Category: உலக செய்திகள்

  • தென்கொரியாவில் இதுவரை இல்லாத வெப்பம்

    தென்கொரியாவில் இன்று (2 ஆகஸ்ட்) வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. யாங்சான் (Yangsan) நகரில் 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. தென்கொரியாவில் நூறாண்டுக்கு முன்பு வெப்பநிலைப் பதிவு தொடங்கியது முதல் இதுவே ஆக அதிக வெப்பம். யாங்சான் நகரம், தலைநகரிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அந்நகரில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக வெப்பம் 40 டிகிரி செல்சியசைக் கடந்திருக்கிறது. தென்கொரியாவின் பல நகரங்களில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்குமேல் உயர்ந்திருக்கிறது. இன்று 20க்கும் அதிகமான…

  • அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 03 பேர் உயிரிழப்பு

    அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் உள்ள ‘ட்வின் ஃபால்ஸ்’ நகரின் வணிக வளாகப் பகுதியில் சனிக்கிழமை (01) அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூட்டில், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வணிக வளாகப் பகுதியில் துப்பாக்கிதாரி திடீரெனத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் இந்த உயிரிழப்புகள் சம்பவித்துள்ளன. இத்தாக்குதலை நடத்திய துப்பாக்கிதாரியும் உயிரிழந்துவிட்டதாக ட்வின் ஃபால்ஸ் பொலிஸ் உயர் அதிகாரி மெத்யூ ஹிக்ஸ் அந்நாட்டு ஊடகவியலார்களிடம்…

  • உலகின் மிகப்பெரிய ஓர்கிட் மலர் பேராதனை தாவரவியல் பூங்காவில் பூத்துள்ளது

    உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் தாவரமாகக் கருதப்படும் இராட்சத ஓர்க்கிட் பூக்கள் பேராதனை தாவரவியல் பூங்காவில் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. கிராமட்டோபில்லம் ஸ்பீசியோசம் (Grammatophyllum speciosum) என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படும் இந்த இராட்சத ஓர்க்கிட் தாவரம், உலகின் மிகப்பெரிய அளவிலான ஓர்க்கிட் தாவரமாகப் பதிவாகியுள்ளதாகப் பேராதனை தாவரவியல் பூங்காவின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாகப் பேராதனை அரச தாவரவியல் பூங்காவின் ஓர்க்கிட் பிரிவுத் தலைவி இரோஷணி அந்த்ராதி தெரிவிக்கையில், ‘இந்த இராட்சத ஓர்க்கிட் தாவரத்தின் பூக்களைப் பேராதனைத்…

  • அவுஸ்திரேலியாவில் தடையை மீறும் சிறுவர்கள்

    அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை அமுலுக்கு வந்து 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும், 80 சதவீதத்திற்கும் அதிகமான சிறுவர்கள் இன்னும் சமூக ஊடகங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக அந்த நாட்டின் இணைய பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. சமூக ஊடக நிறுவனங்கள் முறையான வயது சரிபார்ப்பு முறைகளை நடைமுறைப்படுத்த தவறியதே இதற்கு காரணம் என வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி தடை விதிக்கப்படுவதற்கு முன்னர், கணக்கெடுப்பில் பங்கேற்ற…

  • பெருவில் சுற்றுலா வானூர்தி விபத்து – 13 பேர் உயிரிழப்பு

    பெருவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற Nazca Lines தொல்பொருள் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த சிறிய ரக சுற்றுலா வானூர்தியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் குறித்த வானூர்தியில் 11 பயணிகளும் 2 விமானிகளும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தாக்குதலை ஒத்திவைக்க ஈரான் கோரிக்கை – டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு

    ஈரானுக்கு எதிராக மிகப்பெரும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க அமெரிக்கா தயார் நிலையில் உள்ள போதிலும், முக்கிய உடன்படிக்கைகளுக்காக தாக்குதலைத் தற்காலிகமாக தாமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு மிகப்பாரிய அளவிலான இராணுவப் பலத்துடன் ஈரானை எதிர்கொள்ள அமெரிக்கா ஆயத்தமாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஈரான் மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து தாக்குதலை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கைகள் வந்துள்ளதாகக் கூறியுள்ளார். ஹோர்முஸ் நீரிணையை திறப்பது,அணுசக்தி அச்சுறுத்தலை…

  • அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

    அமெரிக்காவுடனான ஈரானின் அதிகரித்து வரும் பதற்ற நிலைமைகள் குறித்து, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கான் ஃபிடான் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார். அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் உத்தியோகபூர்வ சமூக ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, ‘அமெரிக்க இராணுவத்தின் எந்தவொரு சாகச நடவடிக்கைகளுக்கும்’ எதிராக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் தனது ‘தேசிய இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு’ ஆகியவற்றுக்கு பாதுகாப்பளிக்கத்…

  • ரஷ்ய உணவகத்தில் குண்டுவெடிப்பு – 3 பேர் பலி, 21 பேர் காயம்

    ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வெடிபொருள் வெடித்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு 21 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகரின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள குட்ரின்ஸ்காயா (Kudrinskaya) சதுக்கத்தில் உள்ள இத்தாலிய உணவகத்தில் அந்த நாட்டு உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெடிபொருட்களை ஏந்தி வந்த பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய முயன்றதாகவும், அவரைப்…

  • ஈரான் விமான நிறுவனத்துடன் தொடர்புடைய 6 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை

    ஈரானின் மகான் எயார் விமான நிறுவனத்துக்கு விற்பனை முகவர்களாகச் செயல்பட்டு வரும் இந்திய நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள், தனி நபர்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஈரானைச் சோ்ந்த மகான் எயார் விமான நிறுவனம், போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் தனது விமானங்களில் அந்த நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படைக்கு வீரர்களை ஏற்றிச் செல்லுதல், ஆயுதங்களைக் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட உதவிகளைச் செய்வதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து, அந்த விமான நிறுவனத்துக்கு உதவி செய்ததாகக் கூறி, இந்தியாவின் அதன் விற்பனை…

  • உக்ரைன் மீது ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல் – 9 பேர் உயிரிழப்பு

    உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததுடன், 28 பேர் காயமடைந்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ரஷ்யா–உக்ரைன் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில். இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றது. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்காத நிலையில், மோதல்கள் தொடர்கின்றன. இந்நிலையில்,…