Category: பிரதான செய்தி
-
அமெரிக்கர்களிடையே நிலவும் அதிக வரவேற்பு காரணமாகக் கனடியக் குடியுரிமைச் சான்றிதழ்களுக்கான (Canadian citizenship certificates) தேவையும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளன
கனடியக் குடியுரிமைச் சான்றிதழுக்காகக் காத்திருக்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 121,800-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான காத்திருப்பு காலம் 12 மாதங்களிலிருந்து 25 மாதங்களாக அதிகரித்துள்ளது. ‘லாஸ்ட் கனடியன்ஸ்’ (Lost Canadians) சட்டத் திருத்தத்தின் மூலம், கனடிய பாரம்பரியம் அல்லது பரம்பரையைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் குடியுரிமை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த சில மாதங்களில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் குடியுரிமைச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர். புதிதாக அங்கீகரிக்கப்பட்ட கனடியக் குடியுரிமைச் சான்றிதழ் பெற்றவர்களில் கிட்டத்தட்ட பாதியளவு நபர்கள்…
-
ஜெர்மன் விமானநிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருந்திய ட்ரோன்
கிழக்கு ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக்/ஹாலே (Leipzig/Halle) விமானநிலையத்தின் சரக்கு மண்டலத்தில், உக்ரைனிய சரக்கு விமானங்களுக்கு அருகே வெடிபொருள் மற்றும் வெடிதூண்டியுடன் கூடிய ட்ரோன் ஒன்றை ஊழியர் ஒருவர் கண்டெடுத்தார். உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்களை அனுப்பப் பயன்படும் முக்கிய நேட்டோ (NATO) தளமாக இவ்விமானநிலையம் செயல்படுகிறது. இத்தாக்குதல் தொழில்முறை ரீதியாகத் திட்டமிடப்பட்ட ஒரு “கலப்பின அச்சுறுத்தல்” (Hybrid threat) என ஜெர்மன் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில் உளவு பார்ப்பது, சதித்திட்டங்கள் மற்றும்…
-
Trump பெயரை சொல்லி ஏமாற்றுவேலை.. பிரிட்டன் பிரதமருக்கு கொடுக்கப்பட்ட அல்வா
பிரிட்டன் பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஆண்டி பர்ன்ஹாம் கடந்த ஜூலை மாதம் பதவியேற்றார். முந்தைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆட்சி பொறுப்புக்கு வந்த இரண்டே ஆண்டுகளில், பிரிட்டனில் பொருளாதார மந்தநிலை, கொள்கை முடிவுகளில் ஏற்பட்ட சறுக்கல்கள் மற்றும் சில சர்ச்சைக்குரிய நியமனங்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடனான உறவில் ஏற்பட்ட விரிசல் உள்ளிட்ட காரணங்களால் பின்னுக்கு தள்ளப்பட்டது. கெய்ர் ஸ்டார்மரின் செல்வாக்கு மக்களிடமும், அவரது சொந்தக் கட்சியினரிடமும் சரிந்த நிலையில் ராஜினாமா செய்தார். இந்தசூழலில் தான்…
-
India Model-ஐ follow செய்யும் டிரம்ப்!
அமெரிக்காவில் தேர்தலின்போது வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயமாக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் தேர்தல் முறையை உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளார். தனது ‘Truth Social’ பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், அமெரிக்காவில் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை இல்லாமலேயே தேர்தல் நடத்தப்படுவது குறித்து அமெரிக்க நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியதாகக் குறிப்பிட்டார். மேலும், தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் அமெரிக்காவில் அனைத்து வாக்காளர்களுக்கும் கட்டாய…
-
நாசா வரை எதிரொலித்த ‘முதலமைச்சர் விஜய்யின் கை சைகை’
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் சிறப்பு விழா நடைபெற்றது. இதில் நாசா (NASA) விண்வெளி நிலையத்தின் பிரபல விஞ்ஞானி மருத்துவர் டோன் தோமஸ் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வின் போது, நாசா விண்வெளி நிலையத்தின் சென்னை கிளை பிரதம நிறைவேற்று அதிகாரி காயம்பு இராமலிங்கம், தமிழக முதல்வர் விஜய் குறித்து மருத்துவர் டோன் தோமஸிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மருத்துவர் டோன் தோமஸ், தான் தமிழக முதல்வர் விஜய்யின்…
-
பலாலி காணி விடுவிப்பு போராட்டம் தொடர்பில் 5 பேருக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை
யாழ்ப்பாணம் பலாலியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி இடம்பெற்ற போராட்டத்தின் போது பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்தன் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக பலாலி காவல்துறையால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 16ஆம் திகதி, பலாலி பிரதான வீதியில் அமைந்துள்ள T சந்தியில், பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகர் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.…
-
கோயில் நகைகள் மாயம் – பிரதம குருவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை
கொழும்பு 02, கொம்பனி வீதியிலுள்ள கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.267000 இலட்சம் பெறுமதியான நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கோயிலின் பிரதம குருவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்தப் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோயிலுக்குச் சொந்தமான நகைகளை அடகு வைத்து, கொட்டாஞ்சேனை புதிய செட்டியார் வீதியில் காணியொன்றை கொள்வனவு செய்வதற்கு அந்தப்…
-
‘கஞ்சிப்பான இம்ரானின்’ நெருங்கிய உறவினர் கொலை – ஐவர் கைது
‘கஞ்சிப்பான இம்ரானின்’ நெருங்கிய உறவினராகக் கருதப்படும் 54 வயதுடைய மொஹமட் அஸ்மின் மொஹிதீன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10ஆம் திகதி மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை பகுதியில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 25…
-
தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பு
கூட்டுறவு வங்கிகளில் ரூ 75,000 ரூபாய் வரையிலான விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாகவும், ஒரு லட்சம் வரை பயிர் கடன் பெற்றவர்களுக்கு 75,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை தொடர்பான கூட்டத்தொடர் நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் நடைபெற்றது. இதில் பேரவை விதி எண் 110 கீழ் தமிழக முதலமைச்சர் விஜய் பயிர் கடன் தள்ளுபடி குறித்து தெரிவித்ததாவது, ”மக்கள்…
-
ஆண்டின் இறுதிக்குள் ‘எல் நினோ’ தீவிரமடைய 90% வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
நடப்பு ஆண்டில் நிலவும் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றம் ஆண்டின் இறுதிக்குள் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறுவதற்கு 90 சதவீத வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் பதிவான எல் நினோ நிகழ்வுகளை விட இது மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என கணிப்புகள் காட்டுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார். வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் வாழும் மக்களின் உடல் வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க…