Category: முக்கிய செய்தி
-
கனடாவில் காணாமல் போன சிறுவர்கள்: தேடுதல் பணி தீவிரம்
கனடாவின் மணிடோபா மாகாணத்தில் உள்ள நூடிமிக் ஏரியில் நீரில் மூழ்கி மாயமான இரு சிறுவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாயமான சிறுவர்கள் இருவரும் வின்னிபெக்கைச் சேர்ந்த சகோதரர்களான ஆரோன் அவ் ராமிரெஸ் (13 வயது) மற்றும் மெக்சிமோ அவ் ராமிரெஸ் (10 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். Whiteshell Provincial Park-இல் உள்ள ஸ்டர்ஜன் பால்ஸ் பகுதியில் உள்ள பாறைகளில் இந்த சகோதரர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.அப்போது 10 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக வழுக்கி தண்ணீரில் விழுந்துள்ளார்.…
-
கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக கடத்தல்
கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக மனிதர்களைக் கடத்திய சர்வதேசக் கும்பலைச் சேர்ந்த மூன்று மெக்சிக்கோ பிரஜைகள், அமெரிக்க நீதிமன்றத்தில் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட தகவல்களின்படி, இந்த மூன்று நபர்களும் கனடா எல்லை வழியாக நூற்றுக்கணக்கான இடம்பெயர்ந்தவர்களை அமெரிக்காவிற்குள் கடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மெக்சிக்கோ, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்களை முதலில் கனடாவிற்கு வரவழைத்து, பின்னர் அங்கிருந்து நியூயார்க் எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் கடத்தியுள்ளனர். சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க,…
-
விண்வெளி சாதனை தினம் இன்று!
மனிதன் முதன்முதலாக நிலவில் கால் பதித்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இன்று (ஜூலை 21) நினைவுகூரப்படுகிறது. 1969ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் திகதிஇ அமெரிக்காவின் ‘அப்பல்லோ 11’ விண்கலத்தின் மூலம் விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ரோங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் வெற்றிகரமாகக் காலடி வைத்தனர். நிலவில் காற்றோ அல்லது மழையோ இல்லாததால், அன்று அவர்கள் பதித்த காலடித்தடங்கள் பல லட்சம் ஆண்டுகளுக்கு அப்படியே அழியாமல் இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் மூலம் நிலவில்…
-
இந்திய ரெப் பாடகர் அறிவு கைது
பிரபல தமிழ் ரெப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நீட் (Neet) தேர்வுக்கு எதிராக திடீர் போராட்டம் நடத்தியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடகர் அறிவு தனது ஆதரவாளர்கள் 4 பேருடன் சென்னை தலைமைச் செயலக வளாகத்திற்குள் நுழைந்து, ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ என முழக்கமிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து கோஷமிட்டதால், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி,…
-
ராகுல் காந்தி கைது: டெல்லியில் பரபரப்பு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் இன்று (ஜூலை 21, 2026) காவல் துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் (Neet) வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்து, பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே இளைஞர்களுக்கு எதிராகச் செயல்படும் ஒரே பிரதமர் நரேந்திர மோடிதான் என்று ராகுல் காந்தி…
-
பிரிட்டனின் முதல் AI துறை அமைச்சராக இந்திய வம்சாவளி ஒருவர் நியமனம்
பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள என்டி பர்ன்ஹாம் தனது புதிய அமைச்சரவையை அமைத்துள்ள நிலையில், நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி கனிஷ்க நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமராக இருந்த கீர் ஸ்டார்மர் தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற ஆன்டி பர்ன்ஹாம் தனது புதிய அமைச்சு சேவையை ஆரம்பித்துள்ளார். தற்போது பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றி வரும் இவர், பிரிட்டன் அரசாங்கத்தின் முதல் AI அமைச்சராகப்…
-
எயார்பஸ் கொடுக்கல் – வாங்கல் விசாரணைக்காக CID அதிகாரிகள் அவுஸ்திரேலியாவிற்கு பயணம்
ஸ்ரீலங்கன் எயார்பஸ் விமானக் கொள்வனவு ஊழல் விசாரணைக்காக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றின் கூட்டுப் பொலிஸ் குழுவினர், அவுஸ்திரேலியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சப் பணம் பரிமாற்றப்பட்டதாகக் கூறப்படும் வங்கிச் கணக்குகள் மற்றும் சந்தேகநபர்களைக் கண்டறிவதே இந்த வெளிநாட்டுப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். அவுஸ்திரேலியாவில் வசிக்கும் டபிள்யூ. டி. நிமல் பெரேரா என்பவருக்குச் சொந்தமான வங்கிச் கணக்கில் இந்த இலஞ்சப் பணம் பரிமாறப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவரது…
-
சிங்கப்பூர் நகைக் கடையில் வைரம் திருட்டு- இரண்டு இந்தியர்கள் கைது
சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல நகைக் கடையில், 4.95 கெரட் மதிப்புள்ள வைரத்தை திருடிவிட்டு, அதற்குப் பதிலாக போலி வைரத்தை மாற்றி வைத்துவிட்டுத் தப்பியோடிய இரு இந்திய சுற்றுலாப் பயணிகளை சிங்கப்பூர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த இருவரும் இந்தியாவுக்குச் செல்ல முயன்றபோது,சிங்கப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தேக நபரொருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.…
-
பிரதமர் இல்லம் முன் ராகுல் காந்தி அமைதிப் போராட்டம்
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியதைக் கண்டித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் முன்பாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், இளைஞர்கள் மீதான தாக்குதலுக்குப் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திப் போராட்டக்காரர்கள்…
-
சிறையில் உயிரைமாய்க்க முயன்ற கைதியால் பரபரப்பு
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றக் கைதிகள் கூட்டிற்குள் வைத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர், பிளேடால் தனது கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கடந்த வருடம் கைது செய்யப்பட்ட இவர், நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் வழக்குகளுக்கு ஆஜராகாமல் தலைமறைவாகியிருந்தார். இதனையடுத்து நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்குப் அமைய, கடந்த 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்துப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு…