Category: உலக செய்திகள்
-
தனது 7 மாத குழந்தைக்காக சட்டப் போராட்டம் நடத்திய சிறுமி!
கைகளில் தனது 7 மாதக் குழந்தையை ஏந்தியபடி, கேமராவை நோக்கி மென்மையாகச் சிரித்துக்கொண்டிருக்கும் இந்தச் சிறுமியின் பெயர் ஜூய். அந்தப் புன்னகைக்குப் பின்னால், பலராலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வேதனையும் போராட்டமும் நிறைந்த வாழ்க்கைக் கதை மறைந்திருக்கிறது. ஜூய்க்கு தற்போது வெறும் 13 வயது மட்டுமே. ஆனால், அவரது கைகளில் இருக்கும் அந்தக் குழந்தை அவருடையது தான். இவ்வளவு இளம் வயதிலேயே தாய்மையின் பொறுப்பை ஏற்றதோடு, தனது குழந்தையை மீண்டும் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாட வேண்டிய…
-
செங்கடல் நுழைவாயிலில் மீண்டும் பதற்றம் ; எண்ணெய்க் கப்பல்கள் திசை மாற்றம்
செங்கடல் மற்றும் பாப் எல்-மந்தேப் (Bab el-Mandeb) நீரிணைப் பகுதியில் ஏமனின் ஹூதி (Houthi) கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபிய துறைமுகங்களுக்கு எதிராகக் கடல்வழி முற்றுகையை அறிவித்துள்ளதால், அப்பகுதியில் மீண்டும் கடுமையான பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சவுதி கச்சா எண்ணெயைச் சுமந்து செல்லும் பல பிரம்மாண்ட எண்ணெய்க் கப்பல்கள் தங்களது பயண வழிகளை பாப் எல்-மந்தேப் நீரிணையிலிருந்து திடீரென திசை திருப்பி வருகின்றன. உலகின் முக்கிய வர்த்தக கடல் பாதைகளில் ஒன்றான செங்கடலுக்கான நுழைவாயிலான பாப் அல்-மண்டப்…
-
திபெத்தில் எவரெஸ்ட் சிகரம் அருகே இந்திய எல்லையை கண்காணிக்க ட்ரோன் ஆராய்ச்சி மையம் அமைத்தது சீனா
எல்லைக் கண்காணிப்பு, பாதுகாப்பு, தளவாடங்கள் மற்றும் போக்குவரத்தை பலப்படுத்துவதற்காக, திபெத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை சீனா நிறுவியுள்ளது. சீனா, இந்திய எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில் ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. லடாக்கின் லே பகுதிக்கு அருகில் உள்ள ஹேட்டன் விமானப்படை தளத்தில் ஏழு ஜே-20 ரக போர் விமானங்களை நிறுத்தியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு அருகில் 4 ஜே-20 ரக போர் விமானங்களை நிறுத்தியுள்ளது செயற்கைக்கோள்…
-
2027 ‘எஸ்சிஓ’ மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) சுழற்சி முறை தலைமையின் அடிப்படையில், 2027-ம் ஆண்டுக்கான வருடாந்திர மாநாட்டை நடத்தும் பொறுப்பை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இந்த அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய 10 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில்இ இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, எஸ்சிஓ உச்சி மாநாட்டை நடத்தும் பொறுப்பை ஏற்கும் நாடு, அமைப்பின் அனைத்து…
-
கொங்கோவில் மீண்டும் தீவிரமடையும் எபோலா: 3,500 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; உலகின் 2-வது மிகப்பெரிய பேரழிவு என எச்சரிக்கை!
