 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து சோளம் ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. கோல்டன் லியோ வணிகக் கப்பல் மீது ரஷ்யா 3 ‘க்ரூஸ்’ ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதேவேளை, கப்பலில் இருந்த 17 மாலுமிகளுள் 8 பேர் மீட்கப்பட்டதுடன், படுகாயமடைந்த மற்றொரு இந்தியர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வணிகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள்…