Category: பிரதான செய்தி
-
தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனப் பிரதித் தலைவர் மீது தாக்குதல்
தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று பிற்பகல் (28) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட போதகர் செபஸ்டியன், திருச்சபையின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். இந்நிலையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த விசேட குழுவினரால், தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும் போதகர்களின்…
-
கொழும்பு துறைமுகத்தின் பாரிய வளர்ச்சி
2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் கொள்கலன் கையாளுதலில் 11.9 சதவீத வளர்ச்சியை கொழும்பு துறைமுகம் பதிவு செய்துள்ளது. இதன் மூலம், கொழும்பு துறைமுகம் (Port of Colombo) உலகின் முக்கிய கொள்கலன் துறைமுகங்களின் தரவரிசையில் 20வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அல்பலீனர் என்ற தரவுத்தளம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கொழும்பு துறைமுகம் 4,444,034 இருபது அடி சமமான அலகுகளை கையாண்டுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 3,972,053…
-
இந்தியா,கனடா இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் குறித்து வெளியான தகவல்
இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம்’ குறித்த பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிக்க இந்தியாவும் கனடாவும் விரும்புவதாக இருநாட்டு நிதி அமைச்சர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இருதரப்புப் பொருளாதார மற்றும் நிதிசார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக, 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் ‘விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம்’ (CEPA) தொடர்பான பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 8 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். தனது…
-
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் சாதனை!
கடந்த இரு நாட்களில் மாத்திரம் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பின் ஊடாக 12 கோடியே 45 இலட்சத்து 74,000 ரூபாய்க்கும் அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நாட்களிலும் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்திய மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 25 ஆயிரத்து 310 ஆகும். அதன்படி, கடந்த 26ஆம் திகதி 1,63,763 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதுடன், அன்றைய தினம் 6 கோடியே 40 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் அதிக வருவாய் கிடைத்துள்ளது.…
-
நீண்ட ஆயுளில் ஜப்பான் முதலிடம்
ஜப்பான் நாட்டில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. உலகிலேயே நீண்ட ஆயுட்காலம் கொண்ட மக்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழும் ஜப்பானில், இவ்வாறு அதிக எண்ணிக்கையிலானோர் நூறு வயதைக் கடந்து வாழ்வதற்கு இவர்கள் தொன்று தொட்டு பின்பற்றும் தனித்துவமான உணவு முறைகள் மற்றும் வளர்ச்சியடைந்த மருத்துவம் என்பன காரணமாக இருக்கின்றது. அந்தவகையில், அவர்களின் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, உடல் இயக்கம், சமூக உறவுகள் மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவை இதில் எந்த…
-
இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நேபாளம் மற்றும் திபெத் எல்லை பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் சீன எல்லைப் பகுதிக்கு அருகில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பனி மற்றும் பாறைகள் சரிந்து த்ரிசூலி ஆற்றில் விழுந்ததால் இந்த பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பலரும் அடித்துச் செல்லப்பட்டு பெருமளவிலான சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இத்தகைய…
-
பிரக்ஞானந்தாவின் வரலாற்றுச் சாதனை – முதல்வர் விஜய் வாழ்த்து
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். கிராண்ட் செஸ் டூர் 2026 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகத்தான வெற்றி, இளம் தலைமுறையினருக்குப் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிப்பதோடு, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளதுடன் உலக அரங்கில்…
-
உருக்குலைந்த நேபாளம்.. மண்ணில் புதைந்த சடலங்கள்.. தோண்டி எடுத்து நகையை திருடும் கும்பல்!
அழகு நிறைந்திருக்கும் இடத்தில்தான் ஆபத்தும் நிறைந்திருக்கும் என்று சொல்வார்கள். அப்படித்தான் தற்போது இமயமலைப் பகுதியில் இயற்கை கோரத் தாண்டவம் ஆடியுள்ளது. நேற்று முன்தினம் காலை சீன–நேபாள எல்லையையொட்டிய திபெத் பகுதியில், இமயமலையில் உள்ள பனிப்பாறை ஏரியில் உடைப்பு ஏற்பட்டதாகவும், அதனால் நேபாளத்தின் போதே கோஷி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பல மீட்டர் உயரத்திற்கு சேரும் சகதியுடன் பீய்ச்சி அடித்து பாய்ந்து வந்த பெருவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் நேபாளம், இந்தியா மற்றும் சீனாவின் மீட்புப்…
-
மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 60 குழந்தைகள் உயிரிழப்பு!
மேற்கு வங்க மாநிலம் மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே வாரத்தில் புதிதாகப் பிறந்த 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரே நாளில் 10 குழந்தைகள் இறந்துள்ளன. மஞ்சள் காமாலை, சுவாசக் கோளாறு மற்றும் இதய நோய்கள் காரணமாகவே உயிரிழப்புகள் நேரிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு அம்மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
21 ஆண்டுகளில் 469 உயிர்களை காப்பாற்றிய சீன மனிதர்
சீனாவில் உயிர்மைப்புக்கு முயற்சிக்கும் நபர்களைத் தடுப்பதற்காக கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக யாங்சே நதி பாலத்தில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் சென் சி என்ற நபர், இதுவரை 469 பேரை உயிரிழப்பிலிருந்து காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியாங்சு மாகாணத்தில் ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்த சென் சி, தனது இளமைப் பருவத்தில் வீடின்றி வாழ்ந்ததுடன் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். பின்னர் பழக்கடை ஒன்றை நடத்தி வாழ்க்கையை நிலைப்படுத்தியுள்ளார். 2000ஆம் ஆண்டு நான்ஜிங் யாங்சே நதி பாலத்தில் உயிர்மைப்புக்கு முயன்ற…