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் (Ebola virus) மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 3,532 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நாட்டின் தகவல் மற்றும் ஊடக அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் வரலாற்றிலேயே உலகின் 2-வது மிகப்பெரிய எபோலா பேரழிவாக இது பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் 2018 முதல் 2020 வரை கொங்கோவில் ஏற்பட்ட 10-வது எபோலா பரவலின் போது 3,470 பேர் பாதிக்கப்பட்டதே பதிவாக இருந்த நிலையில், தற்போதைய பரவல் அதைக்…
-
அர்ஜென்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி
அர்ஜென்டினாவின் லா ரியோஹா மாகாணத்தில் உள்ள மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதை அணைப்பதற்காக, மேற்கு சான் வான் மாகாணத்தில் இருந்து தீயணைப்புத்துறை ஹெலிகாப்டர் புறப்பட்டது. பெல் ரகத்தை சேர்ந்த அந்த ஹெலிகாப்டர், எதிர்பாராத விதமாக இஷிகுவாலாஸ்டோ பூங்கா அருகே விபத்துக்குள்ளானது. இதில் தீயணைப்பு வீரர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு பணியாளர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
2 மாதங்களாக பனியில் உறைந்த நபர் உயிருடன் வந்த அதிசயம்
ஒரு மனிதர் 2 மாதமாக பனிக்கு அடியில் புதைந்து கிடந்துள்ளார். ஒரு கிராம் சாப்பாடு கூட இல்லாத நிலையில் அவர் 2 மாதங்கள் கழித்து உயிருடன் திரும்பி மருத்துவர்களை திகைக்க வைத்துள்ளார். டிசம்பர் 2011-ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 44 வயதான பீட்டர் ஸ்கைல்பர்க் என்ற நபர், நாட்டின் கடுங்குளிர் நிறைந்த வடபகுதி வழியாகக் காரில் பயணித்தபோது திடீரென மாயமானார். உறைபனிக்குக் கீழே வெப்பநிலை சரிந்த நிலையில்,இ வாரக் கணக்கில் அவரைப் பற்றிய எந்தத் தகவலும்…
-
150 ஆண்டுகளுக்குப் பிறகு நூலகத்துக்கு திரும்பிய நூல்.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இரவல் எடுத்துச் செல்லப்பட்ட நூல் ஒன்று இறுதியாக நூலகத்துக்குத் திரும்பியுள்ளது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள கியாமா பொது நூலகத்தில் இந்த சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. 1858ஆம் ஆண்டு வெளியான ‘Antiquities of Athens’ என்ற நூல் கடந்த வாரம் நூலகத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. வீட்டைச் சீரமைக்கும் பணியின்போது மூடப்பட்டிருந்த நெருப்பிடத்தில் செங்கற்களுக்குள் மறைத்து வைக்கப்பட்ட தேயிலைப் பெட்டியில் அந்த நூல் கிடைத்ததாக அதைக் கண்டுபிடித்தவர் தெரிவித்தார். நூலகம்…
-
சக்கர நாற்காலியில் தவித்தவருக்கு உதவிய சிலந்தி மனிதன்
திரைப்படங்களில் சிலந்தி மனிதன் மக்களைக் காப்பாற்றுவார். ஆனால் அமெரிக்காவில் ஒருவர் உண்மையிலேயே அந்தக் கதாநாயகனாக மாறிய சம்பவம் இணையத்தில் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது. அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் (Arkansas) மாநிலத்தில் உள்ள ஜோன்ஸ்பரோ நகரில் அந்தச் சம்பவம் நடந்தது. சக்கர நாற்காலியில் சென்ற ஒருவர் சாலையின் 6 தடங்களைக் கடக்க முடியாமல் தவித்தார். அப்போது, சிவப்பு வாகனத்தில் போக்குவரத்து சமிக்ஞைக்காகக் காத்திருந்த ‘சிலந்தி மனிதன்’ திடீரென சாலையில் குதித்தார். அவர் 20 வயது கிறிஸ்டோஃபர் ஹெல்லன்தால் (Christopher…
-
‘FIFAவைப் புறக்கணிப்போம்’ – UEFA மிரட்டல்
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் தனியார் முதலீட்டுத் திட்டத்தை FIFA முன்னெடுத்தால் அதன் போட்டிகளைப் புறக்கணிக்கப் போவதாக UEFA எனும் ஐரோப்பியக் காற்பந்து நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது. தனது 55 உறுப்பு நாடுகளும் ஒருமனதாக அந்த முடிவை எடுத்திருப்பதாக UEFA கூறியது. உலகக் காற்பந்துப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியை ஒருபோதும் முதலீட்டுப் பொருளாகக் கருதக் கூடாது என்றும் UEFA வலியுறுத்தியது. வட,மத்திய அமெரிக்க நாடுகளை பிரதிநிதிக்கும் CONCACAF அமைப்பும் FIFA வின் தனியார் முதலீட்டுத் திட்டத்தை நிராகரித்துள்ளது.